இடுகைகள்

டெக் உலகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினசரி வாழ்க்கையில் பயன்படும் எளிமையான ஆப்கள் இவை!

படம்
  ஆப்கள் ஓட்டெர் வாய்ஸ் மீட்டிங் நோட்ஸ் இது ஒரு டிக்டேஷன் ஆப். எனவே யார் பேசினாலும் நீங்கள் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். நேர்காணல், ஆசிரியரின் உரைகள், சந்திப்புகள் என அனைத்தையும் ஆடியோ டூ எழுத்தாக கூட மாற்றிக்கொள்ளும் வசதியை தருகிறார்கள். கூகுள் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. மன்த்லி பட்ஜெட் பிளானர், டெய்லி எக்ஸ்பென்ஸ் டிராக்கர். தலைப்பில் சொல்லிவிட்டோமே அதுதான் விஷயம். நாயர் கடையில் டீ குடித்துவிட்டு மிச்ச சில்லறைக்கு சென்டர் பிரஷ் வாங்குவது வ்ரையில் அனைத்து விஷயங்களையும் இதில் பதிவு செய்து கணக்கு பார்த்து பட்ஜெட் போடலாம். ஆக்ட் ஆப் காட் என்று பழி சொல்லாதபடி கணக்கு வழக்குகளை சுத்தமாக கணக்கு போட்டு காட்டுகிறது இந்த ஆப். பிளே ஸ்டோர் கிராமர்லி ஆப் இலக்கணத்திற்கான உதவியாளர். நீங்கள் எழுதும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் சரியானபடி உள்ளதா என கண்டுபிடித்து பாலீஷ் போட்டு நம் மாண்பைக் காக்கிறது. நீங்கள் செய்யும் அசைன்மெண்டுகளில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்து சொல்லுகிறது. பிளே ஸ்டோர் ஆன்டி சோசியல் போன் அடிக்‌ஷன் நீங்கள் செய்யும் வேலைகளைக் கண்காணித்து உங்களை எச்சரிக்கிறது. இதனா

மினி ஆப் ஸ்டோரின் பின்னணி என்ன? - கூகுளை எதிர்க்க தயாராகி விட்ட பேடிஎம் நிறுவனம்

படம்
      கூகுள் தனது பிளே ஸ்டோரில் இடம்பெறும் ஆப்களுக்கு 30 சதவீதம் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தின் பின்னால் திரண்டுள்ளன. எனவே இவர்களை முன்வைத்து பேடிஎம் நிறுவனம், பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கியுள்ளது. மினி ஆப் ஸ்டோர் தொடங்குவதற்கு பேடிஎம்மிற்கு இன்னொரு வலுவான காரணமும் உண்டு. சில நாட்களுக்கு முன்னர்தான், அதிலுள்ள சூதாட்ட விளையாட்டு பற்றி கூகுளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட பேடிஎம் ஆப்பை தனது பட்டியலிலிருந்து விலக்கியது. மினி ஆப் ஸ்டோரை நீங்கள் பேடிஎம் ஆப் மூலம் அணுகி எதனையும் இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்த முடியும். இதிலும் ஆப்களை தேவை என்றால் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால் டெவலப்பர்களுக்கு மட்டும் ஆப்களை வாங்குவதற்கு இலவச சலுகை கொடுக்கிறார்கள். இப்போதே 300க்கும் மேற்பட்ட ஆப்கள் பேடிஎம்மில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரம் டெவலப்பர்களிடம் பேசி வருகிறது பேடிஎம் நிறுவனம். செப்டம்பர் 17 அன்று பேடிஎம் ஐபிஎல் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கியது. அதில் அதிகளவு பேடிஎம் ஆப்ப

