அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள்! முன்னிலை வகிக்கும் அலிபாபா!
அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள் இவை
சாப்ட் பேங்
டோக்கியோ ஜப்பான்
89.7 பில்லியன்
ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க் பெரும்பாலும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்து வெற்றி பெற்றுவருகிறது. உபர், பைட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளது. முதலீட்டு விஷயங்களை விஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த முயன்று வருகிறது.லாபம் வராத வீவொர்க் நிறுவனத்திற்கான முதலீட்டை முட்டாள்தனதானது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார் இதன் சிஇஓவான மசோயாஷி சன்.
டிசிஎஸ்
100. 7 பில்லியன்
மும்பை, இந்தியா
இந்த நிறுவனத்தை டாடா குழுமம் இயக்குகிறது. இந்த குழுமம் உப்பு, உரம், இரும்பு, வேதிப்பொருட்கள், வாகனங்கள் என பல்துறை சார்ந்தும் இயங்குகிறது. கோவிட் -19 சார்ந்து பல்வேற செயல்பாடுகளை அரசுடன் இணைந்து செய்துள்ளது டாடா.
ஏஎஸ்எம்எல் ஹோல்டிங்
124.5 பில்லியன் டாலர்
வெல்தோவன், நெதர்லாந்து
பெரு நிறுவனங்களின் பட்டியலில் உள்ள டச்சு நிறுவனம் இது ஒன்றுதான். மென்பொருள், வன்பொருள் ஆகிய நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
மெட்ரானிக்
130.8 பில்லியன் டாலர்கள்
டப்ளின், அயர்லாந்து
2015ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம்தான். பின்னர், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோவிடியன் நிறுவனம் இதனை வாங்கிவிட்டது. மருத்துவ பொருட்களை தயாரிக்கிறது மெட்ரானிக். இதன் தயாரிப்புகளில் கிரானியல் ரோபோட்டிக்ஸ், இன்சுலின் பம்ப்ஸ், நோயாளியை கண்காணிக்கும் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறது.
சாப்
142.4 பில்லியன் வால்டோர்ப், ஜெர்மனி
அமெரிக்க நிறுவனமான ஐபிஎம்மோடு கூட்டணி கொண்டுள்ள மென்பொருள் நிறுவனம். வணிகம் தொடர்பான பல்வேறு சேவைகளை சாப் நிறுவனம் வழங்கி வருகிறது. ஐபிஎம்மில் பணியாற்றிய ஐந்து முன்னாள் பணியாளர்கள்தான் இதனை உருவாக்கினர்.
சீனா மொபைல்
164.9 பில்லியன் ஹாங்காங்
ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனம். உலகின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனம் இது. சீனாவிலும் ஹாங்காங்கிலும் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இங்கிலாந்திலுள்ள சீன மாணவர்களுக்கென விர்ச்சுவல் நெட்வொர்க் ஒன்றை தொடங்கியது.இதில் இலவசமாக குரல்வழி அழைப்புகளை செய்துகொள்ளலாம்.
தைவான் செமிகண்டக்டர்
265.5 பில்லியன் சின்ச்சு, தைவான்
இந்திறுவனம் செமி கண்டக்டர்கள் தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்நிறுவனத்திற்கு ஏஎம்டி, என்விடியோ ஆப்பிள், க்வால்காம் ஆகியோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
சாம்சங்
278. 7 பில்லியன்
சியோல் தென்கொரியா
ரெப்ரிஜிரேட்டர் முதல் போன்கள் வரை தயாரிக்கும் குடு்ம்ப நிறுவனம். இந்த நிறுவனம் பெரு தொழில்கள் உட்பட தீம் பார்க்குகள் வரையிலான பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் போன்கள், 5 ஜி தொழில்நுட்பம், ஆச்சரியப்படுத்தும் போன் திரைகள் என சீன நிறுவனங்களோடு போட்டிபோட்டு செயல்பட்டு வருகிறது.
டென்சென்ட்
509.7 பில்லியன், சென்ஸென், சீனா
கணினி விளையாட்டுகள், திரைப்படங்கள் என டென்சென்ட் தொட்டதெல்லாம் பொன்தான். அலிபாபா நிறுவனத்தை அடுத்து மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இதன் நிறுவனர் போனி மா. சீனாவின் சூப்பர் ஆப்பான வீசாட் , ரியாட் கேம்ஸ், ஜேடி வலைதளத்தின் பங்குகள் ஆகியவற்றை வைத்துள்ள நிறுவனம் இது.
அலிபாபா
545.4 பில்லியன் ஹாங்சூ, சீனா
சீனாவின் புகழ்பெற்ற இவணிக வலைத்தளம்தான் அலிபாபா. இதன் வணிகம் பலதரப்பட்டது. டென்சென்ட்போலவே பல்வேறு துறைகளில் முதலீடு செய்துவருகிறது. 2019ஆம்ஆண்டு பிளாக் பிரைடே நாளில் 38.4 பில்லியன் அளவுக்கு வருமானம் ஈட்டியது மிகப்பெரும் சாதனை. செயற்கை நுண்ணறிவு, பத்திரிகை, பல்வேறு வலைத்தளங்கள், பணப்பரிமாற்ற சேவை என இயங்கும் அனைத்து துறைகளிலும் வெற்றியை குவித்து வருகிறது அலிபாபா.
technology news
கருத்துகள்
கருத்துரையிடுக