இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டிக் டிக் டிக் - மிஸஸ் டக்ளஸ்

படம்
pexels.com மிஸஸ். டக்ளஸ் கூடா நட்பு ஆடும் புலியும் ஒன்றாக படுத்து தூங்கலாம். ஆனால் ஆட்டுக்கு தூக்கம் வராது. எதுவுமே.. எதுவும் சுலபமல்ல, ஆனால் எல்லாமே சாத்தியம்தான். ஒலியின் வலிமை ஒன்றைச் சத்தமாக சொல்வதை விட கிசுகிசுப்பாக சொன்னால் மக்கள் நம்பிவிடுகிறார்கள். இரண்டு விதிகள் வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டே இரண்டு விதிகளைக் கடைப்பிடித்தால் போதும். 1. உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 2......................................................................... எது வேண்டும்? கண்ணீர் அனுதாபம் தரும். ஆனால்  வியர்வைதான் பலன் தரும். மோசம் உண்மையைச் சொல்லி ஒருவரை அழ வைப்பது எவ்வளவு மோசமோ, அத்தனை மோசம் பொய்யைச் சொல்லி அவரைச் சிரிக்க வைப்பது. அனுபவ வேலைக்காரன் அனுபவம் உங்களுக்கு கற்றுத்தராது. கதவைத் திறந்துவிடும் பணியாள். நீங்கள்தான் கம்பீரமாக உள்ளே செல்ல வேண்டும். உண்மை எந்த ஒரு சுறுசுறுப்பான விவாதத்தையும் ஒரு சின்ன உண்மையால் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும். உண்டு ஆனால்.. அதிர்ஷ்டம் என்பது உண்டுதான்.

அனைவரையும் சந்தோஷப்படுத்த முடியுமா?

படம்
unsplash டிக்! டிக்! டிக்! ஆனந்த விகடனில் 2008 ஆம் ஆண்டு வெளியான மிஸஸ். டக்ளஸ் எனக்கு பிடித்தமான பகுதி. ஜாலியான பொன்மொழி முதல் சீரியஸ் வரையில் முயற்சிப்பது இப்பகுதியின் சிறப்பு. சந்தோஷம் அல்ல! எல்லோரையும் நீங்கள் சந்தோஷப்படுத்த விரும்பினால் ஒருவரும் அதை விரும்ப மாட்டார்கள். காப்பியடி வாழ்க்கை ஒரு தேர்வு  இதில் ஒரு வசதி என்னவென்றால், இந்தத் தேர்வை நன்றாக எழுத, சிறந்த மாணவரைப் பார்த்து நாம் தாராளமாக காப்பியடிக்கலாம் தப்பில்லை. மெமரி டானிக் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள ஒரே வழி, அதை எப்படியாவது மறக்க முயற்சி செய்வதுதான். பிரிதல் தேடல் உண்மையான நண்பரைப் பிரிவது கடினம் கண்டுபிடிப்பது அதைவிடக் கடினம். 1:60 உங்கள் ஒவ்வொரு நிமிட கோபமும் வீண்டிக்கிறது உங்களின் அறுபது நிமிட ஆனந்தத்தை நன்றி: ஆனந்த விகடன்

லவ் இன்ஃபினிட்டி: என்னை ஏன் நம்ப மறுத்தாய்?

படம்
pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ச.அன்பரசு வரிகளை மடக்கி எழுதினால் கவிதை என்று உலகம் பார்க்கும் என்பதை புரிந்துகொண்டபோது இப்படி எழுதினேன். எப்படி மாற்றுவேன்? புது வீடு  எல்லாமே புதுசாய் என்னால்  எடுத்துப் போக முடிந்தது நீயில்லாத வாழ்க்கையையும் நிசப்தமான மனசையும்தான்.  புது வீட்டைக் காட்டிலும்  பழைய வெளிச்சம் குறைந்த  இருளான மழை ஒழுகும் நீ வந்து போன  நீ ஒளிந்து ஓடி விளையாடிய நீ தலை இடித்துக்கொண்ட தாழ்வாரம்,  நீ நடந்த சுவடுகள் அழியாமல் இருக்கும் என் பழைய வீடு அற்புதமானது.  வீடு மாற்றிக்கொள்ளலாம் மனசை எப்படி மாற்ற????? அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லி கெடுக்க நினைக்கலாம் நீ எப்படி நம்பலாம்? என்மேல் சந்தேகம் எப்படி வரலாம்? உனக்கு அவள் தோழி எனக்கு அவள் யாரோ? நல்லவர்களுக்கு தீமை விளையும்போது தடுக்க நினைப்பதும், தடுப்பதிலும் தவறில்லை பாம்புக்கு பால் வார்த்தால்? அதனால்தான் அனைத்தும் அறிந்தும் அமைதியாக இருக்கிறேன். நாம் தப்பு செய்தால்தானே பிரச்னை வருகிறது? அவள் உப்பு தின்றாள், தண்ணீர் இப்போதுதான் குடிக்கிறாள். அவ்வளவுதான். அதிக

ஓசாமைப் போட்டுத்தள்ளிய கதை!

