மன்னருக்கு எதிராக ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மக்களின் போராட்டம் !

 

 

தாய்லாந்து போராட்டம்


தாய்லாந்தில் பல்வேறு மாதங்களாக ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர். அவரை்கள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் தாய்லாந்து போராட்டம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.


பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடு தாய்லாந்து. 70 மில்லியன்(1 மில்லியன் -10 லட்சம்) மக்கள் இம்மதம் தழுவியவர்கள். 1932 முதல் அரசியலமைப்புச்சட்டம் இங்கு அமலில் இருக்கிறது. ஆனால் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற கலகத்திற்கு பிறகு ராணுவத்தின் ஆட்சிதான் பெருமளவு அங்கு நடந்து வந்தது. 2001ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. அதுவரை பிரதமராக இருந்த பாபுலிச தலைவரான தக்‌ஷின் ஷின வத்ரா, ராணுவத்தினால் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இந்த விவகாரம் நடந்த ஆண்டு 2006.


இதுபோல ராணுவம் அங்கு நடந்துகொள்வது புதிதல்ல. 1976ஆம் ஆண்டு அக்.6 அன்று தாய்லாந்திலுள்ள தம்மசத் என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் ஜனநாயகப் போராட்டத்தை ராணுவம் கடுமையாக ஒடுக்கியது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் 90 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரம் பேர் கைதானார்கள்.


நடப்பு தாய்லாந்தில் ஆட்சியாளராக உள்ளவர், மகா வஜிராலாங்கோர்ன். இவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதல் முதல் மன்னராக உள்ளார். பிரதமர் சான் ஒச்சா, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் மூலம் ஆட்சிக்கு வந்தார். இவர் ஷினவத்ராவின் சகோதரியிடமிருந்து அரசு அதிகாரத்தைப் பறித்துக்கொண்டார். இவரை மன்னரும் ஏற்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சட்டப்படி சான் ஓச்சா இன்னும் அதிகாரம் செலுத்தி வருகிறார்.


கடந்த ஆண்டு ஃப்யூச்சர் பார்வேர்டு கட்சி கட்சி தடை செய்யப்பட்டு, அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தனாதோர்ன் ஜூவான்குருன்குருவாங்கிட் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இதை எதிர்த்து போராட்டம் நடத்த மக்கள் திரண்டனர். கடந்த ஆண்டில் தொடங்கிய போராட்டம் பெருந்தொற்று பிரச்னையால் சூடுபிடிக்கவில்லை. அதன்பிறகு ப்ரீ யூத் குரூப் என்ற இயக்கம், 2500 பேரை திரட்டி பாங்காக்கில் போராட்டம் நடத்திக்காட்டியது.


இவர்களின் கோரிக்கை. மன்னராட்சியை ஒழிப்பது, அரசியலமைப்புச்சட்டத்தை மாற்றுவது, பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்வது. இவைதான் போராட்டத்தின் முதன்மையான கோரிக்கைகள். பின்னாளில் இப்போராடத்தில் ஏராளமான அமைப்புகள் உள்ளே நுழைந்தன. எல்ஜிபிடி உரிமை, விமர்சகர்களை கைது செய்வது கூடாது என பல்வேறு கோரிக்கைகளை அமைப்புகள் முன் வைத்து போராடின. அரசியல் கட்சி தலைவரான பானுபோங் ஜோட்னோக் என்பவரும் அரசால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அங்கு சிவப்புச்சட்டை எனும் ஷின்வத்ரா ஆதரவாளர்கள், மஞ்சள் சட்டை எனும் மன்னர் ஆதரவாளர்கள் என இரு பிரிவினர் மட்டுமே உண்டு. ஆனால் இப்போது போராட்டக்காரர்கள் யாரும் இருபிரிவினரையும் குறிப்பிடாமல் மூன்று விரல்களை நீட்டி ஜனநாயக உரிமைகளை கேட்டுள்ளனர். இப்படி அரசு மற்றும் மன்னரை எதிர்த்து போராடினால் அங்குள்ள அரசியலமைப்புச் சட்டப்படி மூன்று முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.


தாய்லாந்து அரசு இதற்கு எதிராக எப்போதும் போல மூன்று பேருக்கும் மேல் யாரும் சந்தித்து பேசக்கூடாது, போராடக்கூடாது என நீரை பீய்ச்சி அடித்து போராட்டக்கார ர்களை விரட்டி வருகிறது. மேலும் அவசரநிலையை அறிவித்து போராடும் மக்களை கைது செய்து வருகிறது.


இணையத்தை தடைசெய்துள்ள அரசைப் பார்த்து இம்முறை மக்கள் பெரிதாக பயப்படாமல் போராடி வருகி்ன்றனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்

மெஹர் கில்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்