இடுகைகள்

சக்தி தொடர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருநங்கை அரசியல்வாதி சாதித்தது எப்படி?

படம்
சக்தி! டேனிகா ரோம் 1984 ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் பிறந்தவரான டேனிகா ரோம் அமெரிக்காவின் மாநில செனட் சபை உறுப்பினர்(ஜனநாயக கட்சி 2017-18). திருநங்கை என்ற அடையாளத்துடன் தேர்தலில் வென்றுள்ளதே செய்தி. “பத்திரிகையாளரை விட மக்கள் பிரச்னைகளை வேறு யார் புரிந்துகொள்ளமுடியும்? மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் மசோதாக்களை கொண்டுவருவதே முக்கியம். நான் திருநங்கை என்பதல்ல” என உறுதியாக பேசுகிறார் டேனிகா. லோச்மாண்ட் லோமண்ட் பள்ளி, செயின்ட் போனவென்ச்சர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் நியூயார்க்கில் இதழியல் படித்தார். “என் தாத்தா, செய்திகளை அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர். அதனால்தான் செய்தியாளராக மாறும் ஆசை உருவானது” என்பவர் பத்தரை ஆண்டுகளாக செய்தியாளராக(Gainesville Times and Prince William Times.) பணியாற்றி 2 ஆயிரத்து 500 கட்டுரைகளை எழுதிக்குவித்தார்.  2004 ஆம் ஆண்டில் ஜார்ஜ் டபிள்யூ புஷ், தன்பாலினத்தோர் திருமண தடை சட்டத்தை தடைசெய்தபோது ரோம் அரசியலில் இணைய விரும்பினார். “நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை விட மக்களை முன்னேற்றும் ஐடியாக்கள் உங்களிடம் உள்ளதா, செயல்படுத்

டிவி ஷோவில் சாதித்த முதல் பெண் தொகுப்பாளர்!

படம்
சக்தி! சமந்தா கனடாவைச் சேர்ந்த சமந்தா அன்னா பீ(1969), காமெடி நடிப்பில் தூள்கிளப்பி டிவியில் ஒளிபரப்பான லேட்நைட் ஷோ வித் ஜான் ஸ்டீவர்ட் நிகழ்ச்சியை முதல் பெண் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி பிரபலப்படுத்தியவர்.  பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கென தனிஷோவை அமைத்துக்கொண்ட திறமைசாலி. “சிறுவயதில் கூச்சசுபாவம் கொண்டவளாகவும், புத்திசாலியாக மாறவும் முதிர்ச்சியானவளாக காட்டிக்கொள்ள முயற்சித்தேன்” என்பவர் பெற்றோர் பிரிவுக்கு பிறகு பாட்டியிடம் வளர்ந்தார். ஒட்டாவா பல்கலைக்கழகம், ஜார்ஜ் ப்ரௌன் நாடகப்பள்ளி ஆகியவற்றில் படித்தபோது நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. செய்லர் மூன் நாடகம் இவர் திறமை மீது வெளிச்சம் பாய்ச்ச, காமெடி குழுவான அடோமிக் ஃபயர்பால் எனும் பெண்குழுவிலும் இயங்கினார்.  2003 இல் டிவி ஷோவில் முதல் பெண்தொகுப்பாளராக மேடையேறி சாதித்தார்.”முதல் பெண்தொகுப்பாளர் என்ற பயம் இல்லை.  சிறந்த ஐடியாக்களை கூறுவதற்கான போராட்டத்தை மகிழ்வோடு ஏற்றேன். உங்களிடம் எதிர்காலத்திற்கான சிந்தனைகள் இருந்தால், அதனை செயல்பாடாக்குவதற்கான மனிதர்கள் இயல்பாக அதில் இணைவார்கள். நீங்கள்

பேஸ்பால் பிட்சர்! - சாதித்த ஆப்பிரிக்க அமெரிக்க பெண்!

