இடுகைகள்

ஒடிஷா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒடிஷா இளைஞர்களை முன்னுக்கு கொண்டு வந்த மனிதர்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  சுப்ரதோ பக்சி - கோ கிஸ் தி வேர்ல்ட் நூல் 16.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தத்திற்கு, வணக்கம். நலமாக உள்ளீர்களா? வீட்டில் உள்ளோரின் நலனைக் கேட்டதாக சொல்லுங்கள். இம்முறை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறை அமலாகி இருக்கிறது. எனவே, அனைத்து நாட்களும் ஆபீஸ் செல்வதில் விருப்பம் இல்லை. சில நாட்களில் வேலையை முடித்துவிட்டு உடனே எங்காவது பயணம் செய்வது என நினைத்துள்ளேன். பார்ப்போம். ‘தெருக்களே பள்ளிக்கூடம் என்ற மொழிபெயர்ப்பு நூலை ஆலிவர் அண்ணாவிடம் இரவல் வாங்கி வந்தேன். அதையும் இனி வாசிக்க வேண்டும். பஸ்சில் திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரும்போதே, அந்நூலில் 44 பக்கங்களைப் படித்துவிட்டேன். இந்த நூலின் தொடக்க தமிழ்மொழிபெயர்ப்பை நான்தான் செய்தேன். அந்த நூல் இலவச நூலாக ஃப்ரீதமிழ் இபுக்ஸில் உள்ளது. நூலின் மொழிபெயர்ப்புத் தரம் சரியானபடி கைகூடி வரவில்லை. புஷ்பா – தெலுங்குப்படம் பார்த்தேன். கொண்டாட்டமாக உள்ளது. தெலுங்கிலேயே பார்த்தேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கு நல்ல வருமானம் உள்ளது. தென்னிந்தியாவில் இப்போது ஓடிடியில் கூட வந்துவிட்டது. ஒடிஷாவில் பணியாற

குழம்பித்தவிக்கும் மனிதர்களின் மனக்கேணி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஒடிஷாவில் தமிழ் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது . இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார் . ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர் . இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன் . அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு . தனிநபர்களுக்கு கிடையாது . அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என ஓவியர் விரிவாகப் பேசினார் . உண்மையில் ரேடார் , சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை . அதை அரசு பழுதுபார்க்க முனையவில்லை . ஆ . வியில் ஆர் . பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது . தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன் . ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம் . தொடர் சிறப்பாக இருந்தது . தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார் . இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்த ஆண்டு உருப்படியாக ஏதேன

செஞ்சி கோட்டை ஏறிய வரலாற்று நிகழ்ச்சி! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  6.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது. இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார்.  ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர்.  இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன். அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. தனிநபர்களுக்கு கிடையாது. அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என விரிவாகப் பேசினார். உண்மையில் ரேடார், சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை.  ஆ.வியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது. தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன். ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் தெரிந்த அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம். தொடர் சிறப்பாக இருந்தது. தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த ஆண்டு உருப்படியாக ஏதேனும் ஒரு நூலை எழுத முயல வேண்டும். எங்கள் நாளிதழ் இனி எப்போது வெளிவரும் என்

காலக்கோடு வடிவில் திரௌபதி முர்மு வாழ்க்கை! - ஆசிரியர் பணி முதல் குடியரசுத்தலைவர் பணி வரை....

படம்
  பழங்குடி இன தலைவர் முதல் குடியரசுத்தலைவர் பயணம்! 1958 திரௌபதி முர்மு, ஒடிஷாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, நாராயண் பிராஞ்சி டுடூ, விவசாயி. 1979 ஒடிஷாவின் புவனேஷ்வரில் ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகத்தின் பி.ஏ. நிறைவு செய்தார். படிப்பை முடித்தவுடனே கௌரவ உதவி பேராசிரியராக ஸ்ரீஅரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகத்தில் பணியாற்றினார். 1980 ஒடிஷாவின் பகத்பூரைச் சேர்ந்த வங்கிப்பணியாளரான ஷியாம் சரண் முர்முவை மணந்தார்.  1983  நீர்பாசனம் மற்றும் மின்வாரியத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். 1997 ராய்ரங்பூர் நகர கவுன்சிலராக தேர்வு பெற்றார்.  2000 ஒடிஷா மாநில அரசில் வணிக போக்குவரத்துத் துறை அமைச்சராக (2000 மார்ச் 6 - 2000 ஆகஸ்ட் 6) நியமிக்கப்பட்டார்  2002 -2004 மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரானார் (2002 ஆகஸ்ட் 6 - 2004 மே 16)  2007 சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நீல்கந்தா விருது (Nilkantha award) பெற்றார்.  2009 முதல் மகன் லஷ்மண் உடல்நலக்குறைவால் காலமானார்.  2013 இரண்டாவது மகன் சிபுன், விபத்து காரணமாக காலமானார்.  2014 ஏற்கெனவே உடல் நலிவுற்றிருந

