நினைவுத்திறனை கூட்ட என்ன செய்யலாம்? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ
memory |
பதில் சொல்லுங்க ப்ரோ
வின்சென்ட் காபோ
விலங்குகளுக்கு மதம் உண்டா?
எந்த நாயும் இறைவனைத் தொழுவதில்லை. பிரார்தனை செய்வதில்லை. அதற்கு பதிலாக அவை மனிதர்களைத் தான் பார்க்கி்ன்றன. அன்பைக் கொடுத்தே அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றன. இறந்த யானைகளுக்கு யானைகள் மரியாதை செலுத்துவதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். தங்களுக்கு பிடித்தமாதிரி விஷயங்கள் நடக்கும்போது சிம்பன்சிகள் கூட மகிழ்ச்சி கூத்தாடுவது நடந்திருக்கிறது. ஆனால் அதனை சமயரீதியான சடங்கு என்று கூறமுடியாது. குழுவாக வாழும் அறிவில் சற்று கூடுதல் சமாச்சாரங்கள் கொண்டவை சில குறிப்பிட்ட செயல்களை தொடர்ச்சியாக மரபுரீதியாக செய்கின்றன.
நினைவுத்திறனைக் கூட்ட என்ன செய்யலாம்?
வைட்டமின் பி சத்துகளை நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணலாம். தானியங்கள், விதைகள், பீன்ஸ் ஆகிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால், உங்களுக்கு உள்ள நினைவுத்திறன் சார்ந்த பிரச்னைகளை பாதியாக குறைக்கலாம்.
தகவல்களை வாக்கியங்களாக கொண்டு பேசிப்பழகலாம். கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கு என்ன வகை கண்ணாடி என்பதை கிட்ட குழி தோண்டி தூரக்குவி என சொல்லிப் பழகுங்கள். விளையாட்டாக இதுபோல வாக்கியங்களை தகவல்கள் நிரம்பியாக உருவாக்கினால், எதுவும் உடனே மறந்து போகாது.
தினசரி செய்யவேண்டியவற்றை எழுதி வைத்துக்கொண்டு செய்தால் உங்களால் எதையும் இழக்கமுடியாது. மேலும் புதிதாக கற்கவும் இவை உதவும்.
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியவற்றை சிறு படங்களாக எடுத்து சுவரில் ஒட்டிக்கொண்டு அதனை என்ன என்று நினைவுபடுத்திக்கொண்டு நினைவுகளை அதோடு தொடர்புபடுத்திக்கொள்ளலாம்.
அலுவலகம் முடிந்து வந்ததும் பையைக் குறிப்பிட்ட இடத்தில் வைப்பது, சாவியை ஆணியில் மாட்டுவது ஆகியவற்றை குறிப்பிட்ட வரிசை முறையில் செய்தால், மறதி ஏற்படாது. உங்களுக்கு தன்னியல்பாக பொருட்கள் எங்கே இருக்கும் என தெரிந்துவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக