ஐரோப்பாவின் வல்லரசு கமிஷனர்!







ஐரோப்பாவின் போலீஸ்!

மார்க்கரே விஸ்டேகர்.. கடந்த நான்கு ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியனின் 28 நாடுகளில் நடக்கும் பிஸினஸ் விதிமீறல்களை சட்டப்படி தண்டித்த பொறுப்புமிக்க அதிகாரி. ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள் என பில்லியன் டாலர் கம்பெனிகளின் விதிமீறல்களை சமரசமின்றி தண்டித்து புகழ்பெற்ற பெண்மணி விஸ்டேகர்.

டென்மார்க்கில் பிறந்த விஸ்டேகர், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சி உறுப்பினர். ஆப்பிள் போனை பயன்படுத்துபவருக்கு ஃபேஸ்புக்கில் கூட கணக்கு கிடையாது. அரசியல்வாதியாக புகழ்பெறுவதற்கு முன் போர்ஜென் எனும் டிவி தொடரில் நடித்தவர். “ஜனநாயக நாட்டில் விதிகள் அனைவருக்கும் பொதுவானவைதான். டெக் நிறுவனங்கள் வரியை கட்டாமல் மீறுவதை எப்படி அனுமதிப்பது?” எனும் விஸ்டேகர், கூகுளுக்கு 2.7 பில்லியன்(2017), ஸ்டார்பக்ஸ்(33.5 மில்லியன்(2015)), ஆப்பிள்(14.8 பில்லியன்(2016), ஃபேஸ்புக்(125 மில்லியன்(2017)) வரி விதித்து அலறவைத்தவரின் பதவி அடுத்த ஆண்டோடு நிறைவுக்கு வருகிறது. கட்சி ஆட்சியில் இல்லாத நிலையில், ஐரோப்பிய யூனியனில் அவர் மக்களுக்காக, சட்டத்தை காக்க செய்த போராட்டங்களை வரலாறு நினைவுகூரும்.