கல்வியால் பெண்களை முன்னேற்றுவதே லட்சியம் - சுதா வர்க்கீஸ்

படம்
  தீண்டப்படாத சாதி பெண்களை முன்னேற்றும் கல்வி! கேரளத்தில்  வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதா. பள்ளிமாணவியாக இருந்த போது சுதா,  நாளிதழ் ஒன்றில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தார்.  பீகாரின் சாலையோரத்தில் உள்ள குடிசையின் புகைப்படம் அது.  ஏழை மக்களின் குடியிருப்பு என பார்க்கும் யாரும் புரிந்துகொள்ளலாம். அந்த நொடியில் பள்ளி மாணவியான சுதா தீர்மானித்தார். நான் ஏழை மக்களின் நிலையை மாற்றுவேன் என உறுதியெடுத்துக்கொண்டார். பெற்றோர் ஏற்காதபோதும், சமூகசேவையைச் செய்ய கன்னியாஸ்த்ரீ வாழ்க்கையை ஏற்றார். பிறகு, இப்பணியில் திருப்தி இல்லாமல், தனது பணியை விட்டுவிலகினார். நேராக பீகாருக்குச் சென்றார்.  சிறுவயதில், அவர் புகைப்படத்தில் பார்த்த குடிசை, முசாகர் (Musahar)எனும் மக்களுக்குச் சொந்தமானது.  தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட, முசாகர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவும் கிடைக்கவில்லை. இச்சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவே, 2005ஆம் ஆண்டு ‘பிரேர்னா ’(Prerna)என்ற பெயரில் தானே பள்ளியைத் தொடங்கினார்.   சுதாவின் கல்வி உதவிகளால், 5 ஆயிரம் பெண் குழந்தைகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பீகாரில் முசாகர் இனப

இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பங்களித்த ஐந்து விஞ்ஞானிகள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நவீன இந்தியாவை உருவாக்கிய சாதனையாளர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பிரிவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஞ்ஞானிகளின் பட்டியலை ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ளது.  பெடங்காதாஸ் மொகன்டி, புவனேஸ்வர் நகரில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் டீன் மற்றும் பேராசிரியராக உள்ளார். இவர், இயற்பியலாளராக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது, கரும்பொருள் பற்றிய ஆராய்ச்சியாகும்.  ஜோதிர்ரஞ்சன் எஸ் ரே, நாகர்கன்டா என்று பகுதியில் பிறந்தவர். புவி அறிவியல் படிப்புகள் தொடர்பான தேசிய மையத்தில் இயக்குநராக உள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறார். இவர், பாறைகளின் வயதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை செய்து வருகிறார்.  விந்திய மலைத்தொடரின் வயதைக் கண்டுபிடிக்கும் புவியியல் ஆராய்ச்சியை செய்தவர் இவரே.  ஜோதிர்மயி தாஸ், ஐஏசிஎஸ் என்ற நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர், ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் பற்ற

