காந்தி: கோழையா? கோமாளியா? மின்னூல் வெளியீடு








இனிய நண்பர்களுக்கு,

காந்தியின் செயல்களுக்கும் அரசியல்களுக்கும் பல்வேறு விமர்சனங்கள் இன்றளவும் எழுந்தபடியே உள்ளன. இன்றளவும் அவரை மகாத்மா என சிலரும், தீயசக்தி என சிலரும் கூறியபடி அதற்கான ஆதாரங்களை காந்தியின் சொற்பொழிவுகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் எடுத்துக்காட்டுவது வழக்கம்.

ஆதரவு , மறுப்பு என இருதரப்பும் தொடர்ந்து உரையாடலை மேற்கொள்ளும் ஜனநாயக தன்மையை காந்தி பிறந்து 150 ஆண்டுகளாகியும் ஏற்படுத்தி வருகிறார். அரசியல் போராட்டங்களோடு இடையறாது கடிதங்கள் எழுதியும், பத்திரிகைகள் நடத்தியும் உழைத்த காந்தியின் நெஞ்சுரம், உழைப்பு நம் நினைத்து பார்க்கமுடியாதது. தன்னை நேர்மையான சமூகத்தின் முன் வைப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்றாலும் அதனையும் ஆத்ம சோதனையாக கருதி துணிந்த காந்தி, விமர்சனங்களுக்கு அஞ்சுபவர் அல்ல.

இந்த மின்னூலில் காந்தி குறித்து கோமாளிமேடையில் எழுதிய மொழிபெயர்ப்பு கட்டுரைகள், நேர்காணல்கள் முடிந்தவரை அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. வரிசைக்கிரமமாக வராத கட்டுரைகள் விடுபட்ட கட்டுரைகள் தலைப்பில் உள்ளன. ஊக்கமளித்த தாராபுரம் இரா.முருகானந்தம், காந்தி இன்று இணையதள நிறுவனர் சுனில் கிருஷ்ணன், நவஜீவன் பிரசுரலாயம், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா ஆகியோருக்கு எனது நன்றிகள்.


லிங்க் இதோ!

https://tamil.pratilipi.com/read/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-30RUe2Jj5kEX-45qy4b2t4423514


பிரபலமான இடுகைகள்