இடுகைகள்

பத்திரிகையாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகையாளர்களை அடக்கி ஒடுக்கும் சீன அரசு! விசுவாசமே முக்கியம், நேர்மை அல்ல!

படம்
  அடிமை பத்திரிகையாளர்களை உருவாக்கும் சீனா திருத்தப்படும் ஊடகங்கள் – சீனாவில் ஊடகங்களுக்கான புதிய விதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சீன அதிபர் ஜின்பிங், அரசின் நாளிதழ், டிவி சேனல்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். செய்திகள் உண்மையான தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின்படி இருக்கவேண்டும் என்று கூறினார். கூடவே, பத்திரிகையாளர்கள் கம்யூனிச கட்சியை நேசித்து அதை காக்கவேண்டும் என மறக்காமல் கூறினார். அவர் கூறிய விதிகளுக்கும், உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும் முரண்பாடுகள் வந்தால் என்ன செய்வது என்று ஜின்பிங் கூறவில்லை. ஆனால், செயல்பாட்டில் அதை காட்டினார். கடந்த ஜூன் 30 அன்று, பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி ஆப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. அதில், மக்களின் கருத்துகளை எப்படி திருத்தி வழிகாட்டுவது என்பதற்கான செயல்முறை இருந்தது. ஏறத்தாழ அந்த ஆப், எப்படி கம்யூனிச கட்சிக்கு ஆதரவான முறையில் பத்திரிகையாளர்கள் செயல்படுவது என்பதைப் பற்றியதுதான். ஆப், வழிகாட்டு நெறிமுறைகளை சற்று மென்மையாக கூறினாலும், பத்திரிகையாளர் நேர்மையாக உண்மையாக நடந்தால் விளைவுகள் கடுமையாகவே இருந்தன. ஏனெனில் ஏராளமான

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் அம்மாவிற்கு மகனை கண

பத்திரிகையாளர்களுக்கான கொள்கை கையேடு - டியர் ரிப்போர்டர் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் தமிழ் நாளிதழ் குழுமத்தில், சிறு வார இதழ் ஒன்றில் வேலை செய்யும்போது, பத்திரிகையாளர்களுக்கான கொள்கை, கோட்பாடு பற்றி எழுத நினைத்தேன். ஆனால் வேலை நெருக்கடி காரணமாக,  தமிழாக்க நூல் செய்யவேண்டுமென நினைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போது  நேரம் கிடைக்க, டியர் ரிப்போர்டர் எனும்  சிறுநூல் எழுதி தொகுத்து தயாராகிவிட்டது.  டியர் ரிப்போர்டர் நூலில் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய  அடிப்படை கொள்கை என்ன, சவாலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது, செய்தியை எழுதும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றிய கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.  அச்சு, காட்சி ஊடகம் என இரண்டிற்குமான அடிப்படைக் கொள்கைகள் ஒன்றுதான். இதில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் கடைபிடிக்கும் கொள்கைகள் சற்று மாறுபடக்கூடியவை. ஆனால், அதைப்பற்றி பொதுவான பரப்பில் ஒருவர் எதையும் கூறிவிட முடியாது. ஆனால் பத்திரிகையாளர் எப்படி இருக்கவேண்டும், அரசியல், பொருளாதார, சமூக பரப்பில் நடைபெறும் விஷயங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதை நாம் கூறமுடியும். அதைத்தான்

வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

படம்
  இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம். ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.   பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அம

ஹாரி அரச குடும்பத்தை விட்டு விலகியதைப்பற்றி டயானா கவலைப்பட்டிருப்பார்! - டினா ப்ரௌன், பத்திரிகையாளர்

படம்
               டினா ப்ரௌன் ஆங்கில அமெரிக்க பத்திரிகையாளர் டினா, டாட்லர், வேனிடி ஃபேர், தி நியூயார்க்கர், நியூஸ்வீக், தி டெய்லி பீஸ்ட் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டவர். இவருக்கு வயது 68 ஆகிறது. இவரது கணவர், புகழ்பெற்ற பத்திரிகையாளரான சர் ஹெரால்ட் ஈவன்ஸ்.  2007ஆம் ஆண்டு தி டயானா க்ரானிக்கல்ஸ் என்ற நூலை எழுதினார். தற்போது அதன் தொடர்ச்சியாக தி பேலஸ் பேப்பர் என்ற நூலை எழுதியுள்ளார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த டயானா இறந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவுகிறது. அவரிடம் பேசினோம். இப்போது டயானா உயிரோடு இருந்தால் அவர் எந்த மாதிரி செயல்பட்டிருப்பார்? அவர் அரசகுடும்பத்தில் இணைந்துதான் இருப்பார் என நினைக்கிறேன். ஹாரி, மேகன் போல பிரிந்திருக்க மாட்டார். அரச குடும்பத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருப்பார். பிரிந்துசெல்லாமல் ஒன்றாக இருக்க முயல்வார். தனது அடையாளத்தை கைவிட்டு கென்சிங்கன் மாளிகையை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். டயானாவுக்கு அவரது மருமகள் கேட்டிற்கும் நல்ல உறவு இருந்திருக்கும் என பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் இதில் நான் முரண்படுகிறேன். அவர் பிறரோடு போட்டிபோடு

எழுத்தாளரை சிறைப்படுத்திய சீனா!

