எல்விஸ் பிரெஸ்லி சிக்னல்!





பிட்ஸ்!
டான்ஸ் சிக்னல்!
ஜெர்மனியிலுள்ள ஃபைட்பெர்க் நகரில் அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் சிக்னேச்சர் நடன ஸ்டைல்களில் போக்குவரத்து சிக்னல்களை அமைத்துள்ளனர். எல்விஸ் பிரெஸ்லி அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றிய 1958-60 காலத்தில் ஜெர்மனி வந்ததை நினைவுகூரும் வகையில் சிக்னல் விளக்குகள் அரசின் அனுமதி அமைக்கப்பட்டுள்ளன.இதற்கான செலவு ரூ.74 ஆயிரத்து 339 ஆகும்.
ஸ்டண்ட் சாதனை!
ஸ்விட்சர்லாந்திலுள்ள எபிகோன் பகுதியிலுள்ள மால் ஒன்றில் ஃப்ரெடி நாக் என்ற சண்டை பயிற்சியாளர் அசாதாரண சாதனை செய்தார். கயிற்றில் நாற்காலியை செட் செய்து பேலன்ஸ் செய்து ஒன்றல்ல இரண்டல்ல எட்டரை மணிநேரம் தாக்குப்பிடித்து மக்களை வாய்பிளக்க வைத்துள்ளார். சாப்பிட்டுக்கொண்டும் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டும் ஃப்ரெடி இச்சாதனையை செய்துள்ளார். வணிக மாலின் முதலாமாண்டு கொண்டாண்டத்திற்காகவே இச்சாதனை.
கைகளால் ஸ்கேட்டிங்!
ஜெர்மனியின் பாக்ஹோல்ட் பகுதியைச் சேர்ந்த மிர்கோ ஹான்சென் கைகளில் ஸ்கேட்டிங் சக்கரங்களை பொருத்து 164 அடி பயணித்து 8.55 நிமிடங்கள் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். “நான்கு ஆண்டுகள் செய்த கடும் பயிற்சியின் விளைவே கின்னஸ் சாதனை” என பூரிக்கிறார் மிர்கோ ஹான்சென்.