கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்! - மஜூ வர்க்கீஸ், ஜோபிடன் தேர்தல் பிரசார அதிகாரி
மஜூ வர்கீஸ்
ஜோ பைடன் அரசியல் கூட்டத்திற்கான செயல்பாட்டு அதிகாரி
நீங்கள் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடன் தேர்தல் பிரசாரத்தில் முதல் நாள் தொடங்கி கூடவே இருக்கிறீர்கள்?
பிப்ரவரி 2020 அன்று நாங்கள் ஐயோவா, நியூ ஹாம்ஸையர், அலபாமா ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். மிக கடினமான நாட்கள் அவை. மெல்ல நாங்கள் இதில் தேர்ந்து வருகிறோம். எங்களிடம் மிகச்சிறிய குழு உள்ளது. குறைவான வளங்கள்தான் உள்ளது. நாங்கள் பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளோம். ஜோவின் அனுபவங்கள், பிறருக்காக யோசித்து செயல்படும் தன்மை ஆகியவை முக்கியமாக என்னை ஈர்த்தவை. கோவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு நாம் இரங்குதலை செலுத்த வேண்டும்.
இந்திய அமெரிக்கராக செனட்டர் கமலா ஹாரிசை துணை அதிபராக நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். இந்த தேர்வு சரியா?
அது முக்கியமானதுதான். எங்களுக்கு ஏராளமான இமெயில்கள்,
போன் அழைப்புகள் இதுதொடர்பாக வந்துள்ளன. இந்தியர்கள் கமலா ஹாரிசுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதானது. அவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம், இந்தியர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது. அரசில் இந்தியர்கள் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ ஏன் இல்லை என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். ஜனநாயகப்பூர்வமான முறையில் அடுத்த தலைமுறை இந்தியர்கள் அமெரிக்க அரசியலில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஜோ பைடனின் குழுவில் இந்திய அமெரிக்கர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். இதன்காரணமாக அவர் வென்றால், அகதிகள் பற்றிய முடிவில் மாற்றம் ஏற்படுமா?
இம்முறையில் இந்திய அமெரிக்கர்கள் இடம்பெறுவது அமெரிக்க பன்மைத்துவத்திற்கு சான்று. முதல் தலைமுறை அமெரிக்கர்களாக இங்கு வந்தவர்கள் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நாங்கள் இம்முறையில் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றால் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒரு அகதியாக வாழ்ந்த அனுபவம் உங்கள் பார்வையை மற்றும் தொழில் வாழ்க்கையை மாற்றியுள்ளதா?
நான் பராக் ஒபாமாவுடன் 2015ஆம்ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளேன். டில்லி மாளிகைக்கு குடியரசு தின பரேடு அன்று அங்கு கலந்துகொண்டுள்ளேன். எனது குடும்பத்தினருக்கு நான் வெள்ளை மாளிகையை சுற்றிக்காட்டியுள்ளேன். இது கடின உழைப்பால் மட்டுமே நமக்கு சாத்தியமாகியுள்ளது. அகதியாக நான் பிறரையும் மதிக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டுள்ளேன். அகதிகள் கடுமையாக போராடித்தான் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதனை அவர்கள் பிறருக்கு கூறவேண்டும் என நினைப்பதில்லை. ஆனால் அப்படி கூறுவதன் வழியாக அவர்கள் மதிப்பு கொடுக்கும் விஷயங்களை பிறரும் புரிந்துகொள்ள முடியும்.
உங்கள் தந்தை பார்க்கின்சன் வியாதியால் பாதிக்கப்பட்டார் என்பதை டிவிட்டரில் பகிர்ந்து இருந்தீர்கள். ஜோ பைடன் வெற்றிபெற்றால் ஒபாமா கேர் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவாரா?
என் அப்பாவின் இறுதிக்காலத்தில் தாக்கிய பார்க்கின்சன்
வியாதியால் அவரால் சுயமாக எழுந்து கூட நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு காப்பீடு இருந்ததால், அதிக பிரச்னை இல்லை. அனைவருக்கும் இது கிடைப்பது கடினம். இந்நிலையில் ஒபாமா கேர் போன்ற திட்டங்களை ஒருவர் தடுத்து நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தப்பட்டாலும் அதற்கு எதிராக மக்கள் போராடுவது முக்கியம்.
தி வீக்
கருத்துகள்
கருத்துரையிடுக