தூக்கத்தில் டெக்ஸ்டிங் செய்கிறீர்களா?



Related image



தூக்கத்தில் குறுஞ்செய்தி!

இது எப்படி முடியும்?

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு தூக்கத்தின் அலம்பலில் மெசேஜ் அனுப்புவதுதான் டெக்ஸ்டிங் என பிரபலமாகிவருகிறது.
போனை திறந்து கவனமின்றி எப்படி செய்தி அனுப்ப முடியும்?
தூக்க கிறக்கத்திலேயே நண்பர்களுடன் பேசுகிறோம் அல்லவா? குறுஞ்செய்தி அனுப்புவதும் அப்படியே நிகழ்கிறது. என்ன அனுப்பினோம் என்பது கூட பலருக்கும் அடுத்தநாள் நினைவிருக்காது.

அப்போது இது தூக்க குறைபாடு என கூறலாமா?

நிச்சயமாக. பென்சில்வேனியாவில் 372 கல்லூரி மாணவர்களிடையே நடத்திய ஆய்வில் 26% பேர் தூக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்புவது தெரிய வந்துள்ளது. இதில் படுக்கையில் போன்களை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட கையில் க்ளவுஸ் கூட அணிந்து தங்களை சோதித்துள்ளனர்.

இதற்கு தீர்வுதான் என்ன?

போனை படுக்கையிலிருந்து அகற்றுவதே ஒரே தீர்வு. உலகில் 5-10% பேருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளது. தூக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் குறைபாடும் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.