இடுகைகள்

ஐடியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால இந்தியா 2047 - ஐஐடி மெட்ராஸ் - ரிசர்ச் பார்க் - கனவுகளும் சாத்தியங்களும்

படம்
பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் தொழில்முனைவோர் புனீத் குப்தா வர்னாலி தேகா, ஐஏஎஸ்   எதிர்கால இந்தியா 2047 சென்னை தரமணியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஆராய்ச்சி மன்றில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த மார்ச் 7 தொடங்கி 9ஆம் தேதிவரையிலான இமேஜினிங் (Imagining India 2047) இந்தியா 2047 என்ற கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஐ.ஐ.டி மெட்ராஸ் அமைப்பு ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், நேரம் தவறாமைதான்.  நாங்கள் ஒன்பது மணிக்கு செல்லவேண்டிய நிகழ்ச்சி இது. ஆனால், நிகழ்ச்சி பற்றி தகவல் தெரிந்ததே பத்து மணிக்குத்தான். பிறகு, புரோகிராம் பார்த்து தகவல்களை கிரகித்து ஆசிரியரிடம் அனுமதி வாங்கி கிளம்ப பதினொரு மணி ஆகிவிட்டது. சக உதவி ஆசிரியர் காந்தி மகான் உதவிக்கு வந்தார். முதலில் ரயிலுக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால் காந்தி, பஸ்ஸிற்கு போகலாம் என்றார். ஏ1 பஸ்சில் ஏறி உட்கார்ந்தால் ஆமை போல மெல்ல ஊர்ந்தது. எனவே மயிலாப்பூர் குளத்தில் இறங்கினோம். உடனே ஓட்டமாக ஓடி, லோக்கல் ட்ரெயினில் ஏறினோம். ஏறும்போதே காந்தி, யுடிஎஸ் ஆப்பில் டிக்கெட்டை இருவருக்கும் எடுத்துவ

தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா?

படம்
Pinterest/we heart it ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா? ஆர்க்கிமிடிஸ் யுரேகா என்று கத்தியதை மனதில் வைத்து இப்படியொரு கேள்வி வந்திருக்கலாம். நாம் எதை மனதில் தீவிரமாக யோசிக்கொண்டு இருக்கிறோமோ அதற்கான தீர்வு நமக்கு கிடைக்கும். அது எப்படி கிடைக்கிறது என்பதுதான் மேஜிக். தூங்கும்போது பாடலைக்கேட்டுக்கொண்டே தூங்குகிறார் ஒருவர் என்றால் நம்மால் அதனை பதிவு செய்ய முடியாது. தூங்கும்போது மூளை ஓய்வெடுக்கிறது என்பது உண்மை. தூக்கத்தில் கற்பதை ஹிப்னோபீடியா என்று கூறுகின்றனர். இதற்கு மருத்துவரீதியாக வரலாறும் உண்டு. 1914 ஆம் ஆண்டு ஜெர்மன் உளவியலாளர் ரோசா ஹெய்ன் என்பவர் இதுகுறித்த ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒருநாளில் தினசரி கற்பதைவிட மாலைநேரத்தில் நாம் கற்பது அதிகம் என்பது இவரின் ஆய்வு முடிவு. தூக்கம்தான் நமது அன்றைய நிகழ்ச்சி நினைவுகளை மாற்றி அமைத்து சேமிக்க வேண்டும் என்றால் சேமித்தும் இல்லையென்றால் அதனை அழித்து நம் மனதில் உணர்ச்சி சமநிலையை ஏற்படுத்துகிறது. 1950 ஆம்ஆண்டு செய்த ஆய்வுகளில் தூக்கத்தில் கற்பது என்பது உடான்ஸ் ப்ரோ