இடுகைகள்

உயர்நீதிமன்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேல் முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என சொல்லும் மத்திய அரசின் புதிய சீர்திருத்தம்! - ட்ரிப்பியூனல் அமைப்பு கலைக்கப்படுகிறது

படம்
                காணாமல் போகும் ட்ரிப்யூனல் மத்திய அரசு , தற்போது புதிய சீர்திருத்தமாக திரைப்படங்களை மேல் முறையீட்டிற்கு அனுப்பும் ட்ரிப்பியூனலை கலைத்துள்ளது . இதனால் சர்ச்சைக்குரிய மையப்பொருளைக் கொண்ட படங்கள் உயர்நீதிமன்றத்தில் தங்கள் படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற வேண்டியிருக்கும் . 1983 ஆம் ஆண்டு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952 படி ட்ரிப்பியூனல் அமைக்கப்பட்டது . இதில் தலைவர் உட்பட ஐந்து பேர் இருப்பார்கள் . இவர்களை உறுப்பினர்களாக கருதலாம் . கூடுதலாக ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலரும் இருப்பார் . மத்திய தணிக்கை வாரியத்தின் கருத்திற்கு எதிராக திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் ட்ரிப்பியூனில் தங்கள் படங்களின் திருத்தங்களுக்கு எதிராக முறையிட்டு நீதி பெறலாம் . மத்திய தணிக்கை வாரியத்தில் தலைவர் தவிர்த்து 23 உறுப்பினர்கள் இருப்பார்கள் . இவர்கள் படங்களைப் பார்த்து திருத்தங்களை கூறி அதற்கான பல்வேறு சான்றிதழ்களை வழங்குவார்கள் . யு , யு / ஏ , ஏ என பல்வேறு வித சான்றிதழ்களை வழங்குவார்கள் . ஏ சான்றிதழ் பெற்ற படங்களை டிவியில் ஒளிபரப்புவது கடினம் . பொதுமக்களின் பார்வையிடலுக்கு வரு

தியேட்டர்களில் தேசியகீதம் நல்லதுதான்! - சேட்டன்பகத்

படம்
தியேட்டர்களில் தேசியகீதம் பாட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. எமர்ஜென்சி காலங்களில் கூட இதுபோன்ற ஆணைகள் அமலில் இருந்தன என்பதால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தியேட்டர்களில் தேசியகீதம் அவசியமா என்று கேள்வி எழுப்பப்படுவதில் தவறில்லை. இந்திய அரசின் ஒற்றுமைக்கான நடவடிக்கை என்றே இதனை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அடாவடியாக அமலாவதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவாதம் ஏற்படுத்தினாலே உடனே ஏன் தேசிய கீத த்திற்கு எதிராக இருக்கிறீர்கள்? நீங்கள் தேச துரோகி என புரிந்துகொள்ள முடியாத மொழியில் சிலர் பேசுகின்றனர். இந்தியாவின் பெயர் பலநேரங்களில் கெடுவது இதுபோன்ற கண்மூடித்தனமான தேசபக்தியாளர்களால்தான். தியேட்டர்களில் தேசியகீதம் பாடுவது நீதிமன்ற உத்தரவு எனும் போது அதனை விமர்சிப்பது அரசியலைப்புச்சட்டப்படி தவறு. இதில் என் கருத்து, இது தேவையானது என்பதுதான். உடனே இதனை ஜெர்மனியின் ஹிட்லர் செய்தது போல இருக்கிறது நண்பர்கள் வலைத்தளங்களில் பொங்குகிறார்கள். சிலர் எதற்கு எழுந்து நிற்கவேண்டும் என்று தாமதமாக க் கூட படத்திற்கு

ஆவின் கண்ணாடி பாட்டில்களுக்கு மாறுகிறதா?

படம்
பிளாஸ்டிக் தடைகளுக்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. தற்போது அரசு நிறுவனமான ஆவின் உயர் நீதிமன்றத்தின் ஆணைக்குட்பட்டு பாலை கண்ணாடி பாட்டில்களில் வழங்க உள்ளது. இது சாத்தியமா இல்லையா என அரசு கணக்கு போட்டுக்கொண்டு உள்ளது. இதோ டேட்டா ஆவினுக்குச் சொந்தமான பார்லர்கள் 750 தனியார் பார்லர்கள் 3 ஆயிரம் தினசரி பால் விநியோகம் - 12.5 லட்சம் லிட்டர் - நகரில் மட்டும். கண்ணாடி பாட்டில்கள் தேவை எனில் 25 லட்சம் பாட்டில்கள் தேவை - 500மி.லி பாலுக்கு. பால் விநியோகம், பயன்பாடு, சுத்தம் செய்து தர தேவைப்படும் பாட்டில்களின் எண்ணிக்கை 75 லட்சம். தற்போது பயன்படும் கவர் பாலிபிலிம் பிளாஸ்டிக்குக்கு செலவு 40 பைசா. 500 மிலி கவருக்கு. கண்ணாடி பாட்டில்களுக்கு 20 முதல் 23 ரூபாய் வரையில் செலவாகும். நன்றி: டைம்ஸ் - சித்தார்த் பிரபாகர்