கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன?

 

பதில் சொல்லுங்க ப்ரோ?

தமிழக கடற்கரையோரத்தில் இறந்து கிடக்கும் கடல் ஆமைகள்

 

வின்சென்ட் காபோ

 

 

கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன?

அவை சூரியனின் இடத்தை மையமாக கொண்டு வாழ்கின்றன. அவற்றின் வாசனை நுகர்வுத்திறனும் அதிகம். இதனால் அவற்றால் அவை பிறந்த இடத்திற்கு கச்சிதமாக வந்து, இணை சேர்ந்து குஞ்சுகளை மணலில் பிறக்க ஏதுவான நிலையில் விட்டுவிட்டு செல்கின்றன. அப்படி பிறக்கும் குஞ்சுகள் பாதுகாப்பாக பிறந்த இடம் நினைவில் நிற்கும். எனவே, அவையும் அதே கடற்கரைக்கு முழு வளர்ச்சியடைந்த பிறகு வரும். இப்போது மின் விளக்குகளை அதிகம் எரிப்பதால், ஆமைகள் தடுமாறி வருகின்றன. இவற்றை காப்பாற்றவும் ஏராளமான அமைப்புகள் தோன்றியுள்ளன.

ஆமைகளின் இன்னொரு சிறப்பம்சம், அவற்றின் புவிஈர்ப்பு விசையை அறியும் தன்மை. மேக்னடோரிசப்ஷென் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். இதன்மூலம் சரியான இடத்தை ஆமைகள் சென்று சேர்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தூக்கம் நமக்குத் தேவையா?

நேரு நான்கு மணிநேரம்தான் தூங்கினார் என சிலர் ஊக்கமாக பேசுவார்கள். ஆழமான தூக்கம் வரும் நேரத்தை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், அந்த நேரம் மட்டுமே கூட தூங்கினால் போதும். ஆனால் அனைவருக்கும் இது பொருந்தாது. வளர்ச்சி ஹார்மோன்கள் வளர, உடல் செல்கள் இற்ந்து புதிதாக உருவாக, நோய்எதிர்ப்பு சக்தி என பல்வேறு விஷயங்களுக்கு தூக்கம் அத்தியாவசியம். மூளையிலுள்ள நச்சுகள் தூக்கத்தில் அழிகின்றன. நம்மால் உணர்ச்சிகளையும், நமது பழக்க வழக்கங்களையும் கட்டுப்படுத்தமுடியும் என்று 2013ஆம் ஆண்டு நியூயார்க்கின் ரோச்ஸ்டர் நகரில் செய்த ஆய்வில் தெரிய வந்தது. தூங்கி எழுந்ததும் உடல் உற்சாக இருப்பது அவசியம். அப்போதுதான் நன்றாக தூங்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்.

தூக்கத்தில் வரும் கனவு கூட நம் உணர்ச்சிகளை ஒழுங்கு செய்துகொள்ள உதவுகிறது.

எதிர்மறை செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவது ஏன்?

மாம்பலத்தில் டமார், மயிலாப்பூரில் குபீர் என லோட்டஸ் குழுமம் செய்தி வெளியிட்டு வென்றது எதிர்மறை விஷயங்களால்தான். இயல்பாகவே மக்களுக்கு நேர்மறை சமாச்சாரங்களை விட கள்ளக்காதல், வெட்டிக்கொலை, சரமாரி வெட்டு, கற்பழிப்பு ஆகிய விஷயங்களில் ஈடுபாடு அதிகம். அதனை அதிகமாக விரும்பி படிக்கிறார்கள். பார்க்கிறார்கள். டிவி வீடியோக்களில் அழுத்தமான உணர்ச்சிகளை பதிவு செய்யும் சண்டை, கூச்சல், குழப்பம், காவல்துறை அத்துமீறல், கட்சிதலைவர்களை அடித்து உதைப்பது, குண்டுகட்டாக தூக்குவது ஆகியவை கண்கள் விரிய மக்களால் பார்க்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு கனடாவில் செய்த ஆய்வுப்படி எதிர்மறை செய்திகளை மக்கள் அதிகம் படிக்க விரும்புகின்றனர். என்று கூறப்பட்டது. இதனால் நேர்மறை செய்திகளை அதிகம் பேர் படிப்பதில்லை என்று கூறமுடியது. ஒப்பீட்டளவில் இந்தியர்கள் அதிகளவு எதிர்மறை செய்திகளை விரும்புகின்றனர்.








 




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்