இயற்கைக்கு நெருக்கமாக வாழும் விலங்கு கொயேட்(சிறியவகை ஓநாய்)!

 

 

 

 

coyote

 

 

 

மொபி

விலங்குநல ஆர்வலர்!


நீங்கள் விலங்கு நல ஆர்வலராக உள்ளீர்கள். வீகன் உணவுப்பழக்கத்தையும் பிரசாரம் செய்கிறீர்கள் ஏன்?


எனக்கு ஒன்பது வயதாகும்போது விலங்குகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். அவற்றின் வாழிடம், வாழ்க்கை ஆகியவற்றை நாம் மதிக்கவேண்டும் என நினைத்தேன். எனவே, எனது உணவுப்பழக்கத்தை நான் மாற்றிக்கொண்டு வீகனாக மாறினேன்.


இயற்கையோடு ஒருவர் எப்படி இணைந்து வாழவேண்டுமென நினைக்கிறேன்?


இன்று காட்டிலிருந்து பல்வேறு வைரஸ்கள் பரவி வருவதாக செய்திகளில் கூறப்படுகின்றன. மனிதர்கள் சுயமாக காடுகளிலுள்ள விலங்குகளை பாதுகாக்க உறுதி எடுத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. இனியும் இதில் நாம் கவனமின்றி இருந்தால், ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதன் பொருள் நாம் காட்டு விலங்குகளோடு நெருங்கி வாழ்ந்தால் பயன்கள் கிடைக்கும் என்பதல்ல. அவைகளுக்கான இடத்தை நாம் பறிக்க கூடாது என்பதுதான்.


கொயோட்(சிறியவகைஓநாய்கள்) உங்களுக்கு பிடித்துப்போனதான் காரணம் என்ன?


சிறிய வகை ஓநாய்களை லாஸ் ஏஞ்சல்ஸில் நீங்கள் பார்க்கமுடியும். அவற்றின் சிறப்பு அதன் வசீகரத்தன்மைதான். நாயின் அளவில் இருந்தாலும் அது சிறப்பான விலங்கு வகை என்பதை யாருமே மறுக்க முடியாது. தன்னுடைய இயல்பில் எதையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்கின்றன.


இவ்வகை ஓநாய்கள் நகரங்களில் எப்படி வாழ்கின்றன?


அவை அப்படி வாழ்வதில் பிரச்னை என்ன? பொதுவாக நாம் வைத்திருக்கும் செல்லப்பிராணிகளை தாக்கி தின்பதை கூறுவார்ளள். அதைத்தவிர வேறு எதையும் புகாராக இந்த விலங்கு மீது கூறிவிட முடியாது.


ஓநாய்கள் ஊளையிடுவதை பற்றி மக்கள் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள்?


அது ஒருவித தகவல்தொடர்பு என்றுதான் கூறவேண்டும். ஓநாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடிய பிறகு இதுபோன்ற ஊளையிடும் ஒலியை எழுப்புகின்றன. அப்போது அது மக்களுக்கு பயம் கொடுக்கும் ஒலியாக மாறுகிறது. ஆனால் அந்த விலங்கின் கலாசாரம், உலகம் அப்படித்தான் இருக்கிறது.


கிராமே கிரீன்

பிபிசி வைல்ட் லைப்



கருத்துகள்