மருத்துவ வசதி அளிக்கும் மசூதி!
மருத்துவ மசூதி!
ஹைதராபாத்தைச் சேர்ந்த மசூதியில்
தொடங்கப்பட்டுள்ள மருத்துவ மையம், ஒரு லட்சம் மக்களுக்கு மேல் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி
சாதனை புரிந்துள்ளது.
என்எஸ் குந்தாவில் மஸ்ஜித்-இ-இசாக்
என்ற மசூதி, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு முப்பதிற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளைப்
பற்றிய தகவல்களை வழங்கி வருகிறது. மசூதி கமிட்டி, உதவும் கரங்கள்(HHF) எனும் தன்னார்வ
நிறுவனத்துடன் இணைந்து இம்மாதத்திலிருந்து மருத்துவசேவைகளை செய்துவருகிறது.
“மாநிலத்தில்
இயங்கும் 30 மருத்துவமனைகளில் தொடக்க மருத்துவசேவைகளை அணுக எங்களது மையம் மக்களுக்கு
உதவுகிறது” என்கிறார் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனரான முஜ்தபா ஹசன் அஸ்காரி.
பிசியோதெரபி, தாய்மை பராமரிப்பு,
விபத்து முதலுதவி, இலவச சோதனை உள்ளிட்டவற்றை குடிசைவாழ் மக்களுக்கு கிடைக்கச்செய்வதே
மசூதியின் இச்சேவை லட்சியம். மசூதியின் மருத்துவமையத்திலுள்ள நூறு தன்னார்வலர்கள் மூலம்
குழந்தைகளுக்கு தடுப்பூசி, ஊட்டச்சத்து பாதிப்பைக் குறைக்க பெண்களுக்கு ஊட்டச்சத்து
பொருட்களையும் இம்மையம் வழங்கிவருகிறது.