படம்
Jesus and the Jewish Roots of the Eucharist   By Brant Pitre இயேசுவின் கடைசி விருந்து குறித்து அறிந்ததை விட அது தொடர்பான படங்களை ஓவியங்களை அதிகம் பார்த்திருப்பீர்கள். இயேசுவுக்கு யூதர்களுக்கும் உள்ள உறவு பற்றி தீர்க்கமாக விளக்கிப் பேசும் நூல் இது.  The Power of Charm   By Brian Tracy and Ron Arden மனித உறவுகளை மேம்படுத்தி வணிகத்தை மேம்படுத்துவது என்று விளக்குகிறார்கள் ஆசிரியர் பிரையன் ட்ரேசி மற்றும் ரோன் ஆர்டன். பிறருக்கு நம்பிக்கையூட்டும் உடல்மொழி, பேச்சு குறித்த பயிற்சிகள், ஆலோசனைகள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.  Beautiful Boy   By David Sheff நியூயார்க் டைம்ஸின் சிறப்பான விற்பனை நூல் இது. பத்திரிகையாளரின் மகன் ஒருவர், போதைமருந்து, ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் கதை. இதனை சினிமாவாகவும் எடுத்தனர்.  No Easy Day   By Mark Owen with Kevin Maurer ஒசாமா பின்லேடனை பாக் புகுந்து போட்டுத்தள்ளியது அமெரிக்காவின் சீல் எனும் படை. அதில் அப்போது இருந்த வீரர் ஒருவர், அதனை எப்படி சாதித்தோம் என சூப்பராக விளக்குகிறார். புக் விற்க இது போதாதா?  நன்றி: புக்பப்  

பாலின பாகுபாடற்ற பள்ளி சாத்தியமா?

படம்
The Educator பாலின பாகுபாடற்ற சூழல் சாத்தியமா?  பாலின பாகுபாடற்ற குழந்தைகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான பொம்மைகள், உடைகள் உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியுள்ளன. ஆண்களுக்கு ப்ளூ கலர், பெண்களுக்கு பிங்க் கலர் என பிரிக்கும் பாகுபாடு கூட இனி இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு கார், ரயில் பொம்மைகளும் பெண் குழந்தைகளுக்கு கரடி, பார்பி பொம்மைகளும் வாங்குவது கூட தற்போது குறைந்து வருகிறது. என்ன காரணம்? பாலின பாகுபாடு குறித்து உணர்வு பெற்றோர்களுக்கும் ஏற்பட்டதுதான். பாலின பேதமற்ற உடைகள் பாலின பாகுபாடற்ற கலாசாரத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கான பொம்மை, உடை என்பது தனித்தனியான தேர்வாக இருக்காது. பெண்குழந்தைகள் கிச்சன் செட் வைத்து விளையாடுவதும் கூட அவர்களின் தேர்வாகவே இருக்கும். மேற்குலகில் தொடங்கிய இந்த கலாசாரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம், ஃபிளிப்கார்ட், தன்னுடைய வலைத்தளத்தில் பாலின பாகுபாடற்ற பொம்மைகளுக்கான ஃபில்டர் ஒன்றை உருவாக்கியுள்ளதுதான்.  இதனால் என்ன லாபம்? குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் உலக

உளவியல் பிரச்னைகளை கவனியுங்க ப்ளீஸ்!

படம்
freepik உளவியல் நோய்கள் மன அழுத்தம், பிளவாளுமை, சீஸோபெரெனியா ஆகிய நோய்களால் உலகமெங்கும் 383 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மட்டும் மனநல சிகிச்சை பெற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர். மனநலப் பிரச்னைகளுக்கு தலா ஒருவருகுக செலவாகும் சிகிச்சைத்தொகை 159 டாலர்கள்(தோராய அளவு) விர்ச்சுவலாக மனநல சிகிச்சை வழங்கும் டாக்ஸ்பேஸ் சேவைக்கு செலவாகும் தொகை 196 டாலர்கள். மனநல சிகிச்சை பெறாத வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை  85 சதவீதம். ஜிம்பாவேயிலுள்ள உளவியலாளர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. எத்தனை பேருக்கு? 16.5 மில்லியன் மக்களுக்கு. நன்றி: க்வார்ட்ஸ்