படம்
சக்தி! மோனே டேவிஸ் அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள பிலடெல்பியாவில் பிறந்த மோனே டேவிஸ், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பேஸ்பால் லீக் போட்டிகளில் பங்கேற்று ஷட்டர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க –- அமெரிக்கர். எதிரணியை ரன் அடிக்காமல் ஒற்றையாளாக தடுக்கும் பிட்சர் புயல் மோனே டேவிஸ். பதிமூன்று வயதில் 101 கி.மீ வேகத்தில் பந்து எறிந்தால் மேடம் 110 கி.மீ வேகத்தில் ராஜதானியாக மாறுவார். 2014 நடைபெற்ற வேர்ல்ட் லீக்கில் பங்கேற்ற இரு சிறுமிகளில் மோனே டேவிசும் ஒருவர். அதேசமயம் லீக்கில் பங்கேற்ற பெண்களில் ஆறாவது நபரும் கூடத்தான். “முதன்முதலில் எட்டு வயதில் பேஸ்பால் அறிமுகமானது. பின் பயிற்சிபெற்று முதன்முதலில் மைதானத்தில் நுழையும்போது எதிரணி மட்டுமல்ல எங்கள் அணியைச் சேர்ந்தவர்களும் என்னை பார்த்து ஜோக்கடித்தனர். நான் முதல் பந்தை வீசியதும் சிரிப்புகள் மெல்ல அடங்கதொடங்கின” என்கிறார் மோனே டேவிஸ். இவரின் கைகள் பிற வீரரை விட 15% குட்டையாக இருப்பதால் 110 கி.மீ வேகத்தில் வீசி எதிரணியை திகைக்க வைத்து ஷட்டர் விருது வென்றிருக்கிறார். போராடவேண்டியது மைதானத்தில் மட்டுமல்ல என்பதை மோனே டே

விண்வெளியி ல் சாதித்த ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்மணி!

படம்
சக்தி! மே ஜெமிஸன்! “மூன்று வயதிலேயே என் பெற்றோர் சிகாகோவிற்கு என்னை அழைத்துவந்துவிட்டனர். அப்போதே விண்வெளிக்கு பறக்கும்தட்டு அழைத்துச்செல்லும் என சோளப்பயிர்களிடையே காத்திருப்பேன்” என பேசும் ஜெமிஸன், 1992 ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கன். ‘பல்வேறு துறைகளில் சாதித்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களை பற்றி பேசி என் பெற்றோர் எனக்கு தைரியமூட்டினார்கள். முதல்முறை எனும் சாதனை செய்து பிறருக்கு உதாரணமானவது எளிதல்ல. ’ எனும் மே ஜெமிஸன் நாசாவின் பொறியாளராக 1987 ஆம் ஆண்டு தேர்வு பெற்றார். வானியலாளர் மட்டுமல்லாது டிவி நடிகை, நடனக்காரர் (பாலே, ஆப்பிரிக்கா நடனம்) என பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கே செய்தவர். 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்தவருக்கு ரோல்மாடல், மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர். “மக்கள் உங்களிடம் அனைத்தும் உள்ளது என்று கூறினாலும் அதனை நம்பாதீர்கள். ஏனெனில் உலகில் நாம் செய்வதற்கு ஏராளமான பணிகள் உள்ளன” என உற்சாக வார்த்தைகளால் உரமேற்றுகிறார் மே ஜெமிஸன்.       

ஜிஎம் மோட்டார்ஸை உயிர்ப்பித்த பெண்!

படம்
சக்தி! மேரி பாரா “பொறுப்பு குறித்த அக்கறையை காய்கறிவிற்கும் கடையில்தான் உணர்ந்தேன். அப்போது என் தந்தை ஜிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். 40 ஆண்டுகளாக அங்கு பணிசெய்த தந்தை மற்றும் தாய்க்கு என்னைக் குறித்த கனவுகள் இருந்தன” எனும் மேரி பாரா, ஜெனரல் மோட்டார்ஸின் பெருமைமிக்க முதல் பெண் இயக்குநர் மற்றும் தலைவர். அமெரிக்காவின் மிச்சிகனில் 1961 ஆம் ஆண்டு பிறந்த மேரி பாரா, 2014 ஆம் ஆண்டு ஜெனரல் மோட்டார்சின் இயக்குநர் பொறுப்பை ஏற்றார். “மரபான தொழில்துறையான மோட்டார்துறையில் ஆண்களுடன் போட்டியிடுவது எளிதல்ல; பெருமளவு வேலைப்பளுவை மனதில் சுமந்துகொண்டு பணிபுரிந்துள்ளேன்” என உற்சாக பதில் தருகிறார் மேரி பாரா. வாட்டர்ஃபோர்ட் மாட் பள்ளியில் படித்தவர் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பை கெட்டரிங் பல்கலையில் நிறைவு செய்து ஜெனரல்மோட்டார்ஸ் உதவித்தொகையுடன் வணிக மேலாண்மை படிப்பையும் முடித்தார்.  தன் பதினெட்டு வயதிலேயே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியவர் மேரி பாரா. செவி போல்ட் இவி எலக்ட்ரிக் வாகனத்தை மேம்படுத்தி வருபவர் இயக்குநர் பொறுப்பேற்றதும் 30 மில்லியன் கார்கள

