நம்பிக்கை மனிதர்கள் 2018!




Image result for sriram venkataraman ias



நம்பிக்கை மனிதர்கள்

ஸ்ரீராம் வெங்கட்ராமன்(32), ஐஏஎஸ்

தேவிக்குளத்தின் உள்ளூர் ஆட்களுக்கு சப் கலெக்டர் ஸ்ரீராம் என்றால் அவ்வளவு மரியாதை. என்ன காரணம், ஆக்கிரமிப்புகள் மற்றும் மணல் மாஃபியாக்களிடம் காட்டிய அதிரடிதான் காரணம். உடனே என்ன செய்வார்கள்? பணிமாற்றம்தான். 2013 ஆம் ஆண்டு பேட்ச் குடிமை அதிகாரி, பதனம் திட்ட துணை கலெக்டர் பணி. இவரின் அதிரடியில் கலங்கிய இரண்டு எம்எல்ஏக்கள், ஒரு எம்பி தர்ணா போராட்டம் நடத்தியது மக்களுக்காக அல்ல; ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்கள் சம்பாதிப்பதை தடுத்ததால். தேவாலயத்திற்கு சொந்தமான நிலத்தையே கம்யூனிஸ்டுகள் அபேஸ் செய்ததை ஸ்ரீராம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.  அதற்கு பரிசு, பணிமாற்றம் செய்யப்பட்டு தொழிலாளர்துறை செயலாளர் ஆகியுள்ளார். 

மனிதநேய ஆட்சியர்கள்


கேரளாவின் புயல் பாதித்த பகுதிகளில் பேரிடர் மேலாண்மை பணியாற்றிய கண்ணன் கோபிநாத்(தாத்ரா,ஹவேலி ), கிருஷ்ண தேஜா(ஆலப்புழா துணை ஆட்சியர்), ஜீவன் பாபு(இடுக்கி ஆட்சியர்), எம்ஜி ராஜமாணிக்கம் (உணவுத்துறை கமிஷனர்)ஆகியோர் போற்றத்தக்க மனிதர்கள். இதில் கண்ணன் கோபிநாத் தன்னார்வலராக பணியாற்றியதோடு தன் மாவட்ட நிதியாக ஒரு கோடி வழங்கியது யாரையும் நெகிழவைக்கும் காட்சி. அரசு அதிகாரிகள் பணியாற்ற மாட்டார்கள் என கூறுவதை பொய்யாக்கிய சாட்சிகள் இவர்கள். 


ககன்தீப் சிங்(28), உதவி ஆய்வாளர், உத்தர்காண்ட்

முஸ்லீம் இளைஞனை படுகொலை செய்ய முயன்ற கூட்டத்திடமிருந்து சிங் போலீஸ் இளைஞனை மீட்கும் வீடியோ இணையத்தில் சில மாதங்களுக்கு முன்பு வைரலானது(மே மாதம்). அதன் நாயகர் ககன்தீப்சிங். இதற்காக நாயகன் என போற்றப்பட்டாலும் இந்து வெறியர்களிடமிருந்து கொலைமிரட்டல்கள் தினசரி வந்து கொண்டிருக்கின்றன. இந்து தோழியை சந்தித்த முஸ்லீம் இளைஞனை போட்டுத்தள்ள கொலைவெறியோடு காத்திருந்த கூட்டத்தின் குத்துக்களை சிங் பெற்றுத்தான் முஸ்லீம் இளைஞரை காப்பாற்றினார். ஜாதி மதம் பார்க்காமல் இளைஞனை காப்பாற்ற தன்னுயிரையும் தரத்துணிந்த அர்ப்பணிப்பு சிங்கை மென்மேலும் உயர்த்தும். 


இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங்

உ.பி முதல்வர் யோகி கூட மறக்க நினைக்கிற பெயர். ஆனால் மறக்க முடியாது. ஆட்டு இறைச்சியை மாட்டு இறைச்சி என்று கூறி முஸ்லீம் ஒருவரை இந்து வெறிக்கும்பல் படுகொலை செய்தது. இந்த உண்மையை  கண்டறிந்த சுபோத் குமாரை பணிமாற்றம் செய்து பணியவைக்க பார்த்தது அதிகார வர்க்கம். ஆனால் எதற்கு அசைந்து கொடுக்காதவரை திட்டம் போட்டு கலவரம் என்று கூறி கொன்றது உ.பி அரசு. 2018 ஆம் ஆண்டில் மட்டும் 130 போலீஸ்காரர்கள் பணியில் இருக்கும்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுங்க, பசு பாதுகாப்பாக மேயுதான்னு பாருங்க. வரலாறு முக்கியம் அல்லவா?

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். 

மேதா தத்தா, கௌசானி பானர்ஜி, தினேஷ் கல்லுங்கள், ஷியாம் யாதகிரி. 










பிரபலமான இடுகைகள்