தனியார் செயற்கைக்கோள்! - புதிய சந்தை உருவாகிறது.


தனியார் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியர்!

அண்மையில் ஸ்பேக்ஸ்எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பிய செயற்கைக்கோளுக்கு சொந்தக்காரர் கிரிஷ்நாயர் என்ற இந்தியர். நான்காண்டுகளுக்கு முன்னர் அனுப்பிய ஹாம்சாட் செயற்கைக்கோளுக்கு மாற்றாக Exseeed Sat1 செயற்கைக்கோளை தற்போது அனுப்பியுள்ளனர்.

கேரளாவின் நெய்யான்டிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ் நாயர், கடந்தாண்டு அஷார் ஃபரான் என்ற நண்பருடன் இணைந்து எக்ஸீடு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். “இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் நிறுவனம் எங்களுடையது” என பெருமைப்படுகிறார் கிரிஷ். 

தற்போது வணிகரீதியில் பயன்படுத்துவதற்கான விண்கலனை தயாரிக்கும் முயற்சியிலுள்ளார் கிரிஷ் நாயர். மிலிட்டரி அகாடமியில் படித்தவரான கிரிஷ், அப்ளைடு பிஸிக்ஸ் படித்து விபத்தினால் அதனை கைவிட்டார். பதினேழு வயதிலேயே நேவிகேட்டர் மீடியோ இன்டலிஜென்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் கிரிஷ். “வணிகரீதியில் நிறைய நிறுவனங்கள் செயற்கைக்கோள் தயாரிப்பில் இறங்கினால் அறிவியல் தொழில்துறையில் புதிய ஐடியாக்கள் கிடைக்கும்” என்கிறார் கிரிஷ்.

பிரபலமான இடுகைகள்