ஹவாயை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் நாடாளுமன்ற உறுப்பினர்!

படம்
சக்தி! Mazie Hirono ” அமெரிக்க சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய என்னுடைய பயணம், கல்லூரியில் வியட்நாமிய போருக்கு எதிராக ஒன்றுதிரண்டபோது தொடங்கியது ” என புத்துணர்வாக பேசும் மேசி ஹிரோனோ அமெரிக்காவின் முதல் ஆசிய –அமெரிக்க சட்டசபை உறுப்பினர். 1947 ஆம் ஆண்டு நவ.3 அன்று ஜப்பானின் புகுஷிமாவில் பிறந்த மேஷி ஹிரோனா, தன் எட்டு வயதில் தாயுடன் அமெரிக்காவுக்கு வந்து அந்நாட்டு குடிமகளானார். 1994-2013 வரை ஹவாய் சட்டமன்ற உறுப்பினர், கவர்னர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்த மேசி, ஜனநாயக கட்சி உறுப்பினர். “ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை காக்கப்படவேண்டும்” எனும் மேசி, ஹவாயிலுள்ள பொதுப்பள்ளி, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.  “அமெரிக்க மாநிலமான ஹவாய் மக்களின் பிரதிநிதியாக மக்கள் முன் நிற்கும் தைரியத்தை என் அம்மாவிடமிருந்து பெற்றேன். பொருளாதார பலமில்லாது அமெரிக்காவில் நுழைந்து என்னை வளர்த்த அவரிடமிருந்து கற்றது ஏராளம்” எனும் மேசி, ராணுவத்தில் சூழலுக்கு இசைவான பொருட்கள், புதுப்பிக்கும் ஆற்றல்கள் ஆகியவற்றை பிரசாரம் செய்து வலியுறுத்தி பேசியுள்ளார். “நாம் யாருக்காக

அமெரிக்காவின் முதல் கருப்பின பெண்!

படம்
சக்தி! லோரெட்டா லின்ச் அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் முதன்மை வழக்குரைஞராக(83 வது அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்த(2015-17) சாதனைக்கு சொந்தக்காரர் லோரெட்டா லின்ச். “கோர்ட்டுக்கு சென்று என் பெயரை ஜூரிகளிடம் அறிமுகப்படுத்தி அமர்ந்த கணம் மறக்கமுடியாது” என்பவர் சட்டம் அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையை உருவாக்கினார். ஆங்கில ஆசிரியரும் நூலகருமான தாயின் நூல்கள் போற்றும் குணத்தால் கிறிஸ்துமஸ் தினத்திலும் புத்தகங்களை பரிசாக கேட்கும் ஆசையுள்ளவராக லோரெட்டா வளர்ந்தார். “கழிவறையைக் கூட கருப்பின பெண்கள் பயன்படுத்தாத அனுமதி கிடைக்காத நிலையில் என் பெற்றோர் அனைத்து மக்களுக்கான உரிமைக்கு போராடுவதில் உறுதியான இருந்தனர். இவர்களின் செயல்பாடே அனைவருக்குமான சமநீதியின் என்னை வலுவானவளாக மாற்றியது” என தீர்க்கமாக பேசுகிறார் லோரெட்டா லின்ச். 1959 ஆம் ஆண்டு வடக்கு கரோலினாவின் க்ரீன்ஸ்போரோவில் பிறந்த லோரெட்டா ஹார்வர்டு பல்கலையில் 1980-1984 ஆம் ஆண்டுகளில்   ஆங்கில இலக்கியம், அமெரிக்க இலக்கியம் மற்றும் சட்டக்கல்வியை நிறைவு செய்தவர், நியூயார்க் ரிசர்வ் வங்கியின் சட்ட ஆலோசகராக செயல்பட்டவர். பராக்

சிந்தி ஷெர்மன் - பத்து லட்சம் வென்ற புரட்சிக் கலைஞர்!

