எலன் மஸ்குக்கு பிடித்த நூல்கள்!





தொழில்துறையின் சூப்பர் ஸ்டாராக மின்னும் எலன் மஸ்காக எல்லோரும் ஆக ஆசைதான். அதனை எதிர்காலத்தில் செய்ய அவரது அடிச்சுவட்டை பின்பற்றுவது அவசியம். அவரின் பரிந்துரைகளான புத்தகங்கள் அதற்கு உதவலாம்.



"The Hitchhiker's Guide to the Galaxy" by Douglas Adams


எலன் மஸ்க் தன் சிறுவயதில் நைட்ஸ்செ, ஸ்கோபென்ஹாயிர் ஆகியோரின் தத்துவ நூல்களை வாசித்தவர். " எனக்கு வாழ்க்கை மற்றும் அதன் அர்த்தம் குறித்து தீவிர தேடுதல் உண்டு. அப்போது வழிகாட்டியவர் டக்ளஸ் ஆடம்ஸ்' என்று கூறுகிறார் எலன் மஸ்க். இந்த நூல் விடைகளை விட கடினமான கேள்விகளை நமக்குள் உருவாக்குகிறது. கேள்விகளை சரியாக புரிந்துகொண்டாலே பதில்களை கண்டறிவது பெரிய விஷயம் இல்லைதானே!




"Einstein: His Life and Universe" by Walter Isaacson



ஒரு புத்திசாலி இன்னொரு புத்திசாலியை அங்கீகரித்து அவரின் நூல்களை படிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? எலன் மஸ்க், ஐன்ஸ்டீன் விண்வெளி குறித்து உருவாக்கிய தியரிகள், ஆய்வுகள் ஆகியவற்றை நம் அனைவரைப் போலே வியந்து பாராட்டுகிறார். 



"Structures: Or Why Things Don't Fall Down" by J.E. Gordon



ஸ்பேக்ஸ் எக்ஸ் கம்பெனி தொடங்குவதற்கு முன்பு ராக்கெட்டுகளை குறித்து அறிந்துகொள்ள எலன் மஸ்க் மெனக்கெட்டு உட்கார்ந்து படித்த  புத்தகம் இது. 





"Ignition!: An Informal History of Liquid Rocket Propellants" by John D. Clark


விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கும் ராக்கெட்டுகளின் தகவல்களை கொண்ட புத்தகம். தொழில் சார்ந்தும் அவரின் தனிப்பட்ட ஆர்வம் சார்ந்தும் மிகப்பிடித்த நூலாம். 


"Superintelligence: Paths, Dangers, Strategies" by Nick Bostrom

செயற்கை நுண்ணறிவை பெரிய அள்வு கண்டுகொள்ளாத ஆள் போல தெரிந்தாலும் பேட்டி கொடுத்தாலும் அதனை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார் எலன் மஸ்க். அதற்கு இந்த புத்தகமே சாட்சி.