காசு கொடுத்து வாங்கவேண்டிய ஆப்கள்

படம்
          காசு கொடுத்து வாங்கவேண்டிய ஆப்கள் ஃபேக் ஜிபிஎஸ் லொகேஷன் உங்கள் நண்பர்களின் தொல்லையைத் தவிர்த்து நிம்மதியாக எங்காவது சுற்றவோ, புத்தகம் படிக்கவோ விரும்பினால் இந்த ஆப்பை பயன்படுத்துங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் காண்பித்து உங்கள் தனிமையை மேலும் அழகாக்கும். ஷார்ட்கட் மேனேஜர் நீங்கள் பயன்படுத்தும் ஆப்களை தேடி விரல் நுனி தேய்த்துவிட்டதா? அதற்காக இந்த ஆப்பை துட்டு கொடுத்து வாங்கினால் தேவையான ஷார்ட்கட் உருவாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். உங்கள் புகைப்படம், தினசரி செய்யவேண்டிய டாஸ்க்குகள், இணையப் பக்கங்கள் என அனைத்தையும் நீங்கள் ஷார்ட்கட்டாக உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும.  

கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள்!

படம்
    கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள் கூகுள் புதுமையாக பல்வேறு சேவைகளை தொடங்கினாலும் பின்னாளில் அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாதபோது யோசிக்காமல் அதனை நிறுத்திவிடும். அதுபோல நின்றுபோன பல்வேறு சேவைகளை இப்போது பார்ப்போம். கூகுள் ஹேங்அவுட் 2013-2020 கூகுள் ஒரே மாதிரியான பல்வேறு சேவைகளை தொடங்குவதும் பின்னர் என்ன செய்வதென தெரியாமல் அதனை நிறுத்துவதும் புதிய வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் ஆலோ என்ற செய்தி சேவையை முதலில் நிறுத்தியது. பின்னர் ஹேங்அவுட் கிளாசிக் சேவையை தேவையில்லை என நிறுத்தியது. இத்தனைக்கும் இந்த ஆப்பை பல கோடிப்பேர் தங்களின் போன்களில் பயன்படுத்தி வந்தனர. இதற்கு பதிலாக கூகுள் மீட், அல்லது சாட் வசதியை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் இதுவும் வசதிகள் போதவில்லை என தோன்றினால் வாட்ஸ்அப் பக்கம் சென்றுவிடலாம். கூகுள் பிளே மியூசிக் 2011-2020 அனைத்து ஆண்ட்ராய்டுகளிலும் வேலை செய்கிறதோ இல்லையோ அப்டேட் கேட்கும் ஆப் இதுதான். ஆனால் இப்போது இந்த ஆப் யூடியூப் மியூசிக் ஆப் வந்துவிட்டலாம் மூடப்பட்டு விட்டது. இதனை பயன்படுத்தும் உறுப்பினர்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

டெக் டிரெண்ட்ஸ் - சூரியக்குளியல் போடவும் டைம் ஷெட்யூல் போட்டுக்கொள்ளலாம்

படம்
      cc         டெக் டிரெண்ட்ஸ் பயணம் புதிது! தெலுங்கில் பாலைய்யா கூட ப்ளூடூத் சூட்கேஸைப் படத்தில் பயன்படுத்திவிட்டார். இதைப்பற்றி வேறு நாம் என்ன சொல்ல? அழகிய மேல்தட்டு யுவதிகள் பவனிவரும் வெஸ்பா பைக்கை உருவாக்கி இத்தாலிய கம்பெனியான பியாஜியோ அவர்களுக்கு ஏற்றாற்போல சூட்கேஸ் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஏர்போர்ட் போனால் கூட அங்கிருக்கும் அடையாளங்களை புரிந்துகொண்டு உங்கள் பின்னால் செல்ல  நாய்க்குட்டி போல கூடவே வரும். சூரிய குளியல் போடுவது நல்லதுதான். ஆனால் புற ஊதாக்கதிர்கள் பாதித்தால் திராவிட நிறம் திகைக்கவைக்கும் நிறமாகிவிடும் ஆபத்து உண்டு. எனவே இதற்காக லோரியல் ஒரு சென்சாரை உருவாக்கியுள்ளது. இதனை நகத்தில் பொருத்திக்கொண்டு சொம்பை உருட்டி விட்டது போல சிரித்துக்கொண்டு கடலில் சன் பாத் எடுக்கலாம். வெளியிலின் அளவு அதிகமாகிவிட்டால், உடனே சென்சார் போனுக்கு தகவல் அனுப்பி, அலர்ட் கொடுத்து எந்திரிங்க மேடம் என்று செய்தி சொல்லுமாம். தோலில் பட்டாலே வெயில் கடுமையாக இருக்குதுன்னு தெரியுமே? ன்னு விவரமாக கேள்விகள் கேட்டு கமெண்ட் அடித்தாலும் அதை நாங்கள் காம்ளிமெண்டாகவே எடுத்துக்கொள்வோம். ஸ்மார்ட்போனில்

