இடுகைகள்

பென்சிலின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடேங்கப்பான்னு சில உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்! வாங்க பார்ப்போம்!

படம்
                      பென்சிலின் 1928 பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் முக்கியமான மருந்து இது . அலெக்ஸாண்டர் பிளெமிங் விபத்தாக கண்டுபிடித்த கண்டுபிடிப்பு பல லட்சம் உயிர்களை காப்பாற்ற உதவியது . இதற்காக அவருக்கு 1945 ஆம் ஆண்டு நோபல் விருது வழங்கப்பட்டது . இன்று பென்சிலின் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது . கிரடிட் கார்டு 1958 அமெரிக்காவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கி கிரடிட் கார்டை அறிமுகப்படுத்தியது . தொடக்கத்தில் இதனை சிலர் ஏமாற்ற பயன்படுத்தினாலும் பின்னாளில் கிரடிட் கார்டு வெற்றிபெற்றது . 1976 ஆம் ஆண்டு இதன் பெயர் விசா என மாற்றப்பட்டது . இன்று உலகம் முழுக்க பயன்படும் முக்கியமான பணப்பரிமாற்ற கார்டுகளில் இதற்கு முக்கிய இடமுண்டு . ஸ்கேன் 1953 ஸ்வீடனிலுள்ள லண்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் அல்ட்ராசோனோகிராபி கண்டறியப்பட்டது . இதன்மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் உடலை எளிதாக அறிய முடிந்தது . இதன்மூலம் கர்ப்ப பையில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் எளிதாக அறிய முடிந்தது . ரேடார் 1935 டெத் ரே என்று பெயரில் பிரிட்டிஸ்

நீலநிற சீஸ் என்ன செய்யும்?

படம்
மிஸ்டர் ரோனி நீலநிற சீஸை உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமா? சரிவிகிதமான உணவைச் சாப்பிட்டால்தான் உடல் சரியாக இயங்கும். நீங்கள் கூறும் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் மட்டும் பாக்டீரியாக்களை எதிர்கொள்வதற்கான வழி பிறந்துவிடாது. ஆன்டி பயாடிக் மருந்துகள் கூட இன்று பாக்டீரியாக்களுக்கு எதிராக தேங்கி விட்டன. பாக்டீரியாக்களில் பலவீனமாக உள்ளவற்றை மட்டுமே அவை எதிர்கொண்டு தாக்கி அழிக்கின்றன. பென்சிலினை சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தினால் நீங்கள் சொன்னது போல, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. வயிற்றிலுள்ள நன்மை, கெடுதல் செய்யும் பாக்டீரியா என அனைத்துமே அழியும் விளைவுதான் ஏற்படும். எனவே மருந்தை மருந்தாக பயன்படுத்துவதே நல்லது. நன்றி - பிபிசி

ஆன்டிபயாடிக் அபாயம்! - மக்களை பலிகொள்ளும் துயரம்!

படம்
மிஸ்டர் ரோனி வெப்பமயமாதலை ஆன்டிபயாடிக் அதிகரிக்கிறதா? பென்சிலின் எதிர் நுண்ணுயிரி என்று நீங்கள் அறிவீர்கள். அதன் பின்னரே காயங்கள் பட்டு இறக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். நோய்த்தொற்று என்பது அவ்வளவு கொடுமையானதாக அன்று இருந்தது. இன்றும் கூட பல்வேறு உறுப்பு மாற்ற சிகிச்சைகள், முக்கியமான அறுவை சிகிச்சைகளில் எதிர் நுண்ணுயிரி மருந்துகளின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் தொட்டதற்கெல்லாம் இவற்றை நீங்கள் பயன்படுத்தினால் நம்மைத் தாக்கும் கிருமிகள் வலிமை பெற்று எழும். மீண்டும் இவை நம்மைத் தாக்கும்போது எதிர் நுண்ணுயிரி மருந்து வேலை செய்யாது. இதன் காரணமாக எதிர் நுண்ணுயிரி மருந்துகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர். தற்போது உலகில் பல நாடுகளிலும் நோய்த்தொற்று காரணமாக  ஏழு லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த எண்ணிக்கை இனி குறையாது. இன்னும் கோடிகளுக்கு மேல் பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. ஆன்டி பயாடிக்கை நான் பயன்படுத்தவே இல்லை என்று யாரும் கூறமுடியாது. நாம் குடிக்கும் பாலில் ஏராளம