டிவி ஷோவில் சாதித்த முதல் பெண் தொகுப்பாளர்!




Image result for samantha bee

சக்தி!

சமந்தா



கனடாவைச் சேர்ந்த சமந்தா அன்னா பீ(1969), காமெடி நடிப்பில் தூள்கிளப்பி டிவியில் ஒளிபரப்பான லேட்நைட் ஷோ வித் ஜான் ஸ்டீவர்ட் நிகழ்ச்சியை முதல் பெண் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி பிரபலப்படுத்தியவர். 

பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கென தனிஷோவை அமைத்துக்கொண்ட திறமைசாலி.

“சிறுவயதில் கூச்சசுபாவம் கொண்டவளாகவும், புத்திசாலியாக மாறவும் முதிர்ச்சியானவளாக காட்டிக்கொள்ள முயற்சித்தேன்” என்பவர் பெற்றோர் பிரிவுக்கு பிறகு பாட்டியிடம் வளர்ந்தார். ஒட்டாவா பல்கலைக்கழகம், ஜார்ஜ் ப்ரௌன் நாடகப்பள்ளி ஆகியவற்றில் படித்தபோது நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. செய்லர் மூன் நாடகம் இவர் திறமை மீது வெளிச்சம் பாய்ச்ச, காமெடி குழுவான அடோமிக் ஃபயர்பால் எனும் பெண்குழுவிலும் இயங்கினார்.

 2003 இல் டிவி ஷோவில் முதல் பெண்தொகுப்பாளராக மேடையேறி சாதித்தார்.”முதல் பெண்தொகுப்பாளர் என்ற பயம் இல்லை. 

சிறந்த ஐடியாக்களை கூறுவதற்கான போராட்டத்தை மகிழ்வோடு ஏற்றேன். உங்களிடம் எதிர்காலத்திற்கான சிந்தனைகள் இருந்தால், அதனை செயல்பாடாக்குவதற்கான மனிதர்கள் இயல்பாக அதில் இணைவார்கள். நீங்கள் செய்யும் பணியை மனதார ஏற்று ஈடுபடுங்கள் அதுவே போதும்” என்கிறார் சமந்தா. சாதித்தவர் சொன்னால் சரிதான்.