புவியீர்ப்பு விசையை கணக்கிடும் புதிய வழி!
புவிஈர்ப்பு விசையை எப்படி கணக்கிடுவது?
கிலோகிராமை கணக்கிடும் கருவி எப்போதும் சரியாக இருக்கும் என எப்படி நம்புவது? “இனியும் குறிப்பிட்ட இடத்திலுள்ள(பாரிஸ், பிரான்ஸ்) கருவியை நம்பி அளவீடுகளை நாம் சரிபார்க்க அவசியமில்லை” என்கிறார் ஒடாகோ பல்கலையில் இயற்பியல் துறை பேராசிரியரான மிக்கெல் ஆண்டர்சன்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பிரான்சிலுள்ளது போல அளவீட்டு கருவிகள் இல்லை.
“ஒரேயொரு கருவியை வைத்து அளவீடுகளை செய்வது ஆபத்து. அது பழுதடையும்போது நாம் என்ன செய்வது? அதற்கு மாற்றாக குறைந்த விலையில் அளவீடுகளுக்கான கருவியை உருவாக்குவதே எங்கள் ஆராய்ச்சி” என்கிறார் ஆண்டர்சன்.
லேசர் நுட்பம் மற்றும் குவாண்டம் தியரிகளை பயன்படுத்தி கருவியை உருவாக்கியுள்ளனர். இதில் பயன்படுத்தும் அணுக்கள் கிராவி மீட்டர் போல துல்லியமாக அளவீடுகளை கண்டறிய உதவுகிறது.