சத்ய சாய் விருதுகள் -2018
சாதனை விருதுகள்!
ஸ்ரீசத்ய சாய் லோக சேவா ட்ரஸ்ட்
சார்பாக சமூகத்திற்கு அர்ப்பணிப்பாக உழைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில்
கல்வி, சுகாதாரத்திற்காக உழைத்தவர்களைப் பற்றிய அறிமுகம்…
சகேனா யகூபி
ஆப்கானிஸ்தானின் ஹீரத் நகரைச்
சேர்ந்த கல்வியாளர். AIL என்ற நிறுவனத்தை தொடங்கிய குழந்தைகளுக்கான கல்வி, அகதி மக்களுக்கான
உரிமைகளுக்கான குரல்கொடுக்கும் ஆளுமை. அமெரிக்காவின் பசிஃபிக் பல்கலைக்கழகம், லோமா
லிண்டா பல்கலைக்கழகத்தில் படித்தவர் ஹோப் இன்டர்நேஷனல் எனும் என்ஜிஓவை தொடங்கி உதவிகளை
வழங்கி வருகிறார்.
லார்னா ருட்டோ
கென்யாவைச் சேர்ந்த ருட்டோ, அவர்
நாட்டில் அதிகரித்த பிளாஸ்டிக் கழிவு பிரச்னையை தொழில்நிறுவனம் தொடங்கி தீர்க்க முயற்சித்து
வருகிறார். மரங்களை வெட்டுவதை தவிர்க்க பிரசாரம் மேற்கொண்டு 250 ஏக்கர்களுக்கு மேற்பட்ட
வனத்தை காப்பாற்றியுள்ளார்.
லெய்மா போவீ
லைபீரியாவைச் சேர்ந்த லெய்மா,
உள்நாட்டுப்போரை தடுப்பதில் பெண்களை ஒருங்கிணைத்து அகிம்சை வழியில் போராடி முக்கிய
பங்காற்றியவர். போவீ பவுண்டேஷன் மூலம் கிறிஸ்தவ,முஸ்லீம் பெண்களை ஒருங்கிணைத்தவர் நாட்டில்
அமைதி திரும்ப பாடுபட்டதற்கு அங்கீகாரமாக 2011 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்.