பாலினப் பாகுபாடு நம் மனதில் உள்ளது

படம்
Daily Star பாலினப் பாகுபாடு என்பது மனநோய்! பாலின பாகுபாடற்ற பள்ளிகள் என்ற கட்டுரையை அண்மையில் எழுதினேன். அதைப் பாராட்டிய நண்பர் எனக்கு அதிலுள்ள உடை கான்செஃப்ட் புரியவில்லை. என்ன சொல்லவருகிறாய்? ஆண் குழந்தைகளுக்கு கவுன் வாங்கித் தருவாயா? என்றார். உண்மைதான்.அதிலுள்ள உண்மை எனக்கு புரிந்தது. ஆனால் அவர் புரிந்துகொள்ளாத சமாச்சாரம், ஆண் பெண் என்ற உடைக்கான கோடுகள், எல்லைகள் மங்கி வருவது மட்டுமே நான் கூறவந்தது. இதுதொடர்பாக குங்குமத்திலும் நான் முன்னமே கட்டுரைகளை எழுதியுள்ளேன். ரன்வீர்சிங் பேஷன் ஷோவில் ஜென்டர் நியூட்ரல் உடைகளை அணிந்துவந்து அவரது காதலிக்கே ஷாக் கொடுத்தார். பாஜிராவ் மஸ்தானி விழாவில் அவர் அணிந்த பேன்ட் கூட அந்த ரகம்தான். எனது உறவினர் வீடுகளில் பெண்ணுக்கு டீ மட்டும், ஆணுக்கு ஹார்லிக்ஸ் தரப்படும் வித்தியாசத்தை கண்ணாரப் பார்த்துள்ளேன். பெண்கள் எங்களது ஊரில் பாரமாக பார்ப்பதும், அவர்களுக்கு செய்யும் சிறிய உடைகள் அல்லது கல்விச்செலவும் கூட அரசுக்கு வரி கட்டுவது போலவே நினைக்கிறார்கள். இவையும் பாலினப் பாகுபாடு குறித்த கவனத்தை ஏற்படுத்தும் கட்டுரை எழுதக்காரணம். குழந்தைகள்

புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்?

படம்
Livescience புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்? இன்று ஆர்கானிக் ட்ரெண்டிங்தானே மேட்டர். பலரும் சோப்பில், ஷாம்பூவிலுள்ள பாரபீன் என்ற பெயரைப் பார்த்து டரியலாகி ஆர்கானிக் சோப்பு கிடையாது என பதறி ஓடி கிரிஸ்டல் சோப்புகளாகப் பார்த்து அதிக காசு செலவு செய்து ஆரோக்கியம் காத்து வருகிறார்கள். உண்மையில் பாரபீனில் என்ன பிரச்னை. “பாரபீன்கள் பாரா ஹைட்ராக்ஸிபென்சோயிக்(PHBA)  என்ற வேதிப்பொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கையாகவே கேரட் மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள வேதிப்பொருள் இது.” என்றார் அமெரிக்கன் வேதிப்பொருள் கௌன்சில் இயக்குநரான கேத்ரின். பழங்களிலுள்ள இந்த பாரபீன் எதற்கு உதவுகிறது? நம் உடலிலுள்ள அமினோ அமிலங்களை உடைப்பதற்குத்தான். பாரபீனில் மெத்தில் பாரபீன், எத்தில் பாரபீன், புரொபைல் பாரபீன், புட்டிபாரபீன், ஐசோபாரபீன், ஐசோபுட்டி பாரபீன் ஆகிய வகைகள் உண்டு. அழகுசாதனப்பொருட்களில் பாரபீன் எதற்குப் பயன்படுகிறது? அதனை பதப்படுத்தும் பயன்பாட்டிற்காகத்தான்.  நாம் சாப்பிடும், பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 90 சதவீதம் பாரபீன் உண்டு. அமெரிக்காவின் எஃப்டிஏ சட்டப்படி லேபிளில

இறப்புக்கு காரணம் டீசல்!

படம்
உலகம் முழுவதும் தோராயமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டில் பாதிக்கப்பட்டு மரணத்தை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பான அமெரிக்க ஆய்வு வெளியாகி அதிர்ச்சியூட்டி உள்ளது. காற்று மாசுபாடு மக்களின் சில நோய்களுக்கு காரணம் என்பது பொதுவாக பலரும் அறிந்ததே. ஆனால் முழுமையாக ஒருவரின் இறப்புக்கு காரணம் என்று ஆய்வறிக்கை திடமாக கூறுவது அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.  எண்ணிக்கையில் 3 லட்சம், உலகளவில் 40 சதவீதம் என டீசல் இஞ்ஜின்கள் மனிதர்களை பலிவாங்கி வருகின்றன. பொதுவான சதவீதம் என்று கூறினாலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த அளவு 66 சதவீதமாக உள்ளது. இன்டர்நேஷ்னல்  கௌன்சில் ஆன்  க்ளீன்(ICCT) என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  2015 ஆம் ஆண்டு இந்த அமைப்பும், அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது மாசுபாட்டு குற்றத்தைக்கூறி(2015) நிரூபித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.  ஐரோப்பாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஊறு விளைவித்துவருவது டீசல் இஞ்ஜின்கள் ஆகும். மாசுபாடு குறித்த சரியான கொள்க

கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம்! சென்னை கார்ப்பரேஷன் ஐடியா

படம்
IndiaSpend கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம் ! சென்னை குடிநீர் வடிகால் வாரியம் (CMWSSB) கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கலாம் என்ற திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்துள்ளது.  பருவமழை தவறியதாலும், முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் கடைபிடிக்காததும் சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை அதிகரித்துள்ளது. மழைநீர் பொய்த்ததால் சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் வற்றிவிட்டது. இந்நிலையில் எதிர்வரும் கோடையை எப்படிச் சமாளிப்பது? இதற்குத்தான் குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீரை சுத்திகரித்து தினசரி, 260 மில்லியன் லிட்டர் நீரை குடிநீராக வழங்கும் திட்டத்தை அரசுக்கு அளித்துள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. குடிநீர் கிடைக்குமா? இத்திட்டத்தின் மூலம் பெருங்குடி ஏரி, நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, போரூர் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, ரெட்டி ஏரி ஆகிய நீர்நிலைகள் பயன்பெறவிருக்கின்றன. தற்போது நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல

உணவு உற்பத்தி சரியக் காரணம் என்ன?

படம்
Sadhguru உணவு உற்பத்தி குறைகிறதா? பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகள் அழிவால், உணவு உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.  உலகிலுள்ள பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் காடுகள் அழிந்துவருவதால், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவின் அளவு குறைந்து வருவதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது.  தற்போது, பயிர்கள் பயிரிடும் பரப்பு 20 சதவீதம் அழிவைச் சந்தித்துள்ளது. இருபதே ஆண்டுகளில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை அழுத்தமாக கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். காடுகள், பவளப்பாறைகள், சதுப்புநிலக்காடுகள், புல்வெளி நிலங்கள் ஆகியவை அழிவையும் ஐ.நா அறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. உணவுச்சங்கிலியில் எவையும் விதிவிலக்கானவை அல்ல. பறவைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்கின்றன. சதுப்புநிலக் காடுகள் நீரினை சுத்திகரிக்கின்றன.  உலகிலுள்ள 91 நாடுகள் இணைந்து செய்த ஆராய்ச்சி அறிக்கைகள் மூலம் இயற்கைச்சூழலின் பாதிப்புகள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. அழிந்த பரப்பில் 63 சதவீத தாவரங்கள், 11 சதவீத பறவைகள், 5% சதவீத மீன்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உள்ளடங்கும்.  இதில்

பிக் அப் ட்ரக்குகளின் வரலாறு

படம்
Ford F150 பிக் அப் ட்ரக்குகளின் வரலாறு டிடி மாடல் ட்ரக்குகளின் விலை(1917இல்)  600 டாலர்களாக இருந்தது. 1917-1927 காலகட்டத்தில் விற்ற மாடல் டி ட்ரக்குகளின் எண்ணிக்கை 1,60,000. 1925 ஆம் ஆண்டு ஏலம்போன ஃபோர்டு மாடல் டிடி ஹக்ஸ்டர் காரின் விலை 24 ஆயிரத்து 200 டாலர்கள். அதிகவிலை கொண்டு பிக் அப் ட்ரக் எது தெரியுமா? போர்டு 450 சூப்பர் டூட்டி - 86 ஆயிரத்து 505 டாலர்கள் மாடல் டி ட்ரக்கின் குதிரைத்திறன் 40 எஃப் 150 ட்ரக்கின் ஹார்ஸ்பவர் 450 2017 ஆம் ஆண்டு எஸ்யூவி மற்றும் ட்ரக்குகளின் சந்தை சதவீதம் 63% விரைவில் அமெரிக்காவில் ரிலீசாகவிருக்கும் கையூன் பிக்மன் சீன ட்ரக்கின் வேகம் மணிக்கு 28 கி.மீ. நன்றி: க்வார்ட்ஸ் 

பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்னாகும்?

படம்
பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்ன நடக்கும்? பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது உறுதி. இது தாமதமானாலும் நடக்கப்போகிறது. தனிநாடாக நிற்கும் வணிகம் உட்பட அனைத்தையும் இங்கிலாந்து அரசு தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தெரசா மே பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீதம் குறைவாகவே இருக்கும். ஐரோப்பிய யூனியனிலிருந்து கிடைத்து வந்த பொருட்கள் அனைத்தும் இனி கிடைக்காது. இதன் அர்த்தம், இங்கிலாந்து இனி சுங்கவரி அதிகமாக கட்டவேண்டி இருக்கும். இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து 30 சதவீத உணவுப்பொருட்கள் இங்கிலாந்துக்கு வருகின்றன. நன்றி: தி கார்டியன்.காம்

லவ் இன்ஃபினிட்டி: காதல் இருக்கா? இல்லையா?

