பிரபலங்களின் சிறுவயது வேலை என்ன?







நியூஸ் ஆளுமைகள்!

வால்ட் டிஸ்னி

1911 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி, தன் சகோதரர் ராய் மற்றும் தந்தை எலியாஸூடன் சேர்ந்த கான்சாஸ் டைம்ஸ் பத்திரிகையை 700 பேர்களுக்கு விநியோகித்து வந்தார். அதிகாலையில் 3.30 க்கும் எழுபவர், பள்ளிக்கு செல்வதற்குள் நாளிதழ்களை விநியோகிக்கும் பணியை 15 ஆம் வயது வரை செய்து வந்தார்.

மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர்

அட்லாண்டா ஜர்னல் கான்ஸ்டிடியூசன் என்ற பத்திரிக்கையை தன் அப்பாவுக்கு உதவியாக விநியோகித்து வந்தார் மார்ட்டின். கிடைத்த பணம் புத்தகங்களை வாங்க உதவுமே! சில ஆண்டுகளிலேயே பத்திரிகையின் விநியோக மைய உதவியாளரான மார்ட்டின், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாறு குறித்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து அரசியலில் முதல் அடி எடுத்து வைத்தார்.

ஆலன் பீன்

நாசாவின் அப்போலா 12 திட்டத்தில் விண்வெளி வீரராக சென்று வந்த ஆலன் பீன், சிறுவயதில் ஸ்டார் டெலிகிராம் என்ற பத்திரிகையை விநியோகித்து முன்னேறியவர்தான்.”தினசரி காலையில் எழுந்து இருள் படர்ந்த சாலைகளில் நாளிதழ்களை எடுத்துசெல்வது புதிய அனுபவம்” என்கிறார் ஆலன்பீன்.