வருங்கால டெக் சாத்தியங்கள் என்ன?

படம்
    cc       எதிர்கால டெக் டிரெண்ட்ஸ்! விர்ச்சுவல் ரியாலிட்டி மேஜிக் லீப் என்ற நிறுவனம் சிஇஎஸ் நிகழ்வில் தன்னுடைய கண்டுபிடிப்பை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்படுத்தியது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு நூறு கோடி ரூபாய். மினி கணினியை கண்ணாடி போல அணிந்துகொண்டு செயல்படலாம் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதில் கேமராவில் ஒளி எப்படி செயல்படுமோ அப்படி அதே விதத்தில் இதிலும் செயல்படுகிறது. நிஜ உலகில் அனிமேஷன் பாத்திரங்கள் வந்தால் எப்படியிருக்ககும்? நீங்கள் கதையில் படித்த பாத்திரங்கள் அப்படி உருவாகி உங்கள் குளிர்சாதனப்பெட்டி அல்லது ஜன்னல் ஓரம் நிற்கும் மேஜிக் லீப் நிறுவனம் தனது கண்ணாடியின் விலை என்னவென்பதை இன்னும் சொல்லவில்லை. இது மட்டுமல்ல, ஹெச்டிசியின் விவே புரோ, லூக்ஸிட் விஆர், வூஸிக்ஸ் சிஸ்டம், எக்ஸ் 1- தேர்ட் ஐ என ஏராளமான விர்ச்சுவல் ரியாலிட்டி ஐட்டங்கள் சிஇஎஸ் விழாவில் காட்டப்பட்டன. இந்த தொழில்நுட்பம் விளையாட்டுகளை இன்னும் நிஜமாக விளையாடுவது சாத்தியமாக்கலாம். கிரிப்டோகரன்சி இன்று உலக நாடுகளின் மத்திய வங்கி அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் கூட பிட்காயின் வணிகம் இணையத்தில் சீரும் சி

ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் .......

படம்
    cc       தற்போது 50 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். 2100ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிக்கும். ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் என்னென்ன விஷயங்கள் மேம்படும் என்பதைப் பார்ப்போம். போக்குவரத்து நெரிசல் இப்போது சீனாவில் தெரு விளக்குகள் ஏறத்தாழ மக்களைக் கண்காணிக்கும் சென்சார்களைக் கொண்டுள்ளன. இதே பாணியில் நகரங்களில் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி ஆகியவற்றை பதிவு செய்து தலைமை கணினிக்கு அனுப்பும் வசதி உருவாகியிருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் யாரும் போன் செய்யாமலேயே உதவிகள் கிடைக்கும். போக்குவரத்து நெருக்கடிகளை விரைவில் தீர்க்க காவல்துறையினரும் அங்கு வருவார்கள் அல்லது அதனை தீர்க்க ரோபோக்கள் செயல்பாட்டுக்கு வரும். வண்டி நிறுத்தங்கள் வண்டி நிறுத்தங்கள் எங்கே உள்ளன என்பதை திறன்பேசி செயலி மூலம் அறிய முடியும். இதனால் இடத்தை தேடி அலையாமல் திறன்பேசி மூலமே இருந்த இடத்திலேயே அறியலாம். இதனை தெருவிளக்கில் பொருத்தப்பட்ட ரேடார்கள் கண்காணித்து இத்தகவலை திறன்பேசியிலுள்ள செயலிக்கு அனுப்புகிறது. மக்கள் சக்தி இதன் அர்த்தம் அவர்கள் நிறைய இடங்களில் போராட்டம்