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட், பாக்ஸ்டர் எனக்கு ரூபா, மகாதேவி இவங்க மேல் கூட பெரிய கிரேஸ் கிடையாது. ஆனால் மைதிலி வேற லெவல். அவ அதிகம் பேசவில்லை என்றால் கூட ஏதோ ஒன்று அவளை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறது. பெண்கள்கிட்ட நட்பாகறதுக்கு பெரிய விஷயம் ஒண்ணும் வேணாம். அவங்க சேஃபா இருக்கிறாங்க என்பதை நீங்க உறுதிபண்ணனும். அப்புறம் அவங்க பேசற முட்டாள்தனமான பேச்சை புன்னகை முகத்தோடு கேட்கணும். நிச்சயம் தீர்வு சொல்லவே கூடாது. ஏன்னா கௌன்சிலிங் நம்மோட தொழில் கிடையாது. So Letss Enjoy. நீ இப்போ Kangayam  பஸ் ஸ்டாண்ட் போறதில்லையா? அரச்சலூர் போனயாம். பசங்க தகவல் சொன்னாங்க. உன்கூட கண்டிப்பாக பேசியாகணும். இன்னும் எத்தனை நாளைக்கு Lr எழுதறது. பயங்கர கடுப்பா போச்சு எனக்கு. இனிமேல் Lr எழுதறதில்லைன்னு நினைச்சேன். ஆனா, முடியலை. எப்படி மாற்றிவிட்டாய் என்னை. வசியம் செய்த வசிய்க்காரி, வசீகரி(வசீகராவின் பெண்பால்) நீ. ஆனந்த விகடன் கிடைக்கல. இந்த வருஷம் எப்படியும் பத்திரிகையாளன் ஆயிடுவேன். மோகனா, மகாதேவி கிட்ட மட்டும் பேசறேன்னு சொல்ற. உன் Friends எல்லாம் பேச

லவ் இன்ஃபினிட்டி: காதல் இல்லைனா நட்பு தொடரட்டுமே!

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ரிஷ்வான், மீகா திங்கட்கிழமை காலேஜ் முடிஞ்சு நானும் முகமதுவும் நேராக பஸ்ஸைப் பிடித்தோம். எந்த இலக்கும் கிடையாது. ஈரோடு போய் நேராக படத்துக்குப் போய்விட்டோம். படத்தோட பேரு சொன்னா உனக்கே பிடிக்கும். ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! படம் Super. கதை இதுதான். இப்போ நான் உன்னை Love பண்ணினேன். நீ பண்ணலை. அப்பவும் நான் உன்கூட பேசினேன்(ஓகே, கொஞ்ச நாள் கழித்துத்தான்) பழகினேன். முன்பு எவ்வளவு அன்பு உன்மேல் வைத்திருந்தேனோ அதைவிட அதிகமாத்தான் இப்போ இருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். இதுதான் உண்மையான அன்பு. நான் உன்கிட்ட பேசாம பழகாம இருந்தேன் என்றால் இத்தனை நாள் உன்னை Love  பண்ணியதே சும்மா என்றாகிவிடும். எதையும் எதிர்பார்க்காம நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன்னை நேசித்து கொண்டிருக்கிறேன் நான். இனி Story க்கு வருவோம். மேலே சொன்னது எக்சாம்பிள். ஷாம், ஸ்னேகாவை Love பண்ணுவான். ஷாமின் அத்தைப் பொண்ணு ஸ்னேகா. ஷாமோட பர்த்டேவுக்கு ஸ்னேகாகிட்ட நான் உன்னை Love பண்றேன்னு சொல்றாரு. ஆனா அவ Affection  வேற Love Feeling இல்லை என்று

வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு

படம்
Scroll.in பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா? வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக். அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ள

பசுமை வீடுகள் கட்டலாம் வாங்க!

படம்
குங்குமம்\ ஷாலினி நியூட்டன் பரவும் பசுமைக் கட்டிடங்கள் பிஜூ பாஸ்கர்   இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பறவைகள், தேனீக்கள் தங்களுக்கான வீட்டை கட்டிக்கொள்ளும்போது மனிதர்களால் கட்ட முடியாதா? தற்போது இந்தியா முழுக்க குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வீடுகளை கட்டிக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பிஜூ பாஸ்கர், அருகில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தனது வீட்டை 45 நாட்களில் கட்டியுள்ளார். செலவு வெறும் 3.25 லட்சம் மட்டுமே.  “இயற்கைப் பொருட்கள் என்றாலும் பல ஆண்டுகள் உறுதியாக இருக்கும். நாங்கள் பிறரின் வீடுகளைக் கட்டுவதற்குக் காசு வாங்குவதில்லை. பதிலாக உணவுகளை அல்லது பொருட்களைக் கேட்டு வாங்கிக்கொள்வோம் ” என்றார் பாஸ்கர். கிராமத்தினருக்கு தன்னல்(Thannal) எனும் அமைப்பு மூலமாக வீடுகளைக் கட்டித்தந்து வருகிறார். கிடைக்கும் இடத்தில் விறுவிறுவென குறைந்த ஆட்களைக் கொண்டே வேலை பார்த்து பசுமை வீடுகளை எழுப்பிவிடுவது தன்னல் குழுவின் சாமர்த்தியம்.

ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கிறது

படம்
Scroll.in நேர்காணல் பத்திரிகையாளர் அனடோல் லீவன் தமிழில்: ச.அன்பரசு இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது இறுதியான தீர்வைத் தருமா? ராணுவ நடவடிக்கை சிறிய அளவில் தீர்வுகளைத் தரலாம். பாகிஸ்தானுக்கு பெரிய அளவு முதலீடு கிடையாது. அந்நாட்டிற்கு சீனா, சவுதி அரேபியா ஆகியோர் உதவுகின்றனர். ராணுவத்தாக்குதல் தொடங்கினால் இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடப்பது நிச்சயம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வதே இதற்கு தீர்வு. இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?  இந்தியா அமெரிக்காவை அணுகி, பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகளை அளிக்கலாம். ஆப்கன் பிரச்னையில் ட்ரம்ப் அரசுக்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியா சொன்னவுடன் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து விடாது. மோடி பேச்சுவார்த்தைக்கான நேரம் கடந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே? மோடி பேசுவது அனைத்தும் வெற்றுப் பேச்சு. இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுத்தால் அது பேரழிவாகவே இருக்கும். போரின் பின்னணியில் உருவாகும் தீவிரவாதம், அகதிகள் பிரச்னைகளை சமாளிப்பது சாதாரண காரியம் அல்ல. தாமதமாகவேனு

பி.டெக் வெப்சீரிஸ் எப்படி? - தருண் பாஸ்கரின் திரைக்கதை அசத்தல்

படம்
huffingtonpost பி.டெக் ஜீ5 தயாரிப்பு இயக்கம்: உபேந்திர வர்மா கதை, திரைக்கதை: தருண் பாஸ்கர்   Abhay Bethaganti , Kaushik Ghantasala, Madhulatha Reddy, Vishnu Mohan Chaitanya Garikipati, Meraj Ahmed and Arjun Chukkala பெல்லி சூப்புலு படத்திற்கு முன்பு எழுதிய கதை இது என தருண் பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் சொல்லி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும் பேட்டி தட்டிவிட்டார். அதனால் இதில் முக்கிய கேரக்டர்கள் தடுமாறினாலும் அந்த பிரச்னை இதனால்தான் என புரிந்து கொள்ள முடியும். பெல்லி சூப்புலு படம் எடுத்து தேசிய விருது வென்ற இயக்குநரின் வெப் சீரிஸ் என்று விரக்தி அடையக்கூடாது என்பது விமர்சனத்திற்கு முன்பே நாங்கள் கூறும் அட்வைஸ். மூன்று இளைஞர்கள் தங்கள் கனவைத் துரத்துகிறார்கள். அதில் அவர்கள் ஜெயித்தார்களா? இல்லையா என்பதே கதை. ஹரி, விக்ரம், அக்தர் என மூன்று இளைஞர்கள். இதில் மூவருக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் என்பதே. இரண்டாவது ஒற்றுமை மூவருக்கும் படிப்பைத் தொடர அதுதொடர்பான வேலைக்குச் செல்ல அணுவளவும் ஆர்வம் கிடையாது. ஹரி, காலேஜூக்கு அட்டன்டன்ஸ் கொடுத்துவிட்டு குழந்தைக

கருவூல உண்டியல் பத்திரம் தெரியுமா?

படம்
Quora பொருளாதாரம் அறிவோம் 2 கருவூல உண்டியல் இந்திய அரசு வெளியிடும் டி.பில்கள் அல்லது கருவூல உண்டியல் என்பவை, குறுகிய கால கடன் உபகரணமாகும். இவற்றை 91, 182,364 என மூன்று காலகட்டங்களில் இப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை ஜீரோ வட்டிவிகிதப் பத்திரங்கள் ஆகும். 91 நாட்கள் கொண்ட ரூ.100 மதிப்பிலான பத்திரம் ரூ.98.20 க்கு விற்கப்படும். கழிவு என்பது ரூ.1.80 வழங்கப்பட்டாலும் மதிப்பு என்பது ரூ.100க்குத்தான். வாரம்தோறும் புதன்கிழமை, கருவூல உண்டியல் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் ஏலமிடப்படுகின்றன. 91 நாட்கள் காலம் கொண்ட கருவூல உண்டியல் பத்திரங்கள் வாரம்தோறும் புதன்கிழமையும், 182, 364 நாட்கள் காலம் கொண்ட பத்திரங்கள் ஒருவாரம் விட்டு புதன்கிழமை ஏலத்திற்கு ஏற்கப்படுகின்றன. பத்திரங்களுக்கான பணம் அனுப்பீடு தொடர்பான வேலைகள் ஏலம் முடிந்தபின்னர் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஏலம் தொடர்பான செய்திகளை ரிசர்வ் வங்கி தன் பத்திரிக்கை வெளியீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கிறது. சரஸ் நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி

லவ் இன்ஃபினிட்டி: எதிர்த்துப் பேசினா தப்பா?

