இரண்டு முறை யோசித்துதான் கருத்தை சொல்லவேண்டியிருக்கிறது! - கொங்கனாசென் சர்மா

 

 

 

கொங்கனாசென் சர்மா

 

 

கொங்கனாசென் சர்மா

உங்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் எழுதியிருந்தீர்கள். அது உண்மைதானா?

நீங்களே சொல்லுங்கள். நான் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? டாலி என்ற பாத்திரம் எனக்கு அந்த குறையைப் போக்கிவிட்டது. டாலி கிட்டி அர்  வோ சமக்தே என்ற படத்தின் பாத்திரம் அது. ஆலங்கிரிதா ஶ்ரீவஸ்தவா, ஏக்தா கபூர் ஆகியோருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் நடப்பிலுள்ள சினிமாவைப் பின்பற்றவில்லையென்றால் உங்களுக்கு சரியான சம்பளம் கிடைக்காது.

நீங்கள் உங்களை ட்விட் செய்வதில் பாராட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் பதிவுகளில் அரசியல் சார்பு மற்றும் எதைப்பற்றியும் பயப்படாத தன்மை தெரிகிறது?
நான் இன்று ஒரு கருத்தைச் சொல்லும்போது இரண்டு முறை யோசித்துதான் சொல்கிறேன். நாட்டில் இன்று அந்தளவு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. ஒருவரின் கருத்தை பலர் ஏற்றுக்கொள்வது குறைந்துவிட்டது. பலரும் தங்கள் கருத்தை வெளியே சொல்லுவதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். எனவே எனக்கு பல்வேறு கருத்துகளை சொல்வதற்கு பதற்றமாக இருக்கிறது. ஆனால் சில கருத்துகளை உண்மையில் கூறவில்லை என்றால் என்னை நானே மதிக்கமாட்டேன்.

கோவிட் காலத்தில் ஏதேனும் நூல்களைப் படித்தீர்களா?

தாரா வெஸ்ட்ஓவர் எழுதிய எஜூகேட்டட், தயாரி ஜோன்ஸ்  எழுதிய  அமெரிக்கன் மேரேஜ் என்ற நாவல்களைப் படித்தேன். கடந்த ஆண்டு என்னுடைய தந்தை இறந்துபோனார். அப்போது படித்த ஜோன் டிடியனின், இயர் ஆப் மேஜிகல் திங்கிங் என்ற நூல் அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த காலத்தில் சமைக்க பழகினேன். இந்திய நாய் ஒன்றை எடுத்து வளர்த்து வருகிறேன்.

எ டெத் இன் தி கன்ஞ்(2016) என்ற படத்தை முன்னர் இயக்கினீர்கள். புதிய படம் இயக்கும் ஐடியா ஏதாவது இருக்கிறதா?

இப்போதைக்கு அந்தளவு பிரஷர் ஏற்றிக்கொள்ள நினைக்கவில்லை. ஏதாவது விஷயங்களை எழுத முயன்று வருகிறேன். கோவிட் காலம் அனைத்திற்கும் சவாலாக உள்ளது. சில பாத்திரங்களில் நடிக்கவே முயன்றுகொண்டு இருக்கிறேன்

சுகானி சிங்
இந்தியா டுடே
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்