எதிர்கால உலகம் எப்படியிருக்கும்!

படம்
      cc   எதிர்கால உலகம் எப்படியிருக்கும் ! மனிதர்களின் மனம் மாறுகிறதோ இல்லையோ தொழில்நுட்பம் 5 ஏராளமான மாற்றங்களைப் பெற்று வருகிறது . அப்படி மாற்றம் பெறவிருக்கிற சில விஷயங்களைப் பார்ப்போம் அலுவலகம் கலந்துரையாடல் சந்திப்பு சாதாரணமாகவே அலுவலக மேனேஜர் ஒன்றரை மணி நேரங்களுக்கு மீட்டிங் போட்டு தன்னுடைய பெண் படிக்கும் படிப்பு , அவளின் ஆர்வமான விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள் . இதே டெம்பிளேட் இப்போது ஜூம் மீட்டிங்கிற்கு மாறியுள்ளது . மற்றபடி வேறு மாற்றம் ஏதுமில்லை . ஆனால் எதிர்காலத்தில் இப்போது நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் ஹோலோகிராம் மீட்டிங்குகள் நடைபெறும் . இதில் நாம் வீட்டிலிருந்து பேசினால் போதும் . திரையில் பலருடனும் பேசுவது நம்முடைய ஹோலோகிராம் உருவமாக இருக்கும் . இப்போது பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ரோபோவை வைத்து சந்திப்புகளை திறம்பட நடத்த முயன்றுவருகின்றன . நமது உருவங்கள் 3 டி முறையில் இனி புராஜெக்டுகளை விளக்கிப் பேசும் நாள் வெகுதூரத்தில் இல்லை . வைஃபை பொதுமுடக்க காலத்தில் புத்தகம் இருந்தவர்கள் எப்படியோ சமாளித்து விட்டார்கள் . ஆன

டெக் உலகில் இது புதுசு!

படம்
மார்க்கெட்டுக்கு புதுசு ! HTC Desire 12 and HTC Desire 12+ உங்கள் போன் பெரியதாக , போல்ட்டான அழகில் அதுவும் பட்ஜெட்டுக்குள் வேண்டும் என்றால் ஹெச்டிசி டிஸையர் 12 உதவும் . 18:9 இன்ச் ஸ்க்ரீன் , 13 எம்பி கேமரா , கழற்றமுடியாத 2965 mAh பேட்டரி , 3 ஜிபி ராம் , ஆண்ட்ராய்ட் ஓரியோ என சுமார் என்று சொல்லமுடியாத தரத்தில் 157 கிராம் எடையில் விரைவில் ரிலீஸ் . Bose SoundSport ப்ளூடூத் வசதிகொண்ட போஸ் நிறுவனத்தின் அதி அழகான ஹெட்செட் இது . ஹெட்செட்டை கப்போர்ட்டில் வைத்து விட்டு மறந்துபோனாலும் போனிலுள்ள டைல் ஆப்பின் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் . da Vinci 3D Pen Cool கின்போ நிறுவனத்தின் பெருமைமிக்க புத்தம் புதிய 3 டி பென் டூல்தான் டாவின்சி . 3 டி முறையிலான நானோ பிரிண்டர் , இங்க்ஜெட் பிரிண்டர் Aio ஆகியவற்றையும் கம்பெனி விற்பனை செய்து வருகிறது .