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: மீகா, வில்லி ஜான்சன் எனக்கு தோல்வி பயம்ங்கிறது புதுசு கிடையாது. ஆனால் நடக்கிற சமயம் எனக்கு பயங்கிற டென்ஷன் ஆகும். விரும்பியது கிடைக்கும்போது கரும்பாக இனிக்கின்ற மனமே நினைத்தது நடக்காமல் போனால் நெஞ்சம் கொதிப்பது ஏன்? சொல் மனமே உனக்கு Phone பண்ணலாம்னு நினைத்தேன். நீதான் ஆத்தா வீட்டில் இருக்கிறாய். எப்படி பேச முடியும்னு நினைத்து பண்ணலை. ஏன் அப்பாகிட்ட சண்டை போடற. சண்டை போட்டா. உன் பிரச்னை தீர்ந்திடுமா. (What is the problem? I don't Know) என்னைப் பாரு. எங்கப்பா என்னை கண்டபடி திட்டினாலும் நான் பேசாம அமைதியா இருந்துருவேன். ஏன்னா அவங்க கிட்டதான் பணம் வாங்கணும். நம்ம அப்பாதானே திட்டறாங்க. இதுக்குப் போயி எதுக்கு உன் மனசை கஷ்டப்படுத்திக்கிறே? நான் தனியா இருக்கும்போது நினைப்பேன். என்னடா நாம் இந்த 19 வது வயசுல இந்தளவு கஷ்டத்தை அனுபவிக்கிறோமேன்னு. ஆனால் எந்தவொரு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னாடிதான் இனிப்பான நிகழ்ச்சிகள் நடக்கும். எக்சாம்பிளுக்கு என்னையே எடுத்துக்க. என்னைப் பாராட்டுகிற வாயாலேயே திட்டும் வாங்குவேன். ஆ

சாக்லெட்டுக்கு விருது வென்ற கோவை இளைஞர்

படம்
லிவ்மின்ட் கோவையைச் சேர்ந்த அருண் விஸ்வநாதன் இத்தாலியில் நடைபெற்ற சாக்லெட் போட்டியில் வெற்றிபெற்று சித்ரம் கிராஃப்ட்ஸ் சாக்லெட் கம்பெனியை பிரபலப்படுத்தி உள்ளார். உலகளவிலான கம்பெனிகள் கலந்துகொள்ளும் போட்டியில் பங்கேற்ற அருண், மாம்பழ ஃப்ளேவர் சாக்லெட்டுக்காக வெண்கலப்பத்தகம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியரின் நிறுவனம் ஒன்று சாக்லெட்ட்டிற்கான விருது பெறும் முதன்முதல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பரில் சாக்லெட் போட்டியில் இறுதிக்குள் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்தவர், அபாரமான வெற்றி பெற்று உலக அரங்கில் இந்திய சாக்லெட்டுகளுக்கான சந்தையையும் திறந்துள்ளார். அருண், கார்னெல் பல்கலையில் உணவு அறிவியல் பாடம் கற்றவர். எட்டுப்பேர் கொண்ட குழு, சித்திரம் சாக்லெட் நிறுவனத்தை நடத்துகிறது. சாக்லெட்டின் அடிப்படையான கோகோவை தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள சில விவசாயிகளிடம் அருண் வாங்கிவருகிறார். கோவையில் உள்ள கஃபேயின் பின்புறம் சித்திரம் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இவர் சான்றிதழ் பெற்ற சாக்லெட் டேஸ்டரும் கூடத்தான். ”சாக்லெட் கம்பெனியின் பெயர், நிறம்