படம்
எழுத்தாளரும், இணைய விமர்சகருமான யாங் ஹெங்ஜூன் என்பவரை. சீன அரசு சிறையில் ஆறு மாதமாக அடைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று குவாங்ஜூ விமானநிலையத்தில் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டார். யாங் ஹெங்ஜூன் தன் குடும்பத்துடன் ஷாங்காய் செல்லும் முயற்சியில் அங்கு இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய யாங், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலையில் வருகைதரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்வதை தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தாக உளவுத்துறை சந்தேகப்பட்டது. மேலும் யாங் கைது செய்யப்படுவது முதல்முறை கிடையாது. 2011 ஆம் ஆண்டு கூட சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விசாரிக்கப்படும்போது அவரின் நடவடிக்கைகளை சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக யாங் இருந்து வருகிறார். 1980 களில் சீனா வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அரசு கைதுக்கு கண்டனம் தெரிவித்து உதவிக்கு வரவில்லை. இவரின் கைது குறித்து அரசியல் எழுத்தாளர் கிரிஸ் உஹிமன் போன்றவர்தான் இணையத்தில் இப்பிரச்னை

பத்திரிகையாளர்களை மிரட்டும் அரசியல் அதிகாரம்!

படம்
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தி ஓப்பன் பத்திரிகையில் அரசியல் பகுதிக்கு ஆசிரியராக இருந்த ஹர்தோஸ் சிங் பால் வேலையிலிருந்து விலக்கப்பட்டார். காரணம், அவர் எழுதிய எழுத்துக்களால் கோபமான அரசியல்வாதிகள்தான். தற்போது பால், தி கேரவன் பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். ஆனால் தன்னை வேலையை விட்டு உடனடியாக விலக்கியது தவறு என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதன்படி ஆறுமாத சம்பளத்தை வழங்கும்படி பத்திரிகையாளர் சட்டத்தின்படி கேட்டுள்ளார். இதன்படி ரூ. 10 லட்சரூபாயைப் பெற்றுள்ளார். ஒப்பந்த முறையில் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர்கள் வேலைக்கு எடுப்பதைக் குறித்தும் பேசுகிறார். இச்சட்டம் பற்றிய உங்களது போராட்டத்தைக் கூறுங்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களைக் காக்கும் சட்டம்தான் இது. ஆனால் டிவி, இணையத்தில் பணியாற்றுபவர்கள் இச்சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள். ஒப்பந்த முறையில் பத்திரிகையில் பணியாற்றும், ஊழியர்களை மேலாண்மை செய்பவர்களை காப்பதற்கான அரசு சட்டமே வொர்க்கிங் ஜர்னலிஸ்ட் ஆக்ட். ஐந்து ஆண்டுகளாக நீங்கள் நடத்திய

ஹிட்லரைப் பற்றி எழுதி உலகை எச்சரித்த முதல் பத்திரிகையாளர்!

படம்
டோரத்தி தாம்சன் டோரத்திக்கு நிறைய எதிரிகள் உண்டு. ஆனால் அவரே ஹிட்லருக்கும் முக்கியமான எதிரியாக மாறும் சூழலும் வந்தது. ரேடியோ மற்றும் நாளிதழ் வழியாக அமெரிக்கர்களுக்கு ஹிட்லரின் பாசிச வேகத்தை உணர்த்திய பத்திரிகையாளர் இவரே. 1893  ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று பிறந்தவர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர். குடும்பமே தீவிரமான மதாபிமானிகள். தாம்சனுக்கு ஏழுவயது இருக்கும்போது, இவரின் தாய் இறந்துபோனார். மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்ள அவரது தந்தை இரண்டாவது மணத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் வரும் பெண் எப்படி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்க முடியும்? பிரச்னை தலைதூக்க தாம்சன் தன் அத்தைகளின் வீடுகளில் வளர்ந்தார். குடும்ப துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. படிப்பில் அத்தனை வேகத்தையும் காட்டி 1914 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். பின் பெண்களுக்கான உரிமைகளுக்காக சில ஆண்டுகள் போராடினார். போராட்டம், உரிமை, பெண்களைக் குறித்த அக்கறை எல்லாம் சரிதான். ஆனால் சோறு முக்கியம்தானே? நியூயார்க், சின்சினாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினாலும் காசு கிடைக்கவில்லை. வாழ்வதே போராட்டமாக மாறியது. தன்

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் படுகொலை!

படம்
ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை! காபூலில் பத்திரிகையாளர் சமூக வலைத்தளத்தில் அச்சுறுத்தப்பட்டார். அதற்கு பயப்படாமல் செயல்பட்டவரை தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்தனர். கடந்த சனிக்கிழமை காலையில் பொது இடத்தில் மேனா மங்கல் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அங்குள்ள பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது. பொதுஇடத்தில் அரசியல் விமர்சகராக செயல்பட்ட பத்திரிகையாளரை சுட்டுக்கொன்றுள்ளது நீதி அமைப்புக்கு விடப்பட்ட சவால். காவல்துறை என்ன செய்கிறது என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டியது அவசியம் என்கிறார் அரசியல் விமர்சகரான மரியம் வர்தாக். கொல்லப்படுவதற்கு முன்பாகவே தீவிரவாத அமைப்புகள் மேனாவைக் கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீஸ் பின்னர் இவர்களை கைது செய்தாலும், மேனாவின் குடும்பம் பணம் கொடுத்து அவரை மீட்டுள்ள செய்தி ஊடகங்களுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக பெண்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மத அமைப்புகளால் கொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேனா மங்