ஆஸ்பிரினைக் கண்டறிந்தவரின் கதை!
அறிவியலாளர்கள் அறிமுகம்!
ஃபெலிக்ஸ் ஹாப்மன்(1868-1946)
1897 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியலாளர் ஃபெலிக்ஸ் ஹாப்மன், வலிநிவாரணி ஆஸ்பிரின் மற்றும் ஹெராயினை செயற்கையாக தயாரித்து சாதனை புரிந்தார். ஜெர்மனியின் லுட்விக்ஸ்பர்க்கில் பிறந்த ஃபெலிக்ஸ், லுட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் படித்தார். முனைவர் படிப்பை நிறைவு செய்தவர் 1894 ஆம் ஆண்டு பேயர் நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக பணிக்கு சேர்ந்தார்.
வலிநிவாரணியான ஆஸ்பிரினை 1897 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இது அசிடைல் சாலிசிலிக் எனும் தூயவடிவத்தில் இருந்தது. 1899 ஆம் ஆண்டு ஆஸ்பிரின் என்ற பெயரில் மருந்து விற்பனையானது. முதலில் பவுடர் வடிவில் விற்கப்பட்டது.
டையாமார்பின்(ஹெராயின்) தூயவடிவில் மேம்படுத்தியவரும் ஃபெலிக்ஸ்தான். தந்தை ஆர்த்தரைட்டிஸ் பிரச்னைக்கு தீர்வு தரவே ஆஸ்பிரினை ்ஃபெலிக்ஸ் கண்டுபிடித்தார். மருந்து மற்றும் விநியோகப்பிரிவில் பணியாற்றிய ஃபெலிக்ஸ் ஆஸ்பிரின் விற்பனையால் பணக்காரராக வாழ்ந்தார். பின்னர் 1946 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் காலமானார். ஆஸ்பிரின் கண்டறிந்து 125 ஆண்டுகளாகின்றன. காய்ச்சல், இதயநோய், ரத்த உறைதல் பிரச்னைகளை தீர்த்து 1.5 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டு வருகிற முக்கிய கண்டுபிடிப்பு இது.