எச்சரிக்கை பலகைகளில் சிவப்பு ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? எச்சரிக்கைப் பலகைகள் ஏன் சிவப்பு நிறத்திலேயே இருக்கின்றன? உயிரியல் அடிப்படையில் சிவப்பு என்பதை நெருப்பு, அபாயம் என நம் நினைவுகளில் பதிந்து வைத்திருக்கிறோம். எனவே சிவப்பு நிறம் என்றால் சடக்கென ஆதிநினைவான நெருப்பின் நிறத்திலிருந்து நிகழுக்கு மீண்டு வண்டி பிரேக்கை இழுத்துப்பிடித்து நிற்போம். அதேசமயம் சில நாடுகளில் நீலநிற விளக்கு போன்ற பரிசோதனைகளையும் செய்கிறார்கள். இயற்பியல் காரணத்தைப்  பார்த்தால், சிவப்பு பனியோ மழையோ அனைத்து கண்டிஷன்களிலும் பளிச்சென அனைவரையும் ரீச்சாகும். அதேநேரம் சீனாவில் மஞ்சள் பின்னணியில் கறுப்பு கோடுகள் பயன்படுகின்றன.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

தாவரங்களுக்கு இறப்பு உண்டா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? தாவரங்கள் வயதானால் இறந்துவிடுவது உண்மையா? இயற்கையில் பிறப்பும் இறப்பும் இயல்பானது. தாவரம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது உண்டு. ஆனால் சில தாவரங்கள் இறப்பை மிக மெதுவாக ஏற்கின்றன. அப்போது அவை வாழ்கின்றன என்றுதானே அர்த்தம். இவை அனைத்திற்கும் நமது வளர்சிதை மாற்றவேகமே அடிப்படை. பெரும்பாலான தாவரங்கள் புதிய கன்றுகளை செடியை உருவாக்கிவிட்டு இறந்துவிடுகின்றன. ஆனால் சில செடிகள் எத்தகைய சிக்கல்களையும் எதிர்கொண்டு மனிதர்களாக தொந்தரவு செய்யும்வரை சாசுவதமாக வாழும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

லவ் இன்ஃபினிட்டி: தங்கத்திற்கு வைரம் கிஃப்ட் பண்ணுவேன்

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், விகாசினி நட்பதிகாரம் 2 மகாதேவி கிட்ட general Knowledge papers கொடுத்தேன். அது கேட்டது. அது முடிச்சவுடனே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன். நீ அதைக் கேட்டு வாங்கிக்கொள். இன்னிக்கு உனக்கு தலைவலியா? நலம் விசாரிக்க கூட என்னால் முடியலை. உடம்பைப் பார்த்துக்கொள். அடிக்கடி இறைவனை நினைக்கப் பழகு. எல்லாப் பிரச்னைகளையும் அவர்கிட்ட விட்டுடு. அப்புறம் நான் ஒண்ணு கேட்பேன். கொடுப்பியா? Prescription நோட்டு ஒண்ணு வேணும். கவிதையெல்லாம் எழுதி வைக்கிறதுக்கு. டைரி பத்த மாட்டேங்குது. நீ வெச்சிருந்தா கொடு! அப்புறம் தபூ சங்கர் கவிதை படிச்சுப்பாரு. உன்னை தொந்தரவு பண்ணின மாதிரி இருந்தால் மன்னித்துவிடு. உன்னை விட்டால் வேறு யாருக்கு நான் Lr எழுத முடியும்? இப்படி பக்கம் பக்கமாக எழுதியதை நீதான் அங்கீகரித்து பத்திரப்படுத்துகிறாய்! You're Great Friend in My life. கடைசியா நம்ம கவி Marriage, உன் Marriage க்கு எல்லாம் நான் பெரிசா Gift பண்ணனும். அப்படின்னு மனசில் ஆசை. அதுக்குள்ள பெரிய ஆளா வந்துட்டா பெரிய அளவில் Gift  பண்ணுவேன். கவிகிட

சிலிகாவை சாப்பிட்டால் என்னாகும்?

படம்
சிலிகா பாக்கெட்டுகள் (க்யூரியாசிட்டி) மாத்திரைகள் தன்மை மாறிவிடாமல் இருக்க அதில் சில வேதிப்பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை போட்டு இருப்பார்கள்.அதுதான் சிலிகா. இந்த சிலிகா பாக்கெட்டுகளை பீட்சாவுக்கு கொடுக்கும் மிளகு  போல நினைத்து தின்றால் என்னாகும்? தொண்டை வறண்டுவிடும். கண்களில் ஈரப்பதம் குறையும். வயிற்றில் கல்யாண பாத்திர வாடகைக் கடை போல சத்தங்கள் எழும். தன் எடையை விட நாற்பது மடங்கு அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது சிலிகா. பாக்கெட்டில் இருப்பது சிலிகா டை ஆக்சைடு. அதில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. மாத்திரைகளின் ஈரத்தை குறைத்து அதன் தன்மை மாறாமல் வைத்திருக்கும் சிலிகாவை திரும்ப பயன்படுத்த 300 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சூடுபடுத்தவேண்டும்.  நம் உடலிலுள்ள அத்தனை நீரையும் சிலிகா உறிஞ்ச 58 ஆயிரம் சிலிகா பாக்கெட்டுகளை பயன்படுத்த வேண்டும். நன்றி: க்யூரியாசிட்டி.