இடுகைகள்

இறுதியாத்திரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறுதியாத்திரை அனுபவத்தில் அப்பாவின் நினைவுகள்! - கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்றுதான் இங்கு வெயில் லேசாக அடிக்கிறது. விரைவில் சென்னை ஆபீசுக்கு வேலைக்கு வரச்சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.  அறையில் தங்கவில்லை என்றாலும் வாடகையை மாதம்தோறும் கொடுத்து வருகிறேன். அறையைத் தக்க வைக்க வேறு வழியில்லை. எம்.டி. வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலைப் படித்தேன். 130 பக்கம் கொண்ட நாவல் இது. புற்றுநோயால் இறந்துபோன அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு வரும் நான்கு மகன்களைப் பற்றிய கதை. நான்கு மகன்களின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு, அப்படி எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிறார் ஆசிரியர்.  கேரளம், இலங்கை என பயணிக்கும் கதையில் அனைத்து இடங்களையும் சிறப்பாக அனுபவித்து உணரும்படி எழுதியிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளரான சைலஜாதான். பொருளாதாரத்தில் முக்கியமான வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பான நூலில் இன்னும் நூறு பக்கங்கள் மிச்சமுள்ளன.  அம்பேத்கரின் இந்துமத தத்துவம் என்ற நூலை எடிட்டர் கே.என்.சிவராமன் பரிசாக வழங்கினார். அதன் இரு பகுதிகளைப் படித்துள்ளேன். இன

இறந்துபோன அப்பாவை நினைவுகூரும் நான்கு மகன்களின் நினைவுக்குறிப்புகள்! - இறுதி யாத்திரை - எம்.டி. வாசுதேவன் நாயர்

படம்
                  இறுதியாத்திரை எம் . டி . வாசுதேவன் நாயர் கேரளத்தில் சிறிய கிராமத்தில் வேலை செய்து வரும் ஒருவர் , திருமணம் முடிக்கிறார் . தனது வியாபாரம் சார்ந்து இலங்கை வரை செல்கிறார் . அங்கும் சென்று தொழில் செய்து முன்னேறுகிறார் . அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறக்கின்றனர் . அதோடு அவருக்கு இலங்கையிலும் மனைவி , மகள் உண்டு . இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுகிறார் . அவரது பிள்ளைகளுக்கு இறப்புச்செய்தி சொல்லப்பட்டு விட நால்வரும் அப்பா பற்றிய நினைவுகளுடன் கிராமத்திற்கு வந்து சேர்கின்றனர் . இதில் அப்பு , குட்டேட்டன் , ராஜேட்டன் , உண்ணி ஆகியோர் தங்கள் தந்தை பற்றிய நினைவுகூர்தலே 130 பக்க நாவல் . தந்தை பற்றிய தகவல்கள் அனைத்துமே மகன்களின் நினைவுப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது . எதுவுமே நேரடியாக கூறப்படுவதில்லை என்பதுதான் நாவலின் முக்கியமான சிறப்பம்சம் . பல்வேறு நினைவுக்குறிப்புகளை நினைத்தால் அவர்களது தந்தை பற்றிய சித்திரம் உருவாகிறது . அம்மா இறந்துபோனதற்கு அவர் ஏன் அழவில்லை . மகனுக்கு இலங்கையில் ஏன் வேலை வாங்கித்தரவில்லை , ஒரு ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் போல பிறருக