திருநங்கை அரசியல்வாதி சாதித்தது எப்படி?




Related image







சக்தி!





Image result for danica roem


டேனிகா ரோம்

1984 ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் பிறந்தவரான டேனிகா ரோம் அமெரிக்காவின் மாநில செனட் சபை உறுப்பினர்(ஜனநாயக கட்சி 2017-18). திருநங்கை என்ற அடையாளத்துடன் தேர்தலில் வென்றுள்ளதே செய்தி. “பத்திரிகையாளரை விட மக்கள் பிரச்னைகளை வேறு யார் புரிந்துகொள்ளமுடியும்? மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் மசோதாக்களை கொண்டுவருவதே முக்கியம். நான் திருநங்கை என்பதல்ல” என உறுதியாக பேசுகிறார் டேனிகா.

லோச்மாண்ட் லோமண்ட் பள்ளி, செயின்ட் போனவென்ச்சர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் நியூயார்க்கில் இதழியல் படித்தார். “என் தாத்தா, செய்திகளை அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர். அதனால்தான் செய்தியாளராக மாறும் ஆசை உருவானது” என்பவர் பத்தரை ஆண்டுகளாக செய்தியாளராக(Gainesville Times and Prince William Times.) பணியாற்றி 2 ஆயிரத்து 500 கட்டுரைகளை எழுதிக்குவித்தார்.

 2004 ஆம் ஆண்டில் ஜார்ஜ் டபிள்யூ புஷ், தன்பாலினத்தோர் திருமண தடை சட்டத்தை தடைசெய்தபோது ரோம் அரசியலில் இணைய விரும்பினார். “நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை விட மக்களை முன்னேற்றும் ஐடியாக்கள் உங்களிடம் உள்ளதா, செயல்படுத்துவீர்களா என்பதே முக்கியம்” என்கிறார் டேனிகா ரோம்  

பிரபலமான இடுகைகள்