சூப்பர்ஸ்டார் சமையல் கலைஞர் கரிமா அரோரா!
கிச்சன் ஸ்டார் கரிமா!
ஹாங்காங்கில் வசிக்கும் கரிமா
அரோரா தன்னுடைய Gaa உணவகத்திற்கு உணவுத்துறையின் உயர்ந்த அங்கீகாரமான மிச்செலின் ஸ்டார்
பெற்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரோமா
தொடங்கிய உணவகமான Gaa, தாய்லாந்திலுள்ள மிச்செலின் கைடு நிறுவனத்தின் ஸ்டார் அங்கீகாரத்தை
வென்றுள்ளது. இந்தியா –- தாய்லாந்து வெரைட்டி உணவுகளை சீசன் காய்கறிகளை சமைத்து தந்து
மக்களின் அன்பை வென்றுள்ளார் கரிமா அரோரா. மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றியவர்
கரிமா என்றால் நம்புவீர்களா?
“ஆறுமாதம் பத்திரிகையாளராக வேலைபார்த்தேன்.
திடீரென ரெஸ்டாரண்ட் தொடங்கினால் என்ன என்று தோன்ற, பயிற்சிகளை பெற்று துணிந்து இறங்கிவிட்டேன்”
என புன்னகைக்கிறார் கரிமா அரோரா. கார்டன் ராம்சே(2011), ரெனெ ரெட்ஸெபி(2013-15) ஆகியோரிடம்
பணியாற்றி அரிச்சுவடிகளை கற்றவர், பாங்காக்குக்கு இடம்பெயர்ந்து ககன் ஆனந்துக்கு உதவியாளராகி
வெரைட்டி உணவுகளை தயாரிக்க கற்றது முக்கியமான திருப்பம். கடையில் உணவுகளோடு எளிமையான
உள் அலங்காரம்(Boose Studio-Jittapoo opas) வசீகரிக்கிறது.