செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள்

 

 

ராபர்ட் ஹூக்


செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள்

ராபர்ட் ஹூக்

1635-1703  

கட்டுமானம், பழங்காலவியல், வானியல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி சாதனை படைத்தவர். இவர் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர். இவர் ஐசக் நியூட்டனின் கருத்துகளில் வேறுபாடு கொண்டவர்.

ஆன்டனி வான் லியூவென்ஹாக்

1632-1723

டச்சு நாட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, கூடவே ஆராய்ச்சியாளரும் கூட. கூடைகளை தயாரிப்பவரின் மகனாக இருந்தாலும்  ஆராய்ச்சி செய்யும் திறனால் நுண்ணுயிரிகளை காணும் நுண்ணோக்கிகளை உருவாக்கினார். ஒற்றை செல் உயிரிகளை அடையாளம் கண்டார்.

தியோடர் ஸ்வான்

1810-1882

ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளர். நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். இவர் தன் இளமைக் காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தார். நரம்பு மண்டலம், வளர்சிதை மாற்றம், செரிமானம் பற்றிய கண்டுபிடிப்புகளை செய்தார். பின்னாளில் இறையியலின் மீது கவனம் செலுத்தினார்.

கமில்லோ கோல்ஜி

1843-1926

இத்தாலிய மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர். நரம்பு மண்டலம் பற்றி ஆராய்ச்சி செய்தவர் பின்னர் அப்படியே மலேரியா ஆராய்ச்சிகளுக்கு வந்து சேர்ந்தார். இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு தான் பிறந்த ஊரின் பெயரை சூட்டினார்.

ஆல்பெர்ட் கிளாட்

1899-1983

1929ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார். பெல்ஜியத்தைச் சேர்ந்த செல் உயிரியலாளர்.  முதல் உலகப்போரில் உளவுத்துறையில் பணியாற்றினார். இதற்கு பரிசாக இவருக்கு முறையான கல்வி இல்லை என்றாலும் கூட மருத்துவப் பயிற்சி வழங்கப்பட்டது.

 
 பிபிசி 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்