உரையாடல் - தோல் - அறிவியல் அறிவோம்



கோமாளிமேடை




மொழி - உரையாடுவோம்!




ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது.




பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது.




காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை மொழியைக் கற்றவர்கள், குறிப்பிட்ட செய்தியை சைகை மூலமே பகிர்வார்கள். பேச முடிந்த பிறர் கூட சைகை மொழியைக் கற்கலாம். பயிற்சி செய்யும்போது, வார்த்தைகளை உச்சரித்தாலும், பின்னாளில் அதை கையாள அவசியமில்லை. உதடுகளைப் பார்த்தே மாற்றுத்திறனாளிகள் புரிந்துகொள்வார்கள்.




சிறார்கள், தங்களின் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியாக இருப்பதைத் தெரிவிக்கிறார்கள். எம்பிக் குதிப்பது மற்றொரு வழி. ஒருவர் பேசுவதற்கு நம் தொண்டையிலுள்ள லாரிங்க்ஸ் என்ற பகுதி உதவுகிறது. ஒருவரின் குரல் வெளியாக நாக்கு, உதடு, பற்கள் உதவுகின்றன. பற்கள் இல்லாதபோது பேசும் மொழி, ஊனப்படுத்தப்பட்டதாக தெளிவில்லாத்தாக மாறுகிறது.




உரையாடுதல் என்பது மக்கள் கூடியுள்ள இடங்களில் அதிகம் நடைபெறுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் நன்றாக கவனித்தால் கிசுகிசுப்பு, சிரிப்பு, உரக்க கூவுவது,அலறல் என பல நாடக உரையாடல்கள் நடைபெறும்.




2




நீளமான போர்வை - தோல்




உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு தோல். தோல்,நமது உடலுக்குள் கிருமிகளை நுழைய விடாமல் தடுக்கிறது. ஆனால், தோல் விபத்தில் பாதிக்கப்படும்போது, எளிதாக நோய்த்தொற்று ஏற்படுகிறது.எனவே, மருத்துவர்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.




தோல் என்பது பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. இதில் கொழுப்பு கொண்ட அடுக்கு முக்கியமானது. வியர்வைச்சுரப்பி, உரோம துவாரங்கள்,நரம்பு முடிச்சுகள், ரத்த நாளங்கள் உண்டு. ரத்த நாளங்களை கேபிளரிஸ் என்று கூறலாம்.




வியர்வை வருவதை பலரும் அவமானமாக கருதுகிறார்கள். அப்படி வியர்வை வராதபோது,உடல் சூடாகி உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது அதைக் குறைக்க வியர்வை சுரப்பிகள் வேலை செய்கின்றன. ஒரு சிறிய நகம் போன்ற அளவில் உள்ள தோலில் 600 வியர்வை சுரப்பிகள் உண்டு.




விளையாடும்போது ஏற்படும் காயங்களால் தோல் பாதிக்கப்படுகிறது. கீறல், புண் ஏற்பட்டாலும் கூட ரத்தப் பெருக்கு சில நிமிடங்களில் நின்றுவிடும். இப்படி ரத்த உறைதல் நடக்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். சிலருக்கு மரபு நோயாக ரத்த உறையாமை இருக்கும். ரத்த உறைதல் நடைபெற்றால், கிருமி எளிதாக உடலுக்குள் உள்ளே வராமல் தடுக்க முடியும். ஆன்டிசெப்டிக் திரவங்களைப் பயன்படுத்தி காயத்தை கழுவிட்டு, துடைத்துவிட்டு மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். அவர் மேற்படி மருந்து போட்டு கட்டு கட்டலாம். உள்ளே உண்ணவும் மாத்திரைகளை வழங்கலாம். இதெல்லாம் காயத்தைப் பொறுத்ததே.




அனைத்து மனிதர்களுக்கும் கைரேகை மாறுபட்டிருக்கும். இதில் ஆர்ச்,லூப், வோர்ல் என மூன்று வகை உண்டு. கைரேகை என்பது ஒரு பொருளை வலுவாக பிடிக்க உதவுகிறது. இதை பல்வேறு நாட்டு அரசுகள் அடையாள ஆவணமாக கையாள்கிறது.




தோல் தடிமனாக இருப்பதால் நம்மால் வெயில், மழை, பனி ஆகியவற்றை தாங்கிக்கொள்ள முடிகிறது. தோலில் நேரடியாக நீர் ஊடுருவ முடியாது. ஆனால், அதன் இயல்பு என்னவோ அதை தோலின் வழியாக நாம் உணரலாம். எடு.வெந்நீர்,குளிர்ந்த நீர்.




நீச்சல் குளத்தில் குளிக்கும்போது,கை, கால்களில் தோல் சற்று சுருங்கியது போன்று தோன்றும். அப்படி ஆவது எதற்கு என யோசித்திருக்கிறீர்களா? அப்படி சுருங்குவது மூலம் கை,கால்களில் பிடிப்பு கூடுகிறது.




நன்றி

eyewonder human body







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!