2019 என்ன நடக்கப்போகிறது?
இந்தியாவில் யோகியின் ஆட்சியிலுள்ள உ.பியில் பிரக்யா ராஜில் ஜனவரி 15 ஆம் தேதி, கும்பமேளா நடைபெற விருக்கிறது.
ராமர்கோவிலை கட்டுவதற்கான தீர்ப்பு ஜன. 4, சபரிமலை மனு மீதான விசாரணை ஜன.22 தொடங்கவிருக்கிறது.
இலங்கை தேர்தல் ஜன.5 ஆம் தேதி தொடங்குகிறது.
பிப்.1 ஆம் தேதி இந்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
கடல்படை அதிகாரி குல்பூஷன் யாதவ் மீதான மரண தண்டனையை எதிர்த்து இந்தியா முறையிட்ட மனு பிப்.18 - 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மார்ச் 29 ஆம் தேதி இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுகிறது.
டிசி காமிக்ஸ் பணக்கார சூப்பர் மேனான பேட் மேனுக்கு மார்ச்சில் 80 வயது ஆகிறது.
ஏப்ரல் மக்களவை தேர்தல் தொடங்குவது ஏப்ரலில். ஒடிஷா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜம்மு - காஷ்மீரிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மே மாதம் 30 ஆம் தேதி, இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன.
முதல் 5 ஜி போனும் இங்கிலாந்தில் அறிமுகமாகவிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க தேர்தல் நடைபெறும்.
ஜூன் மாதம், நிலவை மனிதர்கள் தொட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஜப்பானின் ஒசாகாவில் ஜி20 மாநாடு நடைபெறவிருக்கிறது.
புகழ்பெற்ற டிவி தொடரான ப்ரெண்ட்ஸ் வெளியாகி 2019 செப்டம்பரோடு 25 ஆண்டுகள் ஆகின்றன.
குருநானக்கின் 550 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்து - பாக் கர்தாபூர் வழி திறக்கப்பட விருக்கிறது.
டிசம்பரில் இஸ்ரோ ஆளில்லாத விண்கலத்தை விண்ணில் ஏவ இருக்கிறது.
இந்தியாவெங்கும் 10 லட்சம் வைஃபை இடங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா