இடுகைகள்

கிருஷ்ணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காகிதத்தில் கலைப்பொருட்களை செய்து அசத்தும் கிருஷ்ணா!

படம்
  பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. இவர் செய்தித்தாள், பழைய காகிதங்கள் என எதையும் விட்டு வைக்காமல் அதில் கலைப்பொருட்களை செய்வதில் தேர்ந்தவர். தனது கலைப்பொருட்களை பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அண்மையில் டெல்லிக்குச் சென்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், கிருஷ்ணாவின் காகித கலைபொருட்களை வாங்கிக்கொண்டுதான் சென்றார். இதற்காக அவர் விமானநிலையத்தில் பொறுமையாக காத்திருந்தார் என்பதுதான் முக்கியமானது.  கிருஷ்ணா புதிய தூரிகை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிராம பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது குரு அன்பழகன் மூலம் காகிதத்தில் சிற்பங்களை செய்யத் தொடங்கியுள்ளார். பிறகு அதனை பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தர தொடங்கினார். காகிதத்தில் சிற்பங்களை செய்து அதற்கு வண்ணம் தீட்டி சோதிக்கத் தொடங்கினார். இப்போது அதில் உலோக வண்ணங்களை தீட்டி வருகிறார்.  பார்க்க எளிதாக இருந்தாலும் செய்வது கடினமானதுதான். குறிப்பிட்ட சிலை மாடலை பார்த்து, காகிதத்தை வளைத்து சிற்பங்களை செய்கிறார். இதில், சிலை அமைப்பை கச்சிதமாக செயத மூங்கில்

தடுப்பூசி பற்றிய தகவல்களை முறைப்படி மக்களுக்கு தெரிவிப்பதே அரசின் கடமை! - வைரஸ் ஆராய்ச்சியாளர் ஷாகித் தமீல்

படம்
              ஷாகீத் தமீல் நோய் தடுப்பியலாளர் , அசோகா பல்கலைக்கழகம் எதற்காக தடுப்பூசியை தேசவிரோதம் என்று கூறுகிறார்கள் ? நான் தேசவிரோதி என்று கூறப்பட்டு வருபவர்களில் ஒருவன் . நான் இதற்கு என்ன பதில் சொல்லுவது ? எங்களை தேசவிரோதிகள் என்று கூறுபவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல தகுதியானவர்கள் . நாங்கள் சில எச்சரிக்கைகளை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் . நாங்கள் நீங்கள் இதனை கருத்தில் கொள்ளவில்லையென்றால் அதனால் ஆபத்துதான் நேரும் . நோய்தடுப்பியலாளராக பறவைக்காய்ச்சலை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? பறவைக்காய்ச்சல் எப்போதும் பனிக்காலத்தில்தான் ஏற்படும் . 2006 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 25 முறை பறவைக்காய்ச்சல் 15 மாநிலங்களைத் தாக்கியது . அது வானிலிருந்து விழவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் . கோவிட் காலம் என்பதால் மக்கள் பதற்றமாக இருக்கிறார்கள் . பறவைக்காய்ச்சல் என்பது மிகவும் அரிதாகவே மனிதர்களைத் தாக்குகிறது . இந்த பாதிப்பை நம்மால் தீர்க்க முடியும் . இதற்கான மருந்துகள் உள்ளன . தடுப்பூசியை இவ்வளவு வேகமாக கண்டுபிடிக்கவேண்டிய அவசியம்