தலைமுடி, தசைகள் பற்றி அறிவோம்!

 




கார்குழல் அழகியே...


அழகிகளைப் பற்றியல்ல. தலைமுடியைப் பற்றித்தான் இந்த குறுங்கட்டுரை. தலைமுடி, நகம் என இரண்டுமே கெராட்டின் என்ற வேதிப்பொருளால் உருவாகுபவை. அடிப்படையில், முடி, நகம் என இரண்டுமே அதன் வேர்ப்பகுதியில் மட்டும் உயிர்த்திசுக்களைக் கொண்டவை. எனவே,தான் முடியை வெட்டினாலோ, நகத்தை வெட்டினாலோ வலிப்பது கிடையாது. 


தலையில் மயிர்கள் அடர்த்தியாக உள்ளன. எந்தளவுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் தலைமயிர்கள் வளருகின்றன. உடல் முழுக்கவும் உரோமங்கள் வளருகின்றன. சிலரின் குடும்ப பாராம்பரியம் காரணமாக கூடுதலாக, குறைவாக உரோமங்கள் இருக்கலாம். 


சாதாரண நீளமுடி, சுருட்டை முடி என்பது ஒருவகையில் ஒருவரையொருவர் ஈர்க்கிறது. சாதாரணமாக முடி உள்ளவர்கள், முடியை நவீன சலூன் சமாச்சாரங்கள் கருவிகளைப் பயன்படுத்தி அதை சுருட்டையாக மாற்றுகிறார்கள். சுருட்டை முடி குழுவினர், முடியை நீளமாக மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி இப்படி, இப்படி அப்படி முறைதான். 


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தலையில் அரிப்பு ஏற்பட்டால், உடனே அங்கு என்ன பிரச்னை என பாருங்கள். ஈறும் பேனும் இருக்கலாம். அதை உடனே பேன் மருந்து வாங்கி போக்கிக்கொள்வது அவசியம். தலையில் ரத்தம் குடிக்கும் பேன்களால் குழந்தைகளுக்கு கவனக்குறைபாடு, ரத்தசோகை, வேறு வகையான தொற்று நோய்களும் ஏற்படலாம். 


பேன்கள் உயிர் வாழும் நான்கு வாரங்களில் 150 முட்டைகளை இடும். எனவே, நீளமான முடியுள்ளவர்களுக்கு விரைவில் ஈறும் பேனும் அதிகரிக்கும். கவனம். ஆணோ, பெண்ணோ முடியைக் குறைத்து வெட்டுவது பேன் பிரச்னைகளை குறைக்கும். 


நேராக வளரும் முடிக்கு அதன் வேர்ப்பகுதி வட்டமாகவும், சுருட்டை முடிக்கு வேர்ப்பகுதி நீள்வட்டமாகவும் இருப்பதே காரணம். 


கட்டழகு....


அதற்கு உதவுவது தசைகள். நமது முகத்தில் உள்ள தசைகள் மூலம் 10 ஆயிரம் வேறுபட்ட முகபாவனைகளை உருவாக்க முடியும். அத்தனை பாவனைகள் உண்டா என்பவர்கள், எமோஜியைப் பாருங்கள். அப்படியே பின்பற்றுங்கள். வந்துவிடும். 


தசைகள் வளருவதற்கு முக்கியமான உணவு, புரதம். இறைச்சி, முட்டை, பீன்ஸ், பருப்பு என சாப்பிடவேண்டும். இறைச்சியில் கோழி, ஆடு, மாடு, பன்றி என பல்வகை இறைச்சி உண்டு. உங்களுக்கு மலிவு விலையில் எது கிடைக்கிறதோ அதை வாங்கி உண்டு புரதம் பெருக்கி தசைகளை வலுவாக்கலாம். 


நடிகை ராஷ்மிகா அழகு போஸாக, கட்டழகு கையைக் காட்டுகிறார் அல்லவா, அப்படி கைகளை மடக்கி காட்டும்போது தசைகள் இறுக்கமாகின்றன. கடினமாகின்றன. அதை தளர்த்தும்போது தசைகள் நெகிழ்வுக்கு உள்ளாகி மென்மையாகின்றன. தசைகள் அனைத்துமே ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. 


தசைகள் மென்மையான நார்களால் உருவாக்கப்படுபவை. மெல்லியது என்றால் ஒற்றைத் தலைமுடியை விட மெலியது.மனிதர்களின் உடலில் 600 தசைகள் உண்டு. உங்கள் உடல் செய்யும் அனைத்து செயல்பாட்டிலும் தசைகளுக்கு பங்குண்டு. 

 

நன்றி

டிகே புக்ஸ்

photos - creative commons

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!