உலக அமைதிக்கான நோபல் பரிசு! - வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்ட அமைப்புக்கு கிடைத்துள்ளது
உலக அமைதிக்கான நோபல் பரிசை 28 ஆவது அமைப்பாக வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்டம் வென்றுள்ளது. பசியைத் தீர்ப்பதற்காக போராடி, போர் மற்றும் முரண்பாடுகள் சிக்கல்களை நிலவும் பகுதியை அமைதி நிலவச் செய்த பணிக்காக நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
1961ஆம்ஆ ண்டு அமெரிக்க அதிபர் வைட் ஐசன்ஹோவர், வேர்ல்ட் புட் புரோகிராம் திட்டத்தை தொடங்குவதற்கான ஆலோசனையை தெரிவித்தார். இந்த அமைப்பு தொடங்கியபிறகு ஈரானின் போயின் ஜாஹ்ரா நகரில் நடைபெற்ற நிலநடுக்க பாதிப்பில் 12 ஆயிரம் மக்கள் பலியாயினர். மேற்சொன்ன அமைப்பு அங்கு கோதுமை, சர்க்கரை, தேயிலை ஆகிய பொருட்களை டன் கணக்கில் அனுப்பி உதவியது. பின்னர், தாய்லாந்து, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் நிறைய உதவிகளை ஆபத்துகாலத்தில் செய்தது. 1963ஆம்ஆண்டு சூடானின் நியூபியன்ஸில் முதல் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியது. பின்னர், பள்ளிக்கான உணவு திட்டத்தை டோகோவில் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நாவின் முக்கியமான திட்டமாக வேர்ல்ட் புட் புரோகிராம் மாறியது. இத்தாலியின் ரோமில் இந்த திட்ட அமைப்பு செயல்படுகிறது. இதில் 36 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் இயக்குநர் ஐந்து ஆண்டுகளுக்கு திட்ட அமைப்பின் இயக்குநராக இருப்பார். இவரை ஐ.நாவின் உணவு, விவசாயத்துறை இயக்குநர், ஐ.நாவின் தலைவர் ஆகியோர் இணைந்து நியமிக்கிறார்கள்.
செயல்பாடுகள் என்ன
உலகளவில் வேர்ல்ட் புட் புரோகிராம் பசியைப் போக்கும் முக்கியமான திட்டம் ஆகும். 2012ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை 97 மில்லியன் மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது. இவர்கள், 88 நாடுகளைச் சேர்ந்தவர்கள். 91 நாடுகளிலிருந்து 4.4 டன்கள் உணவுப்பொருட்களை 1.7 பில்லியன் டாலர்கள் மதிப்பில் விலைக்கு பெற்றுள்ளது. இந்த அமைப்பிடம் 5600 டிரக்குகள் உள்ளன. 30 கப்பல்கள் உள்ளன. 100 விமானங்கள் உள்ளன. இதன்மூலம் உணவுத்தேவை எந்த நாட்டில் இருந்தாலும் அதனை தீர்க்க வேர்ல்ட் புட் புரோகிராம் திட்டம் மூலம் சாத்தியமாகிறது.
1963ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு இந்தியாவின் பொதுவிநியோக முறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்மொழிந்து வருகிறது. அன்னபூர்த்தி எனும் தானியங்களை தானியங்கி முறையில் பயனர் பெறும் வகையில் எந்திரம் ஒன்றை உருவாக்கியது. இதன்மூலம் ஒருவர், 1.3 நிமிடங்களில் 25 கிலோ தானியத்தை பெற முடியும். மதிய உணவுத்திட்டத்திற்கு 4,415 கிலோ அரசியை இந்திய அரசுக்கு வேர்ல்ட் புட் புரோகிராம் அமைப்பு வழங்கியது. இதன்மூலம் 3 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஹரிகிஷன் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக