2020 ஆம் ஆண்டிற்கான மோசமான மால்வேர்கள்! - மால்வேர், ரான்சம்வேர், டிரோஜன் புரோகிராம்கள்

 

 

 

Bank Employee Gets Prison Time for Helping Dridex Malware Gang

 

 

 

Ryuk ransomware contains a bug which causes data loss

மோசமான மால்வேர்கள் 2020


எமோடெட்


பெரும்பாலும் இமெயில் மூலம் கணினிகளுக்கு பரவியது. இந்த மால்வேர் கணினியை பாதித்திருக்கிறது என்று கூட ஒருவர் கண்டுபிடிப்பது கடினம். அடிக்கடி கணினியில் ஆன்டிவைரஸ் அப்டேட் கேட்டால் உஷாராகிவிடுவது உத்தமம். இந்த மால்வேர், தகவல்திருட்டுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் கணினியில் பரவினால் அவரின் தொடர்பிலுள்ள அனைவருக்கும் அவரின் பெயரில் இமெயில்கள் பரவலாக செல்லும். அதை கிளிக் செய்தால் மால்வேர் செயல்படத்தொடங்கும்.


டிரைடெக்ஸ்


இது ஒரு டிரோஜன் புரோகிராம். பெரும்பாலும் ஒருவரின் வங்கித் தகவல்கள், பாஸ்வேர்டுகளை திருடுகிறது. 2014 முதல் கணினிகளை பாதித்து வரும் இந்த புரோகிராம் கணினியின் செயல்பாடுகளை கண்காணித்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்து பிற ஆபத்தான புரோகிராம்களை தரவிறக்கம் செய்துகொள்கிறது.

பெரும்பாலும் இமெயில் மூலம் பரவுகிறது. எமோடெட் நச்சு நிரல் மூலம் கூடுதலாக கணினிக்கு வருகிறது புரோகிராம் இது.


எக்காரணம் கொண்டும் இமெயிலில் வரு்ம் லிங்குகளை திறக்காதீர்கள்.


ரியுக்


டெத்நோட் எனும் ஜப்பானிய காமிக்ஸில் வரும் இறப்புக் கடவுளின் பெயர் இது. ரான்சம்வேர் வகையைச் சேர்ந்தது. வணிக நிறுவனங்களை குறிவைத்து தாக்கி அதன் கோப்புகளை என்கிரிப்ட் செய்துகொள்ளு்ம். பிறகு வரும் செய்தி, பணம் கேட்டு மிரலல் மட்டுமே. தரவில்லை என்றால் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளும் காலி. இந்த பாதிப்பிலிருந்து மீள்வது கடினம்.


எமோடேட், டிரிக்பாட் ஆகிய புரோகிராம்கள் மூலம்தான் பிற கணினிகளுக்கு பரவுகிறது. செயல்படத்தொடங்கியவுடன் ஆன்டிவைரஸ் புரோகிராம்களை நிறுத்திவிடும்.


கோப்புகளை பேக்அப் எடுத்துவைத்துக்கொள்வது நல்லது. ஆன்டி வைரஸ்களை அப்டேட் செய்துகொள்வது அதனினும் சிறப்பு.


ஜோக்கர் 

 

ManageEngine Blog


கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள ஆப் வழியாக பரவுகிறது. போனில் நுழைந்தவுடன் தேவையில்லாத ப்ரீமியம் சேவைகளை தானாகவே இயக்கி உரிமையாளரின் காசுக்கு வேட்டு வைக்கிறது. மேலும் கூடுதலான புரோகிராம்களை தானாகவே தரவிறக்கம் செய்கிறது.

கூகுள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆப்களை நீக்கினாலும் இவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.


ஆப்களின் ரிவ்யூக்களை படிக்காமல் ஆப்களை தரவிறக்கம் செய்யக்கூடாது. போன் பில்களை கவனமாக பரிசீலனை செய்வது முக்கியம். எந்த புதிய சேவைகளையும் தேவையின்றி பயன்படுத்தக்கூடாது.







கருத்துகள்