உலகை ஆனந்தமாக முத்தமிடுவதற்கான வழி - கோ கிஸ் தி வேர்ல்ட் - சுபத்ரோ பக்ஷி

 





சுபத்ரோ பக்ஷி





கோ கிஸ் தி வேர்ல்ட்

சுபத்ர பக்ஷி


சுபத்ரோ பக்ஷி இப்போது ஒடிஷாவில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவராக இருக்கிறார்.இவர் தொடக்கத்தில் எப்படி பிறந்தார் வளர்ந்தார், அவரது ஆசை, லட்சியம் என்ன, அவற்றை நிறைவேற்ற எப்படி பாடுபட்டார் என்பதுதான் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம். 

சுபத்ரோ பக்ஷி தொழில்முனைவோர்களுக்கான நிறைய நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இது இரண்டாவது நூல். முதல் நூல் தொழில்முனைவோர்களுக்கானது. 

சுபத்ரோ பக்ஷி நூல் முடியும்போது தெளிவாக சொல்லிவிடுகிறார். தொடக்கத்தில் எனது வாழ்க்கை ஏழ்மையில் இருந்தது போல பலருக்கும் தோன்றும். ஆனால் நான் ஏழ்மையில் வாழவில்லை. எளிமையாக இருந்தது எங்கள் வீடு என்கிறார். எனவே, நாளிதழ் போல ஏழ்மையில் மாணிக்கமாக மிளிர்ந்தார் என்று நாம் தலைப்பு டைப் செய்யவே முடியாது. 

ஏனென்றால், சுபத்ரோவின் அப்பா, அரசு மாஜிஸ்டிரேட்டாக இருந்தவர். பின்னாளில், சில அரசியல் பழிவாங்குதலால் மேலதிகாரியால் பணிக்குறைப்பு செய்யப்பட்டார். அப்பாவைப் பற்றி கூறும்போது, அந்த விவரிப்புகள் பக்தி பூர்வாக அமைந்திருக்கின்றன. சுபத்ரோவின் பிற்கால வாழ்க்கையை தீர்மானித்ததில் அவரது அப்பாவின் வாழ்க்கை முக்கியமானது. நேர்மையாக இருந்ததால் வாழ்க்கையில் நிறைய பணியிட மாற்றங்களை சந்தித்திருக்கிறார். எதையும் மறுக்கவில்லை என்பதால், அரசு வீடுகள் மாறிக்கொண்டே இருந்தது. 





நூலில் சுபத்ரோ தனது மனைவி பற்றிய விஷயங்களை பெரிதாக பேசவில்லை. அது நூலுக்கு அவசியமும் இல்லை. இவர்களது குடும்பத்தில் மொத்தம் நான்கு பிள்ளைகள். நால்வரின் வாழ்க்கையும் வெவ்வேறு விதமாக மாறிபோய்விட்டது. முதல் பையனா தாதமோனி அரசு தேர்வில் வெற்றிபெற்று ஆட்சியரானபிறகு, அவருடன் சுபத்ரோவின் வாழ்க்கை பயணித்தது. 

டிசிஎம் வேலையில் சேர்வது தொடங்கித்தான், தொழில் வாழ்க்கை முன்னேற்றம் தொடங்குகிறது. அங்கு சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் கலாசாரம் பற்றியும் பல்வேறு அறிவுரைகளைப் பெறுவதையும் சிறப்பாக பதிவு செய்துள்ளார். 

மைண்ட்ட்ரீ என்ற நிறுவனத்தை தொடங்குவது நூலில் முக்கியமான பகுதி. அதற்கு முன்னதாக, விப்ரோவில் பத்தாண்டுகள் பணியாற்றி பல்வேறு அடிப்படை விஷயங்களைக் கற்கிறார். முக்கியமாக மார்க்கெட்டிங் பற்றிய விஷயங்கள். அவர் கற்றுக்கொண்ட பல்வேறு விஷயங்களை பின்னாளில் தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். 

நூலை வாசித்து முடித்தபிறகு, மேலும் படிக்கவேண்டிய நூல்களின் பட்டியலையும் கொடுக்கிறார். இது ஒட்டுமொத்தமாக தொழில்முனைவோராக அல்லது பிற தொழிலில் இருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கவேண்டுமென சொல்வது போல உள்ளது. 

நூலின் இறுதியில் கொடுத்து இருக்கும் முக்கியமான அம்சங்கள், தொழிலில் அல்லது வேலை செய்யும் யாருக்குமே முக்கியமானது. 

இன்று மைண்ட்ட்ரீயை லார்சன் டூப்ரோ நிறுவனம் வாங்கிவிட்டது. இதற்கான லோகோவை உருவாக்கியது, செரிபிரல் பால்சி குறைபாடு கொண்ட மாணவர்கள் என்பது முக்கியமானது. 

லோகோவை உருவாக்கும் முயற்சிகளையும், குறைபாடு கொண்ட மாணவர்களின் சங்கத்திற்கான உதவிகள் பற்றியும் சுபத்ரோ பிரமாதமாக எழுதியுள்ளார். 

உலகை எதிர்கொள்ள.....

கோமாளிமேடை டீம் 


படம் - டைம்ஸ் ஆப் இந்தியா 




கருத்துகள்