கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள்!

 

 https://fossbytes.com/wp-content/uploads/2016/08/chrome-apps-killed.jpg

கூகுளில் மூடப்பட்ட பல்வேறு சேவைகள்

கூகுள் புதுமையாக பல்வேறு சேவைகளை தொடங்கினாலும் பின்னாளில் அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாதபோது யோசிக்காமல் அதனை நிறுத்திவிடும். அதுபோல நின்றுபோன பல்வேறு சேவைகளை இப்போது பார்ப்போம்.

கூகுள் ஹேங்அவுட்
2013-2020

கூகுள் ஒரே மாதிரியான பல்வேறு சேவைகளை தொடங்குவதும் பின்னர் என்ன செய்வதென தெரியாமல் அதனை நிறுத்துவதும் புதிய வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் ஆலோ என்ற செய்தி சேவையை முதலில் நிறுத்தியது. பின்னர் ஹேங்அவுட் கிளாசிக் சேவையை தேவையில்லை என நிறுத்தியது. இத்தனைக்கும் இந்த ஆப்பை பல கோடிப்பேர் தங்களின் போன்களில் பயன்படுத்தி வந்தனர. இதற்கு பதிலாக கூகுள் மீட், அல்லது சாட் வசதியை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் இதுவும் வசதிகள் போதவில்லை என தோன்றினால் வாட்ஸ்அப் பக்கம் சென்றுவிடலாம்.

கூகுள் பிளே மியூசிக்
2011-2020

அனைத்து ஆண்ட்ராய்டுகளிலும் வேலை செய்கிறதோ இல்லையோ அப்டேட் கேட்கும் ஆப் இதுதான். ஆனால் இப்போது இந்த ஆப் யூடியூப் மியூசிக் ஆப் வந்துவிட்டலாம் மூடப்பட்டு விட்டது. இதனை பயன்படுத்தும் உறுப்பினர்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 2020 முதல் யூடியூப் மியூசிக் இதற்கு பதிலாக இயங்கும். பிளே மியூசிக்கில் கேட்ட பாடல்களை அப்படியே புது ஆப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம்

கூகுள் க்ளவுட் பிரிண்ட்

2010 -2021

க்ளவுட் முறையில் பல்வேறு இடங்களிலிருந்து கூட பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும். பல்வேறு இடங்கள், பல்வேறு சாதனங்கள் என்பதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். குரோம் ஓஎஸ் க்ளவுட் முறையில் இயங்குவதால் பிரிண்ட் வசதியை அதில் இணைத்துவிட்டார்கள் எனவே தனியா கூகுள் க்ளவுட் பிரிண்ட் எதற்கு என மூடிவிட உத்தேசித்துள்ளனர்.


குரோம் ஆப்ஸ்

இதற்கும் எக்ஸ்டென்ஷன்களுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த ஆப்கள் கூகுள் குரோம் ஆப்பில் செயல்படுபவை. இதை பெரிதாக யாரும் ஆர்வமாக பயன்படுத்த முன்வரவில்லை. எனவே இந்த ஆப் 2022 முதல் காணாமல் போகவிருக்கிறது.

ஒன் டுடே
2013-2020

சேவை நோக்கம் கொண்ட ஆப். பணத்தை யாருக்காவது கொடுக்க நினைத்தால் அதை இந்த ஆப்பில் செலுத்தலாம். அந்த பணம் எப்படி சமூகத்திற்கு செலவிடப்பட்டது என்பதை கூகுள் சொல்லு்ம. இதற்கு பெரிய தேவை ஒன்றும் இல்லை. திங்கிக் ஆப் யூ போன்ற ஆப்கள் இதைவிட சிறப்பாக செயல்படுகின்றன.


web user








 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்