போராளிப் பெண்கள் 2018
ஏஞ்சலா சைனி(38)
பஞ்சாபில் பிறந்த ஏஞ்சலா சைனி அறிவியல் எழுத்தாளர். பெண்களை அறிவியல் துறைக்குள் அனுமதிக்காத ஆண்களின் மேலாதிக்கத்தை கூறும் இன்ஃபெரியர் ஹவ் சயின்ஸ் காட் வுமன் ராங் எனும் நூலை எழுதியுள்ளார். தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் சைனி, படிக்கும்போது கணக்கு வகுப்பில் அவர் மட்டுமே ஒரே ஒரு சிறுமி. ”ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட 1945 வரை எந்த ஒரு பெண்ணுக்கும் பட்டம் வழங்க தயாராயில்லை. நான் சந்தித்த அறிவியலாளர் நேரடியாக என்னிடமே கணக்கில் பெண்கள் பிரமாதமானவர்கள் என பாலின வெறுப்போடு பேசினார்” என உறுதியாக பேசுகிறார் சைனி.
அடுத்த புத்தகமும் அறிவியல் எப்படி பெண்களை பாலின பேதத்துடன் நடத்துகிறது என்பதைப் பற்றி எழுத திட்டமிட்டுள்ளார் சைனி.
பி விஜி(50)
கோழிக்கோட்டிலுள்ள கடைகளில் பெண்கள் நிம்மதியாக உட்காரந்து வேலை பார்க்க விஜியின் போராட்டம் முக்கியக்காரணம். 2018 ஆம் ஆண்டின் ஜூலையில் கேரள அரசு, புதிய தொழில்துறை சட்டம் மூலம் பெண்களுக்கான வேலைச்சூழலை உறுதி செய்துள்ளது. ”பெண்கள் வேலையில் கடுமையாக ஆண்களோடு போட்டியிட்டு உழைக்கிறார்கள் எனில் மாலையில் ஆண்களின் வன்முறைகளுக்கும் அவர்கள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. தினசரி மாலையில் பெண்கள் அழுவது நாங்கள் பார்க்கும் சாதாரண காட்சி” என்கிறார் விஜி. அன்வேஸி என்ற தன்னார்வ நிறுவனத்தில் சேர்ந்த பின்புதான் பெண்களின் உரிமைக்கு போராடும் ஆர்வம் பிறந்திருக்கிறது. இதற்கு காரணம், அவ்வமைப்பின் இயக்குநரான கே.அஜிதா. பின்னாளில் பெண் கூட்டு என்ற அமைப்பை தொடங்கிய விஜி, பெண்கள் வேலையின் இடையே கழிவறைக்கும் செல்லவும், அமர்ந்து வேலை பார்க்கவும் போராடி வென்றுள்ளார்.