நான் அவன் இல்லை!





Image result for naan avan illai



நான் அவன் இல்லை! –

ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த நல்லபடி ஜீவன்குமாருக்கு 8 ஆம் எட்டாம்வகுப்புக்கு மேல் ஒருவார்த்தைகூட மூளைக்குள் இறங்கவில்லை. அதனால் என்ன? சிலபஸ் தாண்டி யோசிப்போம் என உற்சாகமாக செய்த அகில இந்திய தில்லுமுல்லு வேலைகளால் சிறையில் அட்மிஷன் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

மேட்டர் சிம்பிள். கல்யாண வரன்களைத் தேடும் இணையதளங்களில் வெவ்வேறு பெயர்களில் இயங்கிய ஜீவன்குமார். நல்ல காசு கொழிக்கும் பெண்களை வளைப்பார். ஆங்கிலமொழி அபாரமாய் கைகொடுக்க, காதல் வசனங்களால் முதலில் பெண்ணின் மனதை கரைத்து பின்னர் அவர்களின் டெபிட்கார்டில் கைவைப்பது ஜீவன் டெக்னிக்.


அம்மாவுக்கு கேன்சர் என்ற சென்டிமெண்ட் காரணத்தை சொல்லி ஜீவன் ஆட்டையப்போட்டது மட்டும் லம்ப்பாக ரூ.20 லட்சம். பிறகு மெல்ல தொடர்புஎல்லைக்கு வெளியே நழுவிவிடும் ஜீவன்குமாரின் துரோகத்தை போலீசுக்கு பாதிக்கப்பட்ட லேடீஸ் புட்டுவைக்க, 23 வயதில் மாமியார் வீட்டில் வசமாக மாட்டிக்கொண்டார். டெல்லி, ஒடிஷா, தெலங்கானா, கர்நாடகா என ஜீவன் ரோமிங்கில் செய்த காதல் மோசடிகள் லீக்காக தொடங்கியுள்ளன.


பிரபலமான இடுகைகள்