கடந்து வந்த பாதை - 2018
2018 ஜனவரி 22
அமேஸான் காசாளர் இல்லாத முதல் கடையை அமெரிக்காவின் சியாட்டிலில் திறந்தது.
பிப். 4
பிலடெல்பியா ஈகிள்ஸ் சூப்பர் பவுல் போட்டியில் வரலாற்று வெற்றியை சுவைத்தது.
பிப். 22
நான்கு உலக சாம்பியன் பட்டங்களை வென்ற லிண்ட்ஸே வோன், ஒலிம்பிக் போட்டியில் கடைசி முறையாக பங்கேற்றார்.
மார்ச் 4
சிறந்த திரைக்கதைக்காக முதல் கருப்பின எழுத்தாளர் ஜோர்டன் பீலே ஆஸ்கர் வென்றார்.
மார்ச் 6
மேற்கு வர்ஜீனியாவில் ஆசிரியர்களின் போராட்டம் வெடிக்க பள்ளிகள் அடைக்கப்பட்டன.
மார்ச் 20
கென்யாவில் மிஞ்சிய ஆண் காண்டாமிருகமும் இறந்துபோனது.
மே 16
காஷ்மீரில் ரமலான் மாதத்தில் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மே 17
அமெரிக்காவின் சிஐஏ தலைவராக ஜினா காஸ்பெல் பொறுப்பேற்பார் என செனட் சபை முடிவு செய்தது.
ஜூன் 12
முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம்மை சந்தித்து பேசினார்.
ஆக. 2
ஒரு ட்ரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆப்பிள் மாறியது.
செப். 7
ராபர்ட் முல்லர் கவுன்சில் விசாரணையில் குற்றவாளியாக ஜார்ஜ் பாபாடோபௌலோஸ் உறுதிப்படுத்தப்பட்டார்.
செப். 18
போயிங் 777 பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது.
கனடாவில் மரிஜூவானா அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது.
நவ. 16
பிரான்சின் பாரிசிலுள்ள கி.கி அளவீட்டுக்கான மெட்டல் சிலிண்டர் அளவீடு கணக்கிடப்பட்டது.
டிச. 8
ஏஞ்சலா மெர்கல், கிறிஸ்துவ ஜனநாயக ஐக்கிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
நன்றி - மேகன் மெக்கிளஸ்கி, டைம்.