மனதில் கிளர்ந்தெழும் ஆவேச உள்ளுணர்வு

 






உளவியல் ரீதியான கோட்பாடுகள், ஒருவரின் ஆக்ரோஷமான குலைந்த மனநிலையை வேண்டுமானால் விளக்கலாம். ஆனால் அவரின் குற்றங்களை விளக்காது. இந்த வகையில் உளவியல் கோட்பாடுகளுக்கு வரம்புகள் உண்டு. குற்றம் செய்தவர்கள் அனைரையும் மனநிலை பிறழ்ந்தவர்கள், குறைபாடு கொண்டுவர்கள் என கூறிவிட முடியாது என உளவியலாளர் சீகல் கூறினார். இவரது கருத்து உண்மையா என்றால் உண்மைதான். துறை  சார்ந்து ஆராய்ச்சிகள் அதிகரிக்கும்போது வரம்புகள் உடையலாம்.

ஒருவர் தனியாக அமர்ந்து உளவியல் கோட்பாடுகளை உருவாக்கி அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்துகொண்டிருந்தால், அதில் குற்றவியல் சார்ந்த அம்சங்கள் குறைவாகவே இருக்கும். இதற்காக உளவியல் கோட்பாடுகளை ஒருவர் மேலும் துல்லியமாக்க மெனக்கெடலாம். குற்றம் நடைபெறுகிறது என்றால் அதற்கான உயிரியல், சூழல், உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முடிந்தால் உளவியலின் பங்கு குற்றவியலில் உள்ளது என நம்பலாம். சூழல் சார்ந்த அம்சங்கள் என்றால் குற்றம் பற்றிய பொதுமக்களின் கருத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வழக்குரைஞர்களின் வாதம் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வகையில் குற்றத்தைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்ள உளவியல் விசாரணை பயன்படும்.

 ஒருவர் பிறரது பொருட்களை திருடுகிறார் என்றால் அதுவும் குற்றம்தான். அதற்கு குறிப்பிட்ட கால அளவு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டால் தண்டனை கூடிக்கொண்டே செல்லும். ஆனால் பிற மனிதரைத் தாக்குவது, சொத்துகளை அழிப்பது, பாலியல் ரீதியாக தாக்குவது ஆகியவற்றில் விதிக்கப்படும் தண்டனை கூடுதலாக இருக்கும். சொத்துகளை அழிப்பது, பணத்தை திருடுவது என்ற குற்றத்தில் தண்டனை சற்று குறைவுதான். கொலை, வல்லுறவு ஆகிய விவகாரத்தில் ஒருவர் ஆயுள் முழுக்க சிறையில் இருப்பது, அல்லது மரணம் என இரண்டே வாய்ப்புகள்தான் உண்டு. சமூகத்தில் கொலை, வல்லுறவு ஆகியவற்றை சட்டம் சற்று தீவிரமாக எடுத்துக்கொள்வதுதான் இதற்கு முக்கியமான காரணம்.

வன்முறை குற்றங்கள்

ஆவேசம், வன்முறை, குற்றம் ஆகியவை பொதுவாக மாற்றமின்றி பல்வேறு நூல்களில் இணைந்தே கூறப்படுகிறது. குற்றவியலில் இந்த பெரிய மாற்றங்களின்றி இடம்பெறுகின்றன.

ஆவேசம் என்பது பிறரை தாக்குவதற்கு கொல்வதற்கு தேவையான உள்நோக்கத்தைக் கொண்டது. இந்த வகையில் ஒருவர் பிறரை உடல் ரீதியாக அடித்து உதைத்து காயப்படுத்தலாம். ஒருவரைத் தாக்கி நேரடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அணுகுமுறையை சட்டம் குற்றமாக எடுத்துக்கொள்கிறது. குற்றம், தண்டனை பற்றி ஆய்வாளர்கள் மெகார்கி, சியான் ஆகியோர் விவரித்துள்ளார்.

வன்முறையின் வரலாறு பற்றி பல்வேறு உளவியல் கோட்பாடுகள் உள்ளன. வன்முறை பற்றி பேசும்போது உளவில் சார்ந்த பல்வேறு அம்சங்கள் ஒன்றோடொன்று வந்து கலக்கும்.  இதை இதுபற்றிய ஆய்வில் தவிர்க்கவே முடியாது. ஆவேசம், வன்முறையான இயல்புகள் பற்றி பேசும்போது, விவாதிக்கும்போது உளவியல் கோட்பாடுகள் அதன் மேல் எளிதாக பொருந்தும் வகையில்  உள்ளன.

மனிதர்களின் வாழ்க்கையை இரண்டு விஷயங்கள் வடிவமைக்கின்றன. வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கான ஆசை மற்றும்  இறப்பு என உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். வாழ்க்கைக்கான ஆசை, இறப்பிற்கான  பயம் என இரண்டுமே ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாத செயல்களை செய்ய வைக்கிறது. ஆவேசம் என்பது ஒருவகையில் வாழ்க்கையை பாதுகாக்கும் பாதுகாப்பு வால்வு போல ஆற்றலை வெளியிட்டு  உயிரைக் காப்பாற்றுகிறது. ஆவேசம் கொள்வதில் தவறில்லை. ஆனால் அந்த உணர்ச்சியும் செயல்பாடும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால், அழிவை ஏற்படுத்தாதபடி இருந்தால் பிரச்னையில்லை. இந்தவகையில் விளையாட்டை கோபத்தை, ஆவேசத்தை வெளிப்படுத்தும் வடிவம் என்று கொள்ளலாம். இந்த ஆவேசத்தை, கோபத்தை ஒருவர் வெளிப்படுத்தாதபோது அவர் கொலை அல்லது தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புகள் அதிகம்.

 

 படம் - பின்டிரெஸ்ட் 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்