இடுகைகள்

எறும்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எறும்புகளின் பரிணாம வளர்ச்சி!

படம்
எறும்புகள் குறித்த ஆய்வு அறுபது ஆண்டுகளாக எறும்புகள் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறவர், உயிரியலாளர் எட்வர்ட் ஓ வில்சன். விரைவில் 90 வயது ஆகப்போகிறது. ஆனாலும் ஆராய்ச்சியிலும், பேச்சிலும் உற்சாகம் குறையவில்லை. சிறுவயதிலிருந்தே அலபாமாவில் எறும்புகளை தேடிப்பிடித்து அதன் பின்னாலே அலைந்து திரிந்தவர், தன் 29 வயதில் ஹார்வர்டு பல்கலையில் எறும்பு ஆராய்ச்சியில் சேர்ந்தார். பின்னர் 1960 ஆம் ஆண்டு சூழலியலாளர் ராபர்ட் மெக் ஆர்த்தரோடு இணைந்து வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை அவரை புகழ்பெற செய்தது. அறிமுகம் போதும். அவரிடம் பேசுவோம். உங்களுக்கு இந்த ஜூனில் 90 வயது ஆகிறது என அறிந்தோம். முன்கூட்டியே உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி. ஆனால் எனக்கு 90 வயது ஆனதுபோல் உணர்வில்லை. 45 வயது ஆனது போலவே தோன்றுகிறது. நான் என் நாற்பது வயதில் படுக்கையிலிருந்து எழுந்த என்ன செய்வேனோ அதையேதான் 90 வயதிலும் செய்து வருகிறேன். நான் ஆண்டுக்கு ஒரு புத்தகம் என இயற்கை குறித்து எழுதி வந்தேன். இன்றும் இயற்கை சார்ந்த பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். கோரங்கோசா இயற்கை பூங்காவு