உலகை ஆனந்தமாக முத்தமிடுவதற்கான வழி - கோ கிஸ் தி வேர்ல்ட் - சுபத்ரோ பக்ஷி

படம்
  சுபத்ரோ பக்ஷி கோ கிஸ் தி வேர்ல்ட் சுபத்ர பக்ஷி சுபத்ரோ பக்ஷி இப்போது ஒடிஷாவில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவராக இருக்கிறார்.இவர் தொடக்கத்தில் எப்படி பிறந்தார் வளர்ந்தார், அவரது ஆசை, லட்சியம் என்ன, அவற்றை நிறைவேற்ற எப்படி பாடுபட்டார் என்பதுதான் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம்.  சுபத்ரோ பக்ஷி தொழில்முனைவோர்களுக்கான நிறைய நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இது இரண்டாவது நூல். முதல் நூல் தொழில்முனைவோர்களுக்கானது.  சுபத்ரோ பக்ஷி நூல் முடியும்போது தெளிவாக சொல்லிவிடுகிறார். தொடக்கத்தில் எனது வாழ்க்கை ஏழ்மையில் இருந்தது போல பலருக்கும் தோன்றும். ஆனால் நான் ஏழ்மையில் வாழவில்லை. எளிமையாக இருந்தது எங்கள் வீடு என்கிறார். எனவே, நாளிதழ் போல ஏழ்மையில் மாணிக்கமாக மிளிர்ந்தார் என்று நாம் தலைப்பு டைப் செய்யவே முடியாது.  ஏனென்றால், சுபத்ரோவின் அப்பா, அரசு மாஜிஸ்டிரேட்டாக இருந்தவர். பின்னாளில், சில அரசியல் பழிவாங்குதலால் மேலதிகாரியால் பணிக்குறைப்பு செய்யப்பட்டார். அப்பாவைப் பற்றி கூறும்போது, அந்த விவரிப்புகள் பக்தி பூர்வாக அமைந்திருக்கின்றன. சுபத்ரோவின் பிற்கால வாழ்க்கையை தீர்மானித்ததில் அவரது அப்

உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஒருங்கே தரும் நூல்! - சிறகுக்குள் வானம் - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
சிறகுக்குள் வானம் ஆர். பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம். இந்த நூல் முழுக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கானது என்று தனது இரண்டாம் சுற்று நூலில் கூறியுள்ளார் நூல் ஆசிரியரான ஆர். பாலகிருஷ்ணன். இவர் ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேர்தல் ஆணைய பணிகளில் இவர் ஆற்றிய சாதனைகள் அதிகம். சிறகுக்குள் வானம் என்பது, முழுக்க ஆர். பாலகிருஷ்ணன் எப்படி அரசு அதிகாரி ஆனார். அவருக்கு உதவிய மனிதர்கள், ஏற்பட்ட சோதனைகள், அதனை அவர் எப்படி வென்றார் என்ற கதைகளை ஊக்கத்துடன் நமக்கு சொல்கிறது. கூடவே அவர் எழுதிய கவிதைகளும் அனைத்து பக்கங்களிலும் நமக்கு உற்சாகம் தருகின்றன. நூலில் தனக்கு பள்ளி கல்லூரிகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர்களை பின்னாளிலும் மறக்காமல் மரியாதை செய்வதை வாசிக்கும்போது ஆசிரியரின் எழுத்து மீது மரியாதை கூடுகிறது. பணியில் செய்யும் விஷயங்களைப் பொறுத்தவரை எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை தனிநபர்தான் தீர்மானிக்க வேண்டும். நூல் ஆசிரியர் கூடுதலாக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். தி எக்ஸ்ட்ரா மைல் என்பது முக்கியமான அத்தியாயம். ஒடிஷ

ஒடிஷாவில் அழிவைச் சந்தித்து வரும் கடலோர கிராமங்கள்! - கடல்மண் அரிப்பால் நேரும் பரிதாபம்!

படம்
                  ஒடிஷாவில் அழியும் கிராமங்கள் ஒடிஷாவில் உள்ள கேந்திர பாரா மாவட்டத்தில் கடற்புற பகுதியில் ஏழு கிராமங்கள் உள்ளன . இதில் மொத்தம் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர் . இங்கு மெல்ல கடல் மணல் உள்ளே புகுந்து வருவதால் , அங்குள்ள மக்கள் வேறிடம் நோக்கி நகர்ந்து வருகி்ன்றனர் . மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் அடிபம்பு கூட அரைப்பகுதி மணலால் மூடப்பட்டுவிட்டது . இங்குள்ள கால்நடை கொட்டில் , கோவிலைக் கூட கைவிட்டு மக்கள் வெளியேறத்தொடங்கிவிட்டனர் . மக்கள் கைவிட்ட அந்த கோவிலுக்கு வந்து போகும் ஒரே பார்வையாளர் பக்தர் பிரபுல்ல லெங்கா என்பவர்தான் . கடல்மண்ணில் ஏற்பட்ட அரிப்பால் , ஏழு கிராமங்களும் ஒடிஷா மாநில வரைபடத்தில் இருந்து விரைவில் காணாமல் போகவிருக்கிறது . 571 குடும்பங்களுக்கு வேறு இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது . பிஜூ புக்கா கர் யோஜனா எனும் திட்டத்தின்படி மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது . இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கேரளா , தமிழ்நாடு , கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களுக்கு கூலித்தொழிலாளிகளாக சென்று வேலை ச

