வலைத்தளங்கள் புதுசு!

 

 

 

 

Filming In Yorkshire - Screen Yorkshire

 

வலைத்தளங்கள் புதுசு!


Filmedinyorkshire.co,uk


நிறைய படங்களில் வரும் இடங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருப்போம். ஆனால் அவை எங்கே இருக்கிறது என தெரியாமல் அலைவோம். அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே இந்த வலைத்தள முயற்சி. பிலிம்டுஇன்யார்க்ஷையர்வலைத்தளத்தில் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அந்த படத்தில் வரும் இடங்கள் எங்கே என சுட்டிக்காட்டப்படுகிறது. இதுவொரு ரசிக்கத்தக்கமுயற்சியாக உள்ளது.



faberchildrens.co.uk


இந்த வலைத்தளம் ஃபேபர் குழுமத்தின் முயற்சி. பெற்றோர், குழந்தைகள், ஆசிரியர்களுக்கான நூல்கள் இதில் கிடைக்கின்றன. குழந்தைகள் செய்யவேண்டிய பயிற்சிகளை இந்த வலைத்தளத்திலிருந்து பெறமுடியும். கதை வீடியோக்களாக பெற்று குழந்தைகளுக்கு உதவலாம். எழுத்தாளர்களை சமூகவலைத்தளம் வழியாக பின்பற்றலாம். அவர்களின் நூல்களை இங்கேயே வாங்கிப்படிக்கலாம். குழந்தைகளுக்கான ஐடியாக்கள் இருந்தாலும் தாராளமாக சொல்லலாம். அதற்கும் பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள்.


Wordsoflife.org..uk


12 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு எழுத்துக்கள், வார்த்தைகள் சார்ந்த பயிற்சிகளை இந்த வலைத்தளத்தில் வழங்குகிறார்கள். கற்றலில் குறைபாடு கொண்ட குழந்தைகளும் இதனைப் பயன்படுத்தலாம். மாதம் ஒரு தீமுடன் பயிற்சிகள் உள்ளன. வயதைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அதற்கேற்ப திரையில் பயிற்சிகள் விரிகின்றன.


Neweuropean.co.uk

தி நியூ யூரோப்பியன் என்ற வலைத்தளம், பிரெக்ஸிட் விவகாரத்தை ஆதரித்து உருவானது. 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செய்தி இணையத்தளம் இது. இதில் இங்கிலாந்து சார்ந்த செய்திகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் கூறவேண்டியதில்லை. மொபைலிலும் இத்தளத்தை எளிமையாக காண முடிகிறது.



microsoft.garage


மைக்ரோசாப்ட் வலைத்தளத்தில் காரேஜ் என்ற பக்கள் தனியாக உள்ளது. இங்கு புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள் முயற்சிகளை பதிவேற்றுகிறார்கள். இந்த முயற்சி ஊக்கமூட்டுவதாக உள்ளது. பெரும்பாலும் ஏஐ திறன் கொண்ட கணினி ஆப்கள், மொபைல் ஆப்கள் இதில் அதிகம் இடம்பெறுகின்றன.





கருத்துகள்