படம்
சக்தி! சிந்தி ஷெர்மன் அமெரிக்காவில் 1954 ஆம் ஆண்டு பிறந்த புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரான சிந்தியா மோரிஸ் ஷெர்மன்,   கான்செப்சுவல் புகைப்படங்களுக்காக புகழ்பெற்ற ஆளுமை. புகைப்படக்கலைஞர் பணியைக் கடந்து திரைப்பட இயக்குநர், மாடல் என பணியாற்றுபவர் ஸ்டூடியோவில் தன்னைத்தானே பல்வேறு கெட்டப்புகளில் புகைப்படங்களாக எடுத்து தள்ளி பிரபலமானார்.   கருப்பு-வெள்ளையில் திரைப்பட நடிகைகளின் பல்வேறு புகைப்படங்களை உள்ளடக்கிய உருவாக்கி   கலைப்படைப்பு இவருக்கு பெரும் புகழ்பெற்று தந்தது. 1972 ஆம் ஆண்டு பஃப்பாலோ மாநில கல்லூரியில் விசுவல் ஆர்ட்ஸ் பாடப்பிரிவில் சேர்ந்தவர், அதில் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்று சொல்லி புகைப்படப்பிரிவுக்கு மாறினார். “எழுபதுகளில் புகைப்படங்களை எடுக்க தொடங்கி விற்கும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் விற்பனையில் பெரிய இடைவெளி இருந்ததை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். என்னால் வெளிப்படையாக பேசமுடியாதவற்றை என் படைப்புகள் பேசுகின்றன” என அதிரடியாக பேசும் பெண்கலைஞர் சிந்தியாவின் புகைப்பட படைப்பு முதன்முதலில் ரூ.10 லட்ச ரூபாய்க்கு விலைபோய் வரலாற்று சாதனை படைத்தது.    

அமெரிக்காவின் முதல் பெண் டிவி தொகுப்பாளர்!

படம்
சக்தி! பார்பரா வால்டர்ஸ்! “காலையில் விரைவாக வேலைக்கு சென்று, அலுவலக வேலைகளை செய்துவிட்டு லேட்டாக வீடு செல்லுங்கள்” என இளம் பத்திரிகையாளர்களுக்கு அட்வைஸ் சொல்கிறார் அமெரிக்க ஊடகவியலாளரான பார்பரா வால்டர்ஸ். 1976 ஆம் ஆண்டு ஏபிசி சேனலில் Today Show நிகழ்ச்சியை எழுதி தொகுத்து வழங்கிய பார்பரா, டிவி சேனல் வரலாற்றில் முதல் பெண் தொகுப்பாளர். பார்பராவை உலகமே ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தது; விளைவு? டிஆர்பி உயர, நிகழ்ச்சி சூப்பர் ஹிட். “அன்று ஆண்கள்தான் பத்திரிகைத்துறையில் அதிகம். அதற்கு அஞ்சவில்லை. எனது நிகழ்ச்சி மூலம் பல்லாயிரம் பெண்களும் துணிச்சலைப் பெற்றிருப்பார்கள்” என புன்சிரிப்புடன் பேசுகிறார் பார்பரா. நிகழ்ச்சி தொகுப்பாளர் வாய்ப்பு மூலம் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், அன்வர் சதாத்(எகிப்து), மெனசெம் பெகின்(இஸ்‌ரேல்), ஃபிடல் காஸ்ட்ரோ(க்யூபா) ஆகியோர் உட்பட பல முக்கிய ஆளுமைகளை பேட்டி எடுத்து பிரபலமானார். “இஸ்‌ரேல் பிரதமர் அன்வர், இஸ்‌ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் இருவரையும் ஒன்றாக பேட்டி எடுத்ததும், ஃபிடல் காஸ்ட்ரோவிடம் கேள்விகள் கேட்டதும் மறக்கமுடியாத அனுப