சவுண்ட் பாரில் 3டி சவுண்ட் எப்படி உருவாகிறது?

 

 

How-to: Setup and Use Chromecast to stream your content ...

 

பதில் சொல்லுங்க ப்ரோ?

வின்சென்ட் காபோ

ஆம்பிளிஃபையர் எப்படி வேலை செய்கிறது?

லேப்டாப் அல்லது நேரடியான மைக்ரோபோன் ஆகியவற்றிலிருந்து ஒலியைப் பெற்று அதனை பெரிதாக்கி நகல் போல எடுத்து ஸ்பீக்கர்களுக்கு அனுப்புகிறது. ஒலியின் அளவு என்பது கிடைக்கும் அசல் ஒலியைப் பொறுத்து மாறுபாடுகள் ஏற்படும். ஆனால் மின்சாரத்தின் சக்தியைப் பெற்று ஒலியின் அளவை பெரிதாக்கும் பணியை செய்கிறது. இப்படி மாற்றப்படும் ஒலி ஸ்பீக்கரில் சரியாக கேட்கவும் மின்சாரம் அதற்கு செல்லும் அளவு முக்கியமானது.

ப்ளூடூத், குரோம்காஸ்ட், ஏர்பிளே, எது பெஸ்ட்?

ப்ளூடூத்தை நீங்கள் வயர்லெஸ் ஸ்பீக்கர்களில் இணைத்து பாடல்களை எளிதாக கேட்கலாம். ஆனால் குரோம்காஸ்ட் ஆப்பிள் ஏர்பிளே என்பது இயங்குவதற்கு வைஃப் இணைப்பு அவசியம். இதன்மூலமும் நீங்கள் பாடல்களை கேட்கலாம். இடைமுகமாக வைஃபை இருக்கும். தரமான இசையைக் கேட்க ப்ளூடுத் முறை சரிபட்டு வராது. இதற்கு நீங்கள் குரோம்காஸ்ட் உடன் இணைந்த வைஃபை ஸ்பீக்கர்களே சிறப்பாக இருக்கும். ப்ளூடூத்தை விட வைஃப் முறையில் ஸ்பீக்கர்களை வாங்கினால் பாடல்களை வெவ்வேறு ஸ்பீக்கர்களில் துள்ளலுடன் கேட்க முடியும்.

சவுண்ட் பாரில் 3டி சவுண்ட் எப்படி உருவாகிறது?

5.1, 7.1, என பல்வேறு சவுண்ட் அமைப்புகளை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். பல கிராமத்து வீடுகளில் பானைகளுக்குள் கூட ஸ்பீக்கர்களை வைத்து இசைப்புயல் உருவாக்கமுடியாத எஃபெக்டுகளை உருவாக்கியிருக்கி இருப்பார்கள். இதை புரிந்துகொள்ள இதன் அடிப்படையை முதலில் நாம் பார்ப்போம்.

திரைப்படத்தில் வரும் இசைகளை சவுண்ட் பார் பல்வேறு ஸ்பீக்கர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறது. இதனால் 3டி முறையில் ஒலியை எளிதாக உருவாக்க முடியும்.. மேலும் நாம் இருக்கும் அறையைப் பொறுத்தே 3டி சவுண்ட் எடுபடும். 5.1, 7.1 என்பது ஸ்பீக்கர்கள், சப் ஊபர்களின் எண்ணிக்கையைக் குறிப்பது. திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் சிறு ஒலியைக் கூட சவுண்ட் பாரிலுள்ள ஸ்பீக்கர்கள் தவறவிடுவதில்லை. எனவே இந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.

 

கருத்துகள்