இடுகைகள்

ஜெகன்மோகன்ரெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெலுங்குமொழியை தலித்துகள் காப்பாற்ற வேண்டியதில்லை!

படம்
தலித் மாணவர்கள்தான் தெலுங்கு மொழியை காப்பாற்ற வேண்டுமா என்ன? அண்மையில் ஆந்திர அரசு, தம் பள்ளிகளில் பயிற்று மொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவதாக அறிவித்தது. உடனே அதுதொடர்பான சர்ச்சைகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. இதற்காக கல்வி அமைச்சர் ஆதிமுலப்பு சுரேஷ் அவர்களை சந்தித்தோம். அனைத்து பள்ளிகளிலம் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்டுவந்தால் தெலுங்கு மொழி பாதிப்புக்கு உள்ளாகாதா? ஆந்திரத்தில் 98.5 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியையைப் படிக்கின்றனர். பதினொரு லட்சம் மாணவர்கள் சக்சஸ் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகளில்  ஆங்கில வழிக் கல்வியை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர கிராம பகுதிகளில் உள்ள பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆங்கில வழி கல்வியால் பயன்பெறுவார்கள்.  நாளை இவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கல்வி உதவ வேண்டுமே? தாய்மொழியான தெலுங்கு மொழி அழிக்கப்படுகிறது என்று விமர்சிப்பவர்களை நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. அதனைக் காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளை நாங்கள் வேறுவழிகளில் செய்வோம். இதற்கு பயந்து தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலத்தை ப