இத்தாலியின் மர்ம கடிகாரம்!



Image result for italy astro clock



இத்தாலியின் வானியல் கடிகாரம்!


இத்தாலியின் பியாஸா டெய் சிக்னோரியிலுள்ள வானியல் கடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1344. இதனை வடிமைத்த கலைஞர் ஜேக்கபோ டி டொண்டி. 

உலகின் மிக தொன்மையான இயங்கும் கடிகாரமான இது 24 மணிநேர டயலை கொண்டுள்ளது. ஒரு மணிமுதல் 24 மணி நேரம் வரை மணிச்சத்தம் ஒலிக்கும்படி அமைத்திருக்கிறார்கள். மற்றொரு சிறப்பு, குறிப்பிட்ட மணிநேரத்தில் சூரிய மண்டலத்தில் கோள்களின் அமைப்பு, நிலவு மற்றும் சூரியனின் இயக்கத்தையும் இக்கடிகாரம் மூலம் அறியமுடியும். முதலில் உருவாக்கப்பட்ட கடிகாரம் அழிந்தபின் 1423 ஆம் ஆண்டு அடுத்த கடிகாரம் உருவானது. இதில் இடம்பெற்றுள்ள ராசிகளில் சிம்மம் மட்டும் இருக்காது. இதன் ஆதார கடிகாரத்தில் அப்போது ஆட்சியிலிருந்த காரரெசி குடும்பத்திற்கு எதிராக  வடிவமைப்பாளர் சிங்க அடையாளத்தை உருவாக்கவில்லை என்று கூறுகின்றனர். சிலர் இந்த அடையாளத்தை டி டொண்டி மறைத்து வைத்திருக்கிறார் என கிசுகிசுக்கின்றனர். 

கடிகார கோபுரத்தை சுற்றிப்பார்க்க வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுமதிக்கிறார்கள். நேரம்: காலை 10-11.30. ஆன்லைனில் பதிவு செய்து சுற்றிப்பார்க்கலாம்.