வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

 











இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம்.

ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.  

பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அமைந்துவிடக்கூடாது.   

மத வன்முறை சம்பவங்களில் வன்முறையைத் தொடங்கிய தரப்பு எது என தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். மதங்களில் மதவெறி கொண்ட அடிப்படைவாதிகள் குறைவு என்பதால் அவர்களின் மதம் பற்றி குறிப்பிடும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

பாதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சிறுபான்மையினர் தரப்பு பற்றியும் சார்நிலை எடுத்து எழுதக்கூடாது. நிலையைத் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் பத்திரிகையாளரின் எழுத்து இருக்கவேண்டும். செய்தியில் அவரின் தனிப்பட்ட கருத்துவெளியீடு இருக்க கூடாது.

நன்றி

tenor.com

ராய்ட்டர் தாம்சன் பவுண்டேஷன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்