முதல்வர் பதவி வகிக்கும் மன்னர் - நவீன் பட்நாயக்கின் வெற்றிக்கதை!

படம்
நவீன் பட்நாயக் பிஜூ ஜனதா தளத்தின் தலைவர். அதிகபட்சமாக பெண்களை தேர்தலில் பங்கேற்கச்செய்தவர். ஐந்தாவது முறையாக ஒடிஷாவின் முதல்வராக இருக்கையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். பிஜூ ஜனதா தளத்திற்கு எதிராக பாஜக சில இடங்களை வென்றுவந்தாலும், மன்னர் போல ஐந்து முறை ஒடிஷாவில் சாதித்தவர் என்பதற்காகவே இவரைப் பற்றி பேசுகிறோம். 72 வயதாகும் நவீனுக்குப் பிறகு கட்சி என்னாகும் என்ற கவலையும் பிறருக்கு உண்டு. ஆனால் மக்களுக்கான நலன்களே முக்கியம் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் நவீன் பட்நாயக். பஞ்சாயத்து தேர்தலில் கூட நின்று வென்றிராதவர், ஒரிய மொழி தெரியாதவர் என ஆச்சரியங்களோடு இருக்கிறார் இம்மாநில முதல்வர். 1960 களில் காங்கிரஸ் அரசு, ஒரிய மொழியை கட்டாய ஆட்சிமொழியாக மாற்றியது. ஆனாலும் நவீன் பட்நாயக் அதனை பெரிதாக தொடரவில்லை. காரணம் பழங்குடிகள் வாழும் தேசத்தில் ஒரியமொழியை கட்டாயமாக்கி என்ன பிரயோஜனம் என்று நினைத்ததுதான். அதனால், தமிழ், மராத்தி மொழிகள் போன்று பெரிய பெருமை ஒரியமொழிக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன நவீன் பட்நாயக் போன்ற தன்மையான தலைவர் ஒடிஷாவுக்கு கிடைத்திருக்கிறாரே  என மக்கள் சமாதான

மக்களுக்காக பணியாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை

படம்
நேர்காணல் நவீன் பட்நாயக், ஒடிஷா முதல்வர், ஒடிஷா.  இருபது ஆண்டுகளாக ஓடிஷாவை ஆண்டுவருகிறார் நவீன் பட்நாயக். பிற தலைவர்களைப் போல ஆக்ரோஷமான பேச்சு, சூறாவளிப் பிரசாரம் ஆகியவற்றை இவரிடம் பார்க்க முடியாது. தேர்தலில் எப்படி வெல்கிறார்? மக்கள் இவரை நம்புகிறார்கள். அவ்வளவுதான். இம்முறை தேர்தலில் வென்றால் ஐந்தாம் முறை முதல்வராகும் வாய்ப்புள்ளது. பிஜூ ஜனதா தளம் மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. வளர்ச்சி, மேம்பாடு, நலம் ஆகியவற்றை மட்டுமே நாங்கள் முன் வைக்கிறோம். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? பிஜூ பாபுவை மக்கள் விரும்பினார்கள். காரணம், மாநிலத்தில் அரசு சரியாக செயல்பட்டதுதான். ஒடிய மொழியில் சரளமாக பேசுபவரல்ல நீங்கள். மேலும் அமைதியாக வேலைசெய்பவரும் கூட. எப்படி மக்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள். நான் மக்களைப் புரிந்துகொள்கிறேன். மக்கள் என்னைப் புரிந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். இம்முறை தேர்தலில் மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் என்ன? சமூகத்திலுள்ள அனைத்து பிரிவினருக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், விவசாயிகளுக்கு காலியா என்ற